பாக்கியலட்சுமி: ஈஸ்வரி கேட்ட கேள்வி.. ராதிகா எடுத்த விபரீத முடிவு! கதறிய கோபி.. இனியாவின் மாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 30ஆம் தேதிக்கான எபிசோடில் கோபியை விட்டு நிரந்தரமாக பிரிய ராதிகா முடிவெடுத்திருக்கிறார். அதே நேரத்தில் ராதிகா செய்த செயலை பார்த்து பாக்கியா குடும்பத்தினர் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத கதை வந்திருக்கிறது. இதுவரைக்கும் கோபி எனக்கு வேண்டும் என்று பல அவமானங்களை தாங்கிக் கொண்டிருந்த ராதிகா இப்போது கோபியை வேண்டாம் என்று தூக்கி எறிந்து இருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்று அவரே விளக்கமும் கொடுத்து இருக்கிறார். அதாவது இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஈஸ்வரி கோபியிடம் ராதிகா
என்ன சொன்னா? என்று கேட்க, அதற்கு கோபி அவ முடிவிலிருந்து மாறவில்லை. இந்த வீட்டை விட்டு போகணும் என்று தான் இருக்கிறா என்று சோகமாக பதில் சொல்கிறார்.

அதனால் ஈஸ்வரி அடிக்கடி என்னை வந்து பாரு. உடம்பை கவனி என்று அவருக்கு அட்வைஸ் பண்ணி சாப்பாடும் கொடுக்கிறார். இனியா அழுது ஆர்ப்பாட்டம் செய்வார் என்று நினைத்தால் இனியாவும் கோபி போவதை ஏற்றுக்கொண்டு தைரியமாக பேசுகிறார். அந்த நேரத்தில் ராதிகாவும் மயூவும் தனது பெட்டிகளுடன் கீழே இறங்கி வருகின்றனர்.
இதை பார்த்ததும் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது ராதிகா பாக்கியாவிடம் சென்று இனிமேல் நான் உங்களுக்கு தொந்தரவாக இருக்க மாட்டேன். ஒரு தோழியா நீங்க எனக்கு நிறைய நல்லது செய்து இருக்கீங்க. உங்களை புரிந்து கொள்ளாமல் நானும் உங்களை பல முறை கஷ்டப்படுத்தி இருக்கிறேன்.

கோபி மட்டும் உங்களுக்கு தொந்தரவு கொடுக்கல, என்னாலும் உங்களுக்கு தொந்தரவு தான். ஆனாலும் நீங்கள் செய்த நல்லதை நான் மறக்க மாட்டேன் என்று சென்டிமெண்டாக பேசுகிறார். அதற்கு பிறகு ராதிகா வந்ததும் கோபி தன்னுடைய லக்கேஜ் எடுக்க சொல்கிறார்.
அதற்கு ஈஸ்வரி கோபி லக்கேஜ் எடுக்க மாடிப்படி ஏற வேண்டாம் என்று செழியனிடம் லக்கேஜை எடுத்துட்டு வருமாறு சொல்கிறார். அதற்கு ராதிகா யாரும் கோபியின் லக்கேஜை எடுக்க வேண்டாம் அது இங்கேயே இருக்கட்டும் என்று சொல்கிறார். ராதிகா சொல்வது புரியாமல் குடும்பத்தினர் எல்லோரும் இருக்கின்றனர்.

அப்போது நானும் மயூவும் தான் வீட்டை விட்டு போறோம். நீங்க இங்கேயே இருங்க என்று கோயிடம் ராதிகா சொல்கிறார். அது மட்டுமல்லாமல் நான் இந்த வீட்டுக்கு மீண்டும் வர காரணம் உங்களுடைய உடல் நிலையை நினைத்து தான் வந்தேன். ஆனால் இங்கே வந்த பிறகுதான் நீங்க இந்த வீட்டில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கீங்கன்னு பார்த்தேன்.
எங்களிடம் நீங்கள் இருக்கும் போது வேறு விதமாக இருக்கீங்க. ஆனால் இந்த வீட்டில் இருக்கும் போது நீங்கள் எப்போதுமே சந்தோஷமாக இருக்கீங்க என்று ராதிகா சொல்ல, கோபி எதுவும் பேச முடியாமல் இருக்கிறார். இறுதியில் இனியாவிடம் உன்னுடைய அப்பாவை உன்னிடமே விட்டு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு பாக்கியாவிடம் நான் எடுத்த இந்த முடிவு உங்களுக்கு சாதகமா
பாதகமா என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் ரொம்ப நல்லவங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். ராதிகா வெளியே செல்லவும் அவரிடம் இனியா மன்னிப்பு கேட்டு கட்டி அணைத்துக் கொள்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications