பாக்யா வீட்டுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர்.. அடுத்து கதை இப்படித்தானா? ராதிகா தான் ஹைலைட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜனவரி 20ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. இதில் பாக்கியா வீட்டிற்கு பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினரும் வந்து மகா சங்கமம் நடத்த இருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோரின் கடந்த சீசனில் பாக்யாவின் குடும்பத்தினராக வந்த உறவினர்கள் இப்போது ராதிகாவின் குடும்பத்தினராக வந்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் பாக்கியாவிற்க்கு பக்கத்து வீட்டினர்கள் அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர். அதுபோல இதுவரைக்கும் இல்லாத வகையில் ஜெனி செழியனுக்காக தன்னுடைய அப்பா அம்மாவை எதிர்த்து பேசி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராமமூர்த்தி, இனியா, கோபி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோர்ட்டுக்கு போனவங்க இன்னும் வரலையே என்று காத்துக் கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் கோபி போனா ஒரு போன் கூட பண்ண மாட்டாங்களா? என்று புலம்பி கொண்டிருக்க அதற்கு ராமமூர்த்தி பாக்கியா போன் பண்ணுனா வீட்டுக்கு வந்துட்டு இருக்காங்களான்னு சொல்கிறார்.

அந்த நேரத்தில் பாக்கியாவும் வீட்டுக்கு வந்துவிடுகிறார். பிறகு கோர்ட்டில் என்ன நடந்தது என்று கோபி கேட்க அதற்கு கவுன்சிலிங் போக சொல்லி இருக்காங்க என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செழியன் எங்கே என்று கேட்க, அதற்கு அவன் வெளியே போய் இருப்பதாக சமாளிக்கின்றனர். அதைத் தொடர்ந்து பாக்கியா அமைச்சரிடம் இருந்து தனக்கு போன் வந்தது பற்றியும் அங்கு போன பிறகு கேட்டரிங் ஆர்டர் கிடைத்தது பற்றியும் பாக்கியா சொல்ல அதற்கு ராம மூர்த்தி சந்தோஷப்படுகிறார்.
இனியா வழக்கம் போல நீ கலக்கிட்டு இருக்கா என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ஜோசப் வரும் திங்கள்கிழமை குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுக்க போறோம் பாதர் கிட்ட பேசி எல்லா ஏற்படும் பண்ணியாச்சு என்று சொல்லிக் கொண்டிருக்க, அப்போது ஜெனி செழியன் கிட்டயும் அவனுடைய குடும்பத்துக்கிட்டையும் பேச வேண்டாமா என்று கேட்க, அதற்கு ஜோசப் அவங்க யாரும் இதில் கலந்து கொள்ள கூடாது என்று சொல்லிவிடுகிறார்.

அந்த நேரத்தில் பாக்கியா தன்னிடம் வேலை செய்பவர்களை கூப்பிட்டு அமைச்சர் சொன்ன விஷயத்தை சொல்கிறார். அதோடு ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கலாம் என்று இருப்பதாகவும் அதற்கு ஆள் வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை எல்லாம் கேட்டு கோபி கடுப்பாகிறார். அடுத்த கட்டத்தில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினரில் இருந்து வடிவும் அவருடைய கணவரும் வந்து ராஜுவின் கல்யாணத்திற்காக பத்திரிக்கை வைக்கின்றனர்.

ராதிகாவின் சித்தப்பா பையன் தான் வடிவில் கணவர் என்று அறிமுகமாகின்றனர். அதை தொடர்ந்து ராதிகா வீட்டில் இருக்கும் எல்லோரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியாவை எப்படி அறிமுகம் செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும்போது ராமமூர்த்தி அவ என்னுடைய பொண்ணு என்று சொல்கிறார்.

இவர்கள் கிளம்பி போனதும் பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் பணியாரம் கொண்டு வந்து கொடுத்து ஜெனிக்கும் செழியனுக்கும் பிரச்சனையா? அவங்க குழந்தைக்கு பெயர் வைக்க போறாங்க ஆனா உங்களை பற்றியோ செழியனை பற்றியோ அவங்க எதுவுமே பேசலையே என்று கேட்க அதை கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதைக் கேட்டுச் செழியன் ஜெனியோட வாழ்க்கையில தான் நான் இல்லைன்னு முடிவு பண்ணிட்டாங்க.
ஆனா இப்போ குழந்தையோட வாழ்க்கையிலும் நான் இருக்கக் கூடாதா என்று வருத்தபட இதனால் கோபமான ஈஸ்வரி நான் இதை இப்படியே விட மாட்டேன் என்று சொல்லிவிட்டு ஜெனி வீட்டுக்கு கிளம்ப அதற்கு ராமமூர்த்தி தேவை இல்லாமல் நீ போய் பிரச்சனையை பெரிதாக வேண்டாம் என்று தடுத்து நிறுத்துகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications