போட்டியில் நடந்த டுவிஸ்ட்.. இனியாவுக்கு விழுந்த அடி.. ராதிகா பற்றி கோபிக்கு தெரிய வந்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 26 ஆம் தேதிக்கான இது எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் இனியா பப்புக்கு போனதை வைத்து ராதிகா பாக்யாவிடம் நீங்க பிள்ளையை ஒழுங்கா வளர்க்கணும் என்று புத்திமதி சொன்னதால் பாக்கியா அவமானத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் ராதிகா பற்றி கோபிக்கு தெரிய வந்திருக்கிறது.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஈஸ்வரி காரில் வரும்போது இனியாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இனியா அழுது கொண்டே நான் இப்படி எல்லாம் ஆகும்னு நினைக்கல பிரண்ட்ஸ்ங்க கூப்பிட்டாங்க அதனால தான் போனேன் என்று சொல்லிக் கொண்டிருக்க பாக்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

மறுபக்கத்தில் சமையல்போட்டி நடந்து முடிந்து எல்லோரும் தாங்கள் செய்த சமையலை செஃப்பிடம் கொடுக்கின்றனர். அதை சுவைத்து பார்த்து கோபி வெற்றி பெற்றதாக அறிவிக்கின்றனர். கோபி சந்தோஷத்தில் செல்வி இடம் வந்து பாக்யா எங்க பயந்து ஓடிட்டாளா என்று நக்கலாக பேச இனியாவுக்கு பிரச்சனை... ராதிகா தான் போன் போட்டு வர சொன்னாங்க என்று சொல்ல கோபி பதறி போகிறார்.

என்ன ஆச்சு இனியாக்கு என்னவென்று கேட்க செல்வி எனக்கு எதுவும் தெரியல.. ராதிகா போன் போட்டதால தான் அக்கா அவசரமா போனாங்க என்று சொல்ல கோபி ராதிகாவுக்கு போன் செய்ததும் போனை எடுக்காததால் அவசர அவசரமாக ஓடி வருகிறார். அடுத்ததாக இனியாவுடன் வீட்டிற்கு வந்ததும் வீட்டில் எல்லோரும் இனியாவை திட்டிக் கொண்டிருக்க பாக்கியா ஒரு வார்த்தை கூட பேசாமல் ரூமுக்கு சென்று கீழே உட்கார்ந்து ராதிகா சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் நினைத்து தலையில் அடித்தபடி அழுது கொண்டிருக்கிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து செல்வி இனியாவிடம் இனியா பாப்பா என்ன ஆச்சு ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று கேட்டுவிட்டு ஈஸ்வரியிடம் அம்மா போட்டியில் தோத்துட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாக்கியா மாடியில் இருந்து கீழே இறங்கி வர, பாக்யாவிடமும் அக்கா நாம தோத்துட்டோம் என்று சொல்ல, ஆமா செல்வி நான் மொத்தமா தோத்து போயிட்டேன் என்று படியில் உட்கார்ந்து பாக்யா அழுது கொண்டிருக்கிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

எல்லோரும் பாக்கியாவை சூழ்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க இனியா பக்கத்தில் வந்து உட்கார்ந்து மன்னிப்பு கேட்க இனியாவை பளார் பளார் என்று பாக்கியா அறைந்து உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா இல்லையா? இல்ல வெளியே போகும்போது கழட்டி வச்சிட்டு போயிடுவியா? என்று கோபப்படுகிறார். உன்னால் எனக்கு எத்தனை பிரச்சனை... ஒவ்வொரு முறையும் உனக்காக நான் எத்தனை பேரிடம் அவமானப்பட்டு நிற்கணும்.

Television Baakiyalakshmi Serial vijay TV

உங்களை நம்புனலனா நம்பி இருந்தா இதை பண்ணி இருப்போம், அதை பண்ணி இருப்போம்னு பேசுறீங்க. இப்போ நம்பி வெளியே அனுப்பி வச்சா என்ன பண்ணி வச்சிருக்க...? என்று கோபப்படுகிறார். அதற்கு இனியா பிரண்ட்ஸ்ங்க கூப்பிட்டாங்க அதனால் தான் போயிட்டேன் என்று சொல்ல, ஒவ்வொரு முறையும் நீ இதைத்தானே சொல்லுற.. இதுவரைக்கும் நடந்த விஷயங்களில் இருந்து நீ ஒண்ணுமே கத்துக்கலையா என்று திட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Television Baakiyalakshmi Serial vijay TV
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+