அம்மா தான் கீழே விழுந்தாங்க.. மயூ சொன்ன ரகசியம்.. பாக்யா எடுத்த முடிவு.. ஆனாலும் ஈஸ்வரிக்கு சிக்கல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 11ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ராதிகா தான் கீழே விழுந்தார் என்று ஈஸ்வரிக்கு ஆதரவாக மயூ பாக்கியாவிடம் பேசி இருக்கிறார். ஆனாலும் ஈஸ்வரியை வெளியே எடுப்பதில் சில சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா தன்னுடைய கர்ப்பம் கலைந்ததற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று சொல்லியதால் கோபியும் ஈஸ்வரியை வீட்டை விட்டு அனுப்பி இருந்தார். இந்த நிலையில் கமலா ஈஸ்வரி மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். அதன் காரணமாக ஈஸ்வரி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

இன்று ஈஸ்வரிக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது நான் எந்த தப்பும் செய்யவில்லை என்று ஈஸ்வரி கதறி அழுதாலும் நீதிமன்றத்தில் ராதிகா என்னை தள்ளிவிட்டது ஈஸ்வரி தான் என்று சொல்லி இருந்தார். அதுபோல கமலா நான் இரண்டு கண்ணால் பார்த்தேன் ராதிகாவை ஈஸ்வரிதான் தள்ளிவிட்டார் என்று சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து பேசிய கோபி என்னுடைய அம்மா என் மீது பாசத்தில் வயதான பிறகு இந்த குழந்தை வேண்டாம் என்று சொன்னார்கள்.
ஆனால் நான் அந்த சம்பவம் நடந்தபோது அங்கு இல்லை என்று சொன்னதால் நீதிபதி இந்த வழக்கின் முடிவை தள்ளி வைத்திருக்கிறார். அதோடு ஈஸ்வரியை மேலும் நீதிமன்ற காவலில் வைக்க சொல்லி இருக்கிறார். இதனால் பயந்து போன ஈஸ்வரி பாக்கியாவிடம் இனி என் வாழ்க்கை அவ்வளவுதானா? நான் இனி ஜெயிலுக்குள் தான் இருக்க வேண்டுமா? என்று அழ பாக்கியா நான் உண்மையை கண்டுபிடித்து உங்களை எப்படியாவது வெளியே கொண்டு வந்து விடுவேன் என்று சொல்லிவிட்டு வந்து இருக்கிறார்.
இப்படியான நிலையில் வரும் நாட்களுக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் பார்க்கில் பாக்கியா அமர்ந்திருக்கும் போது அங்கு மயூவும் உட்கார்ந்திருக்கிறார். மயூ பாக்யாவிடம் ஆன்ட்டி நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்று சொல்ல, பாக்கியா என்னவென்று கேட்டதும் அன்னைக்கு அம்மா கீழ விழுந்தாங்கல்ல அப்போ நானும் அங்கதான் இருந்தேன். மம்மி கீழே கிடந்த பூ ஜாடியில் மிதித்து தான் கீழே விழுந்தாங்க. பாட்டி தள்ளி விடல.
ஈஸ்வரி பாட்டி ஹெல்ப் பண்ண தான் வந்தாங்க. அம்மா தான் தப்பா புரிஞ்சுகிட்டாங்க என்று சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சியான பாக்கியா பழனிச்சாமியை கூட்டிக்கொண்டு வழக்கறிஞரிடம் போயிருக்கிறார். வழக்கறிஞர் இந்த உண்மையை மயூ கோர்ட்டில் வந்து சொன்னால்தான் ஈஸ்வரியை வெளியே எடுக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்.
அதற்கு பாக்கியா குழந்தையை எப்படி கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர முடியும் என்று கேட்க அவங்க வந்தா மட்டும்தான் நம்மால் அடுத்த கட்டத்துக்கு போக முடியும் என்று வக்கீல் சொல்லி இருக்கிறார். இனி மயூவை எப்படி பாக்யா கோர்ட்டுக்கு கூட்டிட்டு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ஈஸ்வரி விஷயத்தில் மயூ ஏதாவது செய்தால் மட்டும்தான் ஈஸ்வரி வெளியே வருவார் என்பது எல்லோரும் யூகித்தது தான். அது போலவே இப்போது நடந்திருக்கிறது. ஆனால் இனி மயூ எப்படி கோர்ட்டுக்கு வரப்போகிறார் அவரை ராதிகாவும் கமலாவும் கோர்ட்டுக்கு வர விடுவார்களா? இல்லையா? என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications