பாக்கியலட்சுமி: கோபி இப்படி பண்ணலாமா? ராதிகா மீது விழுந்த பழி.. பழனிச்சாமி சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 11ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராதிகா, ஈஸ்வரியிடம் பேசிக் கொண்டிருப்பதை தவறாக புரிந்து கொண்ட கோபி ராதிகாவை திட்டுகிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி ஈஸ்வரி உடன் வீட்டிற்கு வர அதை பார்த்து கமலாவும், ராதிகாவும் அதிர்ச்சி அடைகின்றனர். கமலா என்ன மாப்ள உங்க அம்மாவை திரும்ப கூட்டிட்டு வந்து இருக்கீங்க? என்று மறைமுகமாக கேள்வி கேட்க அதற்கு கோபி எங்க அம்மா என்கூட தான் இருப்பாங்க. உங்களுக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ அவங்க இங்கேதான் இருப்பாங்க.

அவங்க என்னுடைய அம்மா, என்னை அவங்க நல்லா பாத்துக்கிட்டாங்க. அவங்கள்ல நான் நல்லா பாத்துக்குவேன். நீங்க அவங்களுக்கு அது பண்ணனுமோ, இது பண்ணனுமோனு என்று யோசிக்க வேண்டாம். ஏன்னா நீங்க எதுவுமே எங்க அம்மாவுக்கு பண்ண வேண்டாம். அவங்களை நல்லபடியாக பார்த்துக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று சொல்கிறார். மறுபக்கத்தில் பாக்யா வீட்டில் பாக்யா, ராமமூர்த்தி எல்லோரும் ஒரு மாதிரி இருக்க எழில் என்ன ஆச்சு டல்லா இருக்கீங்க தாத்தாவும் அப்படித்தான் இருக்காரு என்று கேட்கிறார்.
அதற்கு பாக்யா அத்தையை நினைத்து தான் கவலையா இருக்கு. அந்த வீட்டுக்கு போய் ஒருவாரம் கூட ஆகல அதுக்குள்ள ரெண்டு முறை லோ சுகர் ஆகிடுச்சு. திரும்பவும் அந்த மாதிரி ஆகிடுமோனு பயமா இருக்கு. அவங்க நம்ம கூடவே இருந்து இருக்கலாம் என்று பாக்யா சொல்லிக் கொண்டிருக்கும்போது ராமமூர்த்தி அவதான் புள்ள பாசத்துல ஆடுறா, நாம என்ன பண்ண முடியும். அவனோட அயோக்கியத்தனம் தெரிஞ்சு அவளே வரணும். அதுவரைக்கும் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு கோபி ரெஸ்டாரண்டில் நிறைய ஆட்கள் லீவு போட்டுவிட எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறார். மறுபக்கத்தில் பாக்யா ரெஸ்டாரண்டில் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் பழனிச்சாமி
ஒரு ஆரஞ்சு ஜூஸ் சொல்லி பாக்யிவிற்க்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார். பிறகு நான் எப்போதும் உங்க பக்கத்துல தான் இனி இருப்பேன். பக்கத்து கடையை நான் வாடகைக்கு எடுத்துட்டேன் என்று ஷாக் கொடுக்கிறார்.
உங்க ரெஸ்டாரண்டில் கிடைக்காத பொருள் எல்லாம் என்னுடைய கடையில் கிடைக்கும் என்று சொல்ல பாக்கியா சூப்பர் சார் என்று சந்தோஷப்படுகிறார். அடுத்ததாக கமலா சத்தமாக டிவி போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார். ராதிகா சவுண்ட் கம்மி பண்ணி வைம்மா அத்தைக்கு உடம்பு முடியல என் திட்டி விடுகிறார். பிறகு ஈஸ்வரியை பார்க்க உள்ளே வந்து அத்தை நீங்க வெளிய வரவே இல்ல அதான் உங்களை பார்க்க வந்தேன் என்று சொல்ல,

ஏன் நான் செத்துட்டேன்னு பார்க்க வந்தியா? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போதே அங்கே வரும் கோபி ராதிகா ஈஸ்வரியின் மீது கை வைத்துக் கொண்டிருப்பதை பார்த்து பதறிப் போய் எங்க அம்மாவை என்ன பண்ண போற? என்று கத்த ராதிகா நான் என்ன பண்றேன்? அவங்க மாத்திரை போட்டாங்களான்னு கேட்டுக்கிட்டு இருக்கிறேன் என்று சொல்ல, கோபி நீ என் அம்மாவை ஏதோ பண்ணுற மாதிரி இருந்தது என்று ராதிகாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications