பாக்யாவின் முகத்துக்கு நேராக ராதிகா கேட்ட கேள்வி.. பதறிப் போன ஈஸ்வரி.. கோபிக்கு வந்த சந்தேகம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 25ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் இனியாவை போலீஸ் கைது செய்யாமல் காப்பாற்றிய ராதிகா பாக்யாவை அசிங்கப்படுத்தி பேசுகிறார். அதே நேரத்தில் பாக்யா போட்டியிலிருந்து திடீரென வெளியேறி வந்ததால் கோபியும் குழப்பத்தில் இருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் போலீசிடமிருந்து காப்பாற்றிய இனியா பற்றி செழியனிடம் ராதிகா கோபப்பட செழியன் இனியாவிடம் தன்னுடைய கோபத்தை காட்டுகிறார். அதோடு செழியன் இனியாவை வீட்டிற்கு கூட்டிட்டு போகலாம் என்று முயற்சி செய்யும்போது ராதிகா இங்கிருந்து நீங்க ரெண்டு பேரும் போக முடியாது.

உங்க அம்மா வந்த பிறகு தான் இங்கே இருந்து போக வேண்டும் என்று ஸ்கூல் பிள்ளைகளை டீச்சர் பிடித்து வைத்திருப்பது போல பிடித்து வைத்துக் கொள்கிறார். அதற்கு செழியன் மற்றும் இனியா இருவருமே அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிந்த இப்போ ரொம்ப பதறிப் போயிடுவாங்க நாங்க வீட்டுக்கு போகணும் என்று அடம் பிடித்துக் கொண்டு இருக்க அதெல்லாம் முடியாது என்று ராதிகா கறாராக சொல்லிவிடுகிறார்.
பிறகு செழியன் பாக்யாவுக்கு போன் பண்ணவும் போனை பிடுங்கி ராதிகாவே பாக்கியாவிடம் பேசுகிறார். அப்போது உங்க பொண்ணு பிரண்டோட பிறந்தநாள் பங்க்ஷன்க்கு ஒன்னும் போகல சீனியர் பசங்க கூட சேர்ந்து பப்புக்கு வந்திருக்கா... நீங்க நான் சொல்ற இடத்துக்கு வாங்க என்று கூப்பிட பாக்யா அங்கிருந்து அவசரமாக கிளம்ப என்னவென்று ஈஸ்வரி விசாரிக்க ஈஸ்வரியிடம் பாக்கியா விஷயத்தை சொன்னதும் ஈஸ்வரி நானும் வருகிறேன் என்று கிளம்பி வருகிறார்.
செல்வி மட்டும்தான் தன்னுடைய டீமுக்காக தனியாக வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். பிறகு பாக்கியாவும் ஈஸ்வரியும் பப்புக்கு வந்து இறங்கியதும் பாக்கியா ராதிகாவின் காரில் இருக்கும் இனியாவை பார்த்து என்ன ஆச்சு என்று கதவை திறக்க போக தடுத்து நிறுத்தும் ராதிகா உங்க பொண்ணு அவளோட சீனியர் ஸ்டுடென்ட் உடன் சேர்ந்து பப்புக்கு வந்திருக்கா.. குடிச்சிட்டு கலாட்டா பண்ணிருக்கா.. போலீஸ்க்கு கம்ப்ளைன்ட் போகவே அவங்க வந்து கைது பண்ணி கூட்டிட்டு போக இருந்தாங்க.

அந்த நேரம் பார்த்து நான் இங்க வரவே போலீஸ் கிட்ட பேசி கஷ்டப்பட்டு அவளை காப்பாத்திருக்கிறேன். நான் நினைச்சிருந்தா கண்டும் காணாமல் கூட போய் இருக்கலாம்... அப்படி போயிருந்தா போலீஸ் ஸ்டேஷனில் இனியா இருந்திருப்ப பேப்பர்ல செய்தி வந்து இருக்கும். கோர்ட்டுக்கு போய் தான் கூட்டிட்டு வந்து இருப்பீங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார். அதோடு வயசு பொண்ணை ஒழுங்கா வளருங்க என்று பாக்யாவுக்கு அட்வைஸ் கொடுக்க பாக்யா அவமானத்தோடு நன்றி சொல்லி கிளம்ப பார்க்க, மீண்டும் ராதிகா இதுதான் பாக்யாவுக்கு ராதிகாக்கும் இருக்கும் வித்தியாசம் என்று மயூவை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போனது பற்றி குத்தி காட்டுகிறார்.

பிறகு பாக்கியா தலையில அடித்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும் போது செல்வி போன் பண்ணி என்ன ஆச்சு என்று விசாரிக்க இனியா கொடுக்க முடியாத பரிசு கொடுத்திருப்பதாக நொந்து போய் பேசுகிறார். ஈஸ்வரி அம்மாவை நிம்மதியா இருக்க விட விடமாட்டீங்களா என்று இனியாவை போட்டு அடிக்கிறார். அதே நேரத்தில் பாக்கிய திடீரென போட்டியிலிருந்து கிளம்பி சென்று இருப்பதால் காரணம் புரியாமல் கோபி குழப்பத்தில் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications