பாக்யா வீட்டிற்கு மீண்டும் வந்த கோபி.. ஈஸ்வரி கொடுத்த அதிர்ச்சி.. இப்பவாவது இதை சொன்னாங்களே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 16ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த ஈஸ்வரியை பார்ப்பதற்காக கோபி பாக்யா வீட்டிற்கு வந்து இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ராதிகாவின் கர்ப்பம் கலைந்ததற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று சொன்னதை கேட்டு கோபியும் ஈஸ்வரியை வீட்டை விட்டு துரத்தி விட்டார். அதற்குப் பிறகு பாக்கியா கோபியின் வீட்டிற்கு சென்று கோபியிடம் உங்க அம்மாவை பற்றி நீங்களே இப்படி சொல்லலாமா? அவங்களை பற்றி உங்களுக்கு தெரியாதா?

நானே அவங்களை பற்றி இப்படி எல்லாம் சொன்னா நம்ப மாட்டேன் நீங்க அவங்க பெத்த பிள்ளை... உங்களுக்காக எங்க எல்லாரையும் வேண்டான்னு தூக்கி எறிஞ்சிட்டு வந்தாங்களே என்று பல்வேறு கேள்விகளை கேட்க கோபி அதற்கு பிறகு தன்னுடைய அம்மாவை நினைத்து வருத்தத்தில் இருந்த நிலையில் கமலா மீண்டும் மீண்டும் ஈஸ்வரியை பற்றி பேச அதனால் கோபமான கோபி கமலாவை வீட்டைவிட்டு வெளியே போக சொல்லி அடிக்க கை ஓங்கி இருந்தார்.
இதனால் கோபமான கமலா போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி தான் ராதிகாவை கீழே தள்ளிவிட்டு குழந்தையை கொலை செய்தது என்று கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். அதனால் ஈஸ்வரி கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் மயூ வீட்டில் நடந்த எல்லா விஷயங்களையும் பாக்கியாவிடம் சொல்ல பாக்கியா மயூவை கோர்ட்டில் கூட்டிட்டு போய் சாட்சி சொல்ல வைத்திருக்கிறார்.
இதனால் ஈஸ்வரி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இப்படியான நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு இருக்கும் நிலையில் இப்போது இனி என்ன நடக்கப்போகிறது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது அதில் வீட்டில் மன வருத்தத்தில் இருக்கும் ஈஸ்வரியை குடும்பத்தினர் எல்லாரும் சமாதானம் செய்து அவரை சாப்பிட வைக்கின்றனர்.

அந்த நேரத்தில் கோபி வீட்டிற்கு வந்து ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்டு அம்மா உங்களை பற்றி நான் தவறா நினைச்சுட்டேன் என்ன மன்னிச்சிடுங்க என்று சொல்ல கோபமான ஈஸ்வரி வெளியே போடா.. நீ எனக்கு யாரு? இதுவரைக்கும் உனக்காக நான் எத்தனையோ முறை உன் பக்கத்தில் இருந்து இருக்கேன். ஆனா இனி நீ என்னுடைய மகன் கிடையாது. எனக்கு ஒரே ஒரு மகள் தான் அது பாக்கியம் மட்டும் தான். இன்னையோடு தலை முழுகுகிறேன் என்று நடு வீட்டில் தண்ணீர் எடுத்து தலையில் ஊற்றிக் கொள்கிறார்.

ஒரு வழியாக பாக்யா செய்த நல்லதை ஈஸ்வரி புரிந்து கொண்டார். இனி இது போலவே ஈஸ்வரி பாக்யாவுக்கு சப்போட்டாக இருக்க போகிறாரா? அல்லது வழக்கம் போல இன்னும் ஒரு சில நாட்களில் கோபி குடித்துவிட்டு சோகத்தில் புலம்புவதை கேட்டு கோபி பின்னாடியே போகப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications