பாக்கியலட்சுமி: பட்டும் திருந்தாத இனியா செய்த அடுத்த பிரச்சனை.. அதிர்ச்சியில் பாக்கியா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 31 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். பாக்கியா வீட்டில் சொல்லாமல் தன்னுடைய தோழிகளோடு சேர்ந்து பப்புக்கு போன பிரச்சனை காலேஜுக்கு தெரிய வந்திருக்கும் நிலையில் அவர்கள் பெற்றோரை கூட்டிட்டு வந்து டிசி வாங்க சொல்லி இருக்கின்றனர். இனி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் காலேஜ் பிரின்ஸ்பல் இனியாவை டிஸ்மிஸ் செய்யப் போவதாக சொன்னதும் இனியாவும் அவருடைய தோழிகளும் என்ன செய்வது என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் கோபி இனியாவுக்கு போன் செய்து ஆறுதலாக பேசுகிறார். அதோடு பப்பில் நடந்த விஷயம் காலேஜுக்கு தெரியாதுல்ல என்று கேட்க.. அதற்கு இனியா இல்ல காலேஜ்க்கு தெரிய வந்துவிட்டது.. போலீஸ் சொல்லிட்டாங்க.

வீட்டில் இருந்து பேரன்ட்ஸ் கூட்டிட்டு வர சொல்லி டிசி வாங்கிட்டு போக சொல்லி இருக்காங்க என்று அழுது கொண்டிருக்க, கோபி நீ ஒன்னும் கவலைப்படாத எதுவா இருந்தாலும் உனக்காக டாடி நான் இருக்கிறேன். நானே நாளைக்கு வந்து பிரின்ஸ்பலிடம் வந்து பேசுகிறேன் என்று போனை வைக்கிறார். மறுபக்கம் பழனிச்சாமி நடந்த விஷயம் தெரிந்து பாக்யாவை பார்க்க வந்து எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்னு பழியை உங்க மேல தூக்கி போடாதீங்க என்று பாக்யாவிற்கு ஆறுதல் சொல்ல பாக்கியா மாமாவும் அத்தையும் எனக்கு பெரிய சப்போர்ட்டா இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் பாக்கியாவிற்க்கு ஒரு மெசேஜ் வர அதை படித்து பார்க்கும்போது இனியா காலேஜிலிருந்து பிரின்ஸ்பலை பார்க்க சொல்லி மெசேஜ் வந்திருக்கிறது. மறுபக்கத்தில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இனியா காலேஜுக்கு வந்து காத்திருந்து அவரை அழைத்து செல்கின்றனர். அப்போது கால் வலியையும் பொருள்படுத்தாமல் தனக்காக பாட்டி தாத்தா வந்திருப்பதை பார்த்து இனியா குற்ற உணர்வில் தவிக்கிறார்.
ஈஸ்வரி காலேஜில் நேற்று நடந்தது பற்றி ஏதாவது கேட்டாங்களா? என்று கேட்க ராமமூர்த்தி அதைப்பற்றி திரும்ப திரும்ப பேச வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு வீட்டில் எல்லோரும் சாப்பிடும்போது ஈஸ்வரி மீண்டும் குழந்தை விஷயத்தை பற்றி ஆரம்பிக்க எழில் வாழ்க்கையில் செட்டிலான பிறகு தான் குழந்தையை பெத்துக்குவேன் என்று சொல்ல குழந்தை பெத்துக்கிறதும் வாழ்க்கையில் செட்டில் ஆகிறது தானே என்று ஈஸ்வரி திட்டுகிறார்.

இப்படியே பேச்சு நீண்டு கொண்டு போக அமிர்தா பீல் பண்ண அதை பார்த்து ராமமூர்த்தியை திட்டி அமைதியாக்கி இருக்கிறார். அடுத்ததாக இனியாவிடம் காலேஜ்ல என்ன சொன்னாங்க என்று கேட்க அவர் எதுவும் சொல்லாமல் சமாளிக்கிறார். போலீஸ் எப்படியும் தகவல் கொடுத்து இருப்பாங்களே ஒண்ணுமே சொல்லலையா என்று கேட்க இனியா பொதுவா காலேஜ்ல இப்படி ஒரு விஷயம் நடந்திருக்குன்னு சொன்னாங்க யார் பெயரையும் குறிப்பிட்டு எதுவும் சொல்லல என்று சமாளிக்க பாக்கியாவிற்கு இனியா மீது சந்தேகம் வருகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications