பாக்கியலட்சுமி- பாண்டியன் ஸ்டோர் 2 மகா சங்கமம்.. முதல் நாளே இப்படியா ஆகணும்? என்ன பண்ணி வச்சிருக்காங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் மகா சங்கமம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் ஜனவரி 22ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யா குடும்பத்தினரும் கோமதி குடும்பத்தினரும் முதல் நாள் அறிமுகம் ஆகி இருக்கின்றனர்.

மகா சங்கமம் தொடங்கிய முதல் நாளே சண்டை சச்சரவுகள் தான் வெடித்திருக்கிறது. அதிலும் கோமதி மற்றும் பாக்கியா இருவரும் தங்களுடைய பிள்ளைகளை சமாதானம் செய்து வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா எல்லோரிடமும் சொல்லிவிட்டு எழில் மற்றும் அமிர்தாவை மினிஸ்டர் ஆர்டருக்காக திருச்செந்தூருக்கு கூட்டிட்டு போறேன் என்று கிளம்புகிறார். அதோடு நான் எழில் அமிர்தாவையும் கூட்டிட்டு போவதற்கு காரணமே கனேஷ் வந்துடுவானோன்னு பயமா தான் இருக்கு என்று ராம மூர்த்தியிடம் சொல்லி விட்டு செழியன், ஈஸ்வரி, இனியா என எல்லோரிடம் சொல்லிவிட்டு இவர்கள் வேனில் கிளம்புகின்றனர்.

அந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோரில் கோமதி கதிர் மருமகளுடன் திருச்செந்தூர் கிளம்புகின்றனர். இதை தொடர்ந்து கோமதி தன்னுடைய தம்பியிடம் கல்யாண வீட்டில் நடப்பதை எனக்கு அப்பப்போ சொல்லு என்று சொல்லிவிட்டு போகிறார். அதற்கு அவரும் சரி என்று சொல்லிவிட்டு இவர்கள் கிளம்பியதும் கோமதியின் தம்பி வீட்டுக்கு போக அங்கு அவர் அக்கா ஊருக்கு போய் விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு எல்லோரும் ஏன் என்று கேட்க அக்கா இங்க இருந்தா கல்யாணத்துக்கு எதுக்கு கூப்பிடலைன்னு கேள்வி வரும். அதனாலதான் அக்கா போறேன்னு சொன்னாங்க என்று சொல்ல, அதற்கு முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் அவளை எல்லாம் கூப்பிட முடியாது என்று கூறி விடுகின்றனர். அதைத்தொடர்ந்து கோமதி மனம் கலங்கியபடி கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறார்.

Baakiyalakshmi Serial january 22th episode Pandian Stores mahasangamam first meeting

பிறகு மருமகளும் மகனும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் பாக்கியா வேணில் வந்து கொண்டிருக்கும்போது எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் எல்லாரையும் எழுப்ப போறேன் என்று செல்வி சொல்ல அதற்கு பாக்கியா திட்டி செல்வியையும் தூங்க சொல்கிறார். பிறகு கடைசியில் வேனில் இருந்த ஒரு பெண்ணுக்கு வாந்தி வந்து விடுகிறது.

பிறகு எல்லோரும் இறங்கி டீ குடித்துவிட்டு வேணி சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது திருச்செந்தூர் பக்கத்தில போய்விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ஊருக்கு வெளியே இறக்கி விட்ட கோமதி, கதிர், மீனா ரோட்டை கடக்கும் போது அவர்களை பாக்கியா வந்த வேன் கோமதியை மோதுவது போல வந்துவிடுகிறது.

இதனால் கதிருக்கும் எழிலுக்கும் சண்டை வருகிறது. அப்போது ஒரு பக்கத்தில் பாக்கியாவும் மறுபக்கத்தில் கோமதியும் கதிரையும் எழிலையும் சமாதானம் செய்கின்றனர். பிறகு அங்கிருந்து மன்னிப்பு கேட்டுவிட்டு இரண்டு குடும்பமும் தனித்தனியாக கிளம்புகின்றனர். அடுத்த கட்டத்தில் இரண்டு குடும்பமும் ஹோட்டலில் ரூம் எடுத்து இருக்கின்றனர்.

Baakiyalakshmi Serial january 22th episode Pandian Stores mahasangamam first meeting

அங்கேயும் கதிரும் எழிலும் முட்டி கொள்கின்றனர். அப்போது கோமதி நம்ம ரெண்டு பேரு குடும்பமும் மீண்டும் மீண்டும் சந்தித்துக் கொள்றோமே என்னன்னு தெரியலையே என்று சொல்லிக் கொண்டிருக்க பாக்கியா அவரிடம் பாசமாக பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+