பாக்கியலட்சுமி: ஈஸ்வரியை விளாசிய பாக்யா.. ராதிகா கேட்ட கேள்வி.. சுயநலவாதியான கோபிக்கு குட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி 2025 ஜனவரி ஒன்பதாம் தேதிக்கான எபிசோடில் கோபியிடமிருந்து ராதிகாவை பிரிக்க வேண்டும் என்று பிளான் பண்ணி வேலை செய்த ஈஸ்வரிக்கு பாக்யா சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து ராதிகா பயத்தில் இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி,செழியன், ஈஸ்வரி, இனியா நான்கு பேரும் செஸ் விளையாடி கொண்டு இருக்கின்றனர். அப்போது கோபியோடு ஈஸ்வரியும், செழியனோடு இனியாவும் சேர்ந்து விளையாடுகிறார்கள். இதை கிச்சனிலிருந்து பாக்கியா பார்த்து சந்தோஷப்படுகிறார். அப்போது செல்வி சிரித்துக்கொண்டிருக்க, எதற்கு சிரிக்கிறாய் என்று பாக்யா கேட்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

உன் மாமியாருக்கு நீ தங்கத்திலோ, வைரத்திலோ நகை வாங்கி கொடுத்து இருந்தா கூட இவ்வளவு சந்தோஷமா இருக்க மாட்டாங்க. ஆனா அவங்க மகன் பக்கத்தில் இருக்கும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க பாரு என்று சொல்ல, மாமா இறந்த பிறகு இவங்க சந்தோஷமா சிரிச்சதே இல்ல. இப்பவாவது சிரிக்குறாங்களே என்று பாக்கியா சொல்கிறார்.

அந்த நேரத்தில் அங்கு டீ போட்டுக் கொண்டிருந்த ராதிகா அவங்க மட்டும் சந்தோஷமா இருந்தா போதுமா? அவங்க பையனை இன்னும் சின்ன குழந்தை மாதிரி பக்கத்துலயே வச்சுக்கணும் பொண்டாட்டி கிட்ட பேசக்கூடாது, பொண்டாட்டிக்கு வாழ கூடாதுன்னு யோசிக்கிறாங்க என்று சொல்ல, அதற்கு பாக்கியா அவங்க அந்த காலத்து ஆளு, அதுபோலவே இன்னும் பேசிக்கிட்டு இருக்கிறாங்க... நீங்க பெருசா எடுத்துக்காதீங்க என்று சொல்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அதற்கு ராதிகா பெருசா எடுத்துக்குற அளவுக்கு தான் அவங்க பேசுறாங்க. நீங்க இதை சரி பண்ற மாதிரி தெரியல நானே தான் சரி பண்ணிக்கணும்னு நினைக்கிறேன் என்று சொல்கிறார். அடுத்ததாக மயூவிற்கு பாக்கியா தானே செய்த ஐஸ்கிரீமை கொடுக்க, அதை சாப்பிட்டதும் அருமையாக இருக்கிறது என்று மயூ பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் எழிலும், அமிர்தாவும் வருகின்றனர். அவர்கள் எல்லோரிடமும் நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எழிலுடைய வேலை எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று பாக்கியா விசாரித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபியும் வருகிறார்.

television baakiyalakshmi serial vijay tv

கோபி எழிலிடம் நலம் விசாரித்துவிட்டு நீ இந்த வீட்டிலேயே வந்து தங்கி விடு. நீ எப்போதும் என்கிட்ட திமிரா பேசுவியே அப்படி இந்த வீட்டிலிருந்து பேசிட்டு இரு. நீ இல்லாம நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் என்று சொல்ல, அதற்கு பாக்கியா, வேண்டாம் நீ ஒரு லட்சியத்தோடு இந்த வீட்டில் இருந்து போயிருக்கிற.. அந்த லட்சியத்தை நிறைவேற்றிவிட்டு மீண்டும் வா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் ராதிகா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டு இவர்கள் குடும்பமாக பேசி சிரிப்பதை பார்க்கிறார். பிறகு மயூவை மட்டும் கூட்டிக்கொண்டு போய் விடுகிறார். அடுத்ததாக இரவு மயூ தூங்காமல் இருக்கிறார். அப்போது பாக்கியா ஃபோன் பேசிக் கொண்டே இருக்கிறார். பிறகு நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா என்று கேட்க, இல்ல எனக்கு தூக்கம் வரல அம்மா முன்னாடி ரொம்ப சந்தோசமா இருப்பாங்க. ஆனா இப்போ ரொம்ப சோகமாவே இருக்காங்க அது எனக்கு கஷ்டமா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்போது பாக்யா மயூவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ராதிகா வந்து நான் மயூவை என்னோடு படுக்க வைத்துக் கொள்கிறேன் என்று சொல்ல பாக்கியா வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். அதனால் சரி என்று ராதிகா வெளியே வருகிறார்.

அப்போது கோபி, இனியா, செழியன், ஈஸ்வரி நான்கு பேரும் பாப்கான் சாப்பிட்டு கொண்டே படம் பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ராதிகாவை பார்த்ததும் ஈஸ்வரி கோபியிடம் அதிகமாக பாசத்தை கொட்டி தன் பக்கத்திலேயே இருக்க வைக்கிறார். ராதிகா இவர்கள் எல்லாரும் பேசுவதை நின்று பார்த்துக் கொண்டு பிறகு தண்ணீர் பிடிக்கிறார்.

அப்போது அங்கு வந்த கோபி நீ போய் தூங்கு நான் லேட்டா தான் வருவேன் அம்மா கூட படம் பாத்துட்டு இருக்கிறேன். இப்ப எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்கிறோம். நீ போய் தூங்கு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். ராதிகா எதுவும் சொல்லாமல் போய்விடுகிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அடுத்த நாள் காலையில் பாக்கியா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ராதிகா டீ போட்டுக் கொண்டிருக்கிறார். அங்கு வந்த ஈஸ்வரிக்கு பாக்கியா காபி போட்டு கொடுக்கிறார். அந்த நேரத்தில் கோபி அங்கு வந்ததும் பாக்கியா கொடுத்த காபியை ஈஸ்வரி கோபிக்கு கொடுத்து விடுகிறார்.

அதை குடித்து பார்த்த கோபி அருமையா இருக்கு என்று ராதிகாவை பாராட்டுகிறார். இதனால் பாக்கியா கோபப்படுகிறார். கோபி போனதும் ராதிகா அடுப்பை ஆஃப் பண்ணிவிட்டு சோகமாக அங்கிருந்து போய் விடுகிறார். இதனால் பாக்கியா ஈஸ்வரியை திட்டுகிறார். நான் உங்களுக்காக தான் காபி கொடுத்தேன். அதை எதற்காக நீங்க அவங்களுக்கு கொடுத்தீங்க?

நான் அவருக்கு சாப்பாடு செஞ்சு தரேன்னு சொல்லவே இல்லையே? உங்களுக்கு தர சாப்பாடை அவங்களுக்கு கொடுத்தா இனி நடக்கிறதே வேற என்று மிரட்டுகிறார். அதோடு ராதிகா உங்க மகன் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்த பொண்ணு. அவங்க கூட சந்தோஷமா வாழ விடுங்க. இப்படி பண்ணிட்டு இருக்காதீங்க என்று திட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+