பாக்கியலட்சுமி: இனியாவால் வெடித்த பிரச்சனை! பாக்கியா எடுத்த முடிவு.. பதறிய ஈஸ்வரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 7ஆம் தேதிக்கான எபிசோடில் மயூ கோபியிடம் பேசுவதை பார்த்து கோபமான இனியா செய்த செயலால் பாக்கியா திட்டுகிறார். அதைத் தொடர்ந்து ராதிகாவால் ஈஸ்வரிக்கு அவமானம் நடக்கிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி கோபியை வாக்கிங் போவதற்காக கூப்பிடுகிறார். அப்போது கோபி ரெடியானதும் அங்கு வந்த ராதிகா நான் கோபியோடு போகிறேன் என்று சொல்ல, இல்லை நான் போகிறேன் என்று ஈஸ்வரி சொல்கிறார். இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை உருவாகுவது போல இருக்க கோபி என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கிறார்.

அப்போது ராதிகா நீங்க வேகமா நடக்க மாட்டீங்க இந்த சமயத்தில் கோபி வேகமா நடக்கணும் அதனால் அவர் என் கூடவே வரட்டும் என்று சொல்லி கூப்பிட்டு போகிறார். அடுத்தது கோபியும் ராதிகாவும் வாக்கிங் போகும்போது அங்கு வந்தவர்கள் நீங்க வீட்டை காலி பண்ணிட்டு இப்போ பாக்கியா வீட்டிலா இருக்கீங்க? என்று கேட்கிறார்கள்.
அதற்கு ராதிகாவும் ஆமாம் என்று சொல்கிறார். அதோடு கோபியையும் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார். பிறகு நாங்கள் கொஞ்ச நாளைக்கு தான் பாக்கியா வீட்டில் இருப்போம் அதற்கு பிறகு கிளம்பி போய்விடுவோம் என்றுதான் சொல்லிவிட்டு மீண்டும் கோபியுடன் நடக்கிறார். அப்போது கோபியால் வேகமாக நடக்க முடியவில்லை.

அதனால் நான் மெதுவா வரேன் நீ போய் மயூவை ஸ்கூலுக்கு கிளப்பி விடு என்று சொல்கிறார். இதனால் ராதிகாவும் முன்னாடி செல்கிறார். அப்போது அங்கு பாக்யாவும் வருகிறார். பாக்யாவை பார்த்ததும் நீங்க எல்லா பக்கமும் இருக்கிறீங்க. இப்பதான் கிச்சனில் வேலை செஞ்சுட்டு இருந்தீங்க, அதற்குள் இங்கேயும் வந்துட்டீங்க. வீட்டையும் பாக்குறீங்க ரெஸ்டாரண்டையும் கவனிக்கிறீங்க. உங்களால் மட்டும் எப்படி முடியுது என்று கேட்கிறார்.
பிறகு இருவரும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். அந்த நேரத்தில் ஈஸ்வரி நானும் பார்க்குக்கு போறேன் என்று அங்கு நடக்க வருகிறார். அப்போது ராதிகாவும் பாக்கியாவும் நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு கோபி தனியாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து கோபி இடம் வந்து என்ன ஆச்சு என்று கேட்கிறார்.

அப்போது கோபி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் போல இருந்தது அதனால் உட்கார்ந்திருக்கிறேன். நான் தான் ராதிகாவை போக சொன்னேன் என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி ராதிகா பாக்கியாவையும் மாத்திடுவாளோனு பயமா இருக்கு என்று சொல்கிறார். அடுத்ததாக கோபி வீட்டிற்கு வந்ததும் மயூ கணக்கில் டவுட் கேட்கிறார்.
அப்போது கோபி பக்கத்தில் அமர்ந்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதை பாக்யாவும் ராதிகாவும் சமையல் செய்த படியே கவனிக்கிறார்கள். அந்த நேரத்தில் இனியா வருகிறார் இனியா கோபி மயூவுடன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து வேண்டுமென்றே தன்னுடைய பிரண்டு பிறந்தநாள் பங்க்ஷன் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்.

இனியாவின் நடவடிக்கையை பார்த்து கோபமான பாக்கியா இனியாவை திட்டுகிறார். அப்போது ஈஸ்வரி வந்து நீ எப்பவும் இனியாவுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கணும் இனியா தான் உன் பொண்ணு மயூக்கு சொல்லிக் கொடுக்க அவங்க அம்மா இருக்கா என்று சண்டை போடுகிறார்.
இதனால் ராதிகா மயூவை கூட்டிக்கொண்டு போய்விடுகிறார். பிறகு கோபி மயூவை சமாதானம் செய்கிறார். பாட்டிக்கு வயசாயிடுச்சு அதனால்தான் அவங்க இப்படி எல்லாம் நடந்துக்கிறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications