மீண்டும் வில்லியாக மாறிய ராதிகா.. எழில் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றம்.. அமிர்தா எடுத்த முக்கிய முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜனவரி நான்காம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் ராதிகா மீண்டும் வில்லியாக மாறி கோபியை மிரட்ட கோபி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். நேற்று பாக்கியா மற்றும் குடும்பத்திற்கு ஆறுதலாக பேசிய கோபியை பாராட்டிய ராதிகா இன்று தன்னுடைய கோபத்தை காட்டி இருக்கிறார்.
அதே நேரத்தில் செழியன் மற்றும் ஜெனியின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வந்திருக்கும் நிலையில் அங்கு வைத்து ஜெனியின் நடவடிக்கையை பார்த்து ஈஸ்வரி கோபப்படுகிறார்.
அது போல எழில் இவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருந்தாலும் எதுவும் நடக்காதது போல சகஜமாக இருப்பதை பார்த்து மொத்த குடும்பத்தினரும் குழப்பத்தில் இருக்கின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் அமிர்தா அசந்து தூங்கிக் கொண்டிருக்க எழில் அவரை டிஸ்டர்ப் செய்யாமல் எழுந்து ரெடி ஆகிவிடுகிறார். திடீரென்று சத்தம் கேட்டு எழுந்த அமிர்தா கண்விழிக்க எழில் சாரி சொல்லி நீ தூங்கு கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பி வருகிறார்.
அப்போது நேராக கிச்சனுக்கு வந்து அங்கு பாக்யாவுக்கு குட்மார்னிங் சொல்ல பாக்கியா காபி கொடுக்கவா என்று கேட்க, அதற்கு கொடுமா நான் ஹாலில் இருக்கிறேன் என்று சொல்லி அங்கு வந்து இருக்கிறார். அதோடு எல்லாவற்றையும் மறந்து சகஜமாக எழில் நடந்து கொள்வதை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.
அந்த நேரத்தில் அங்கு வரும் எழில் எல்லாம் ஓகேவா என்று கேட்க நான் ஓகே தாண்டா என்று சொல்கிறார். பிறகு நீ ஆபீசுக்கு கிளம்பிட்டியா என்று எழில் செழியனிடம் கேட்க, இல்ல இன்னைக்கு ஹியரிங் இருக்கு கோர்ட்டுக்கு போகணும் என்று சொல்கிறார். அதற்கு எழில் அப்போ நானும் உன் கூட வரவா என்று கேட்க, பாக்கியா அதற்கு வேண்டாம் நானும் செழியனும் போயிட்டு வருகிறோம் என்று சொல்ல, அங்கு இருக்கும் ஈஸ்வரி நானும் வருகிறேன் என்று சொல்கிறார்.
அது மட்டும் இல்லாமல் கோபியும் வரட்டும் என்று சொல்ல கோபியும் அதற்கு சரி என்று சொல்கிறார். பிறகு ராதிகாவிடம் வந்து கோர்ட்டுக்கு போயிட்டு வருகிறேன் என்று கோபி சொல்ல அதுக்கு ராதிகா நீங்க ரொம்ப ஓவரா அந்த பக்கம் ஒட்டிக்காதீங்க அப்புறம் நாளைக்கு ஒரு பிரச்சனை வந்தா உங்க பிள்ளைங்க பாக்கியா பக்கம் போய் நிப்பாங்க. அப்போ நீங்க தான் ரொம்ப வருத்தப்படுவீங்க என்று எச்சரிக்கை கொடுக்க, கோபி இப்ப நான் போகணுமா வேண்டாமா என்று குழப்பத்தோடு பயந்த படியே கேட்கிறார்.
அதற்கு ராதிகா அதான் வரேன்னு சொல்லிட்டீங்கல்ல போயிட்டு வாங்க. ஆனா இதுவே கடைசியாக இருக்கட்டும் என்று வார்ன் பண்ணி அனுப்ப அதற்கு கோபி இவள் நல்லவளா கெட்டவளா என்று புரிஞ்சிக்க முடியலையே என்று குழம்பிக் கொண்டிருக்கிறார். அடுத்து இவர்கள் எல்லோரும் கோர்ட்டுக்கு வர அங்கு ஜெனி அப்பாவோடு வருகிறார். அப்போது ஜெனி அவர்களிடம் பேச முயற்சி செய்ய அதற்கு ஜெனியின் அப்பா யாரிடமும் பேச விடாமல் ஜெனியை கூட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார்.

அதனால் ஈஸ்வரி வழக்கம் போல கோபப்படுகிறார். செழியன் மேல தானே கோபம். ஆனால் நம்ம கிட்ட பேசலாமே? எதுக்காக இவ இப்படி போறா என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டில் நிலா பாப்பா ராமமூர்த்தியோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. அதை பார்த்து அமிர்தா எமோஷனலாகி மாடிக்கு சென்று விடுகிறார்.
அதை பார்த்த ராதிகா அமிர்தாவை சமாதானம் செய்வதற்காக அங்கு போய் தன்னுடைய விவாகரத்து கதையை சொல்லி உனக்கு இனி எல்லாமே எழிலோடுதான் வாழ்க்கை. கணேஷ் வந்தது எனக்கும் சந்தோஷம்தான். ஆனால் அவர் அவங்க அம்மா அப்பாவோட சந்தோஷமா இருக்கட்டும். அவருக்கு ஒரு வாழ்க்கை உருவாக்கிகட்டும். நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் எப்போதும் போல சந்தோஷமாக இரு என்று அட்வைஸ் கூறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications