பாக்கியலட்சுமி சீரியலில் இனி நடக்கப்போவது இதுதானா? திடீரென கோபி வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் நிலைமை?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா மற்றும் பழனிச்சாமிக்கு திருமணம் நடத்தி வைக்க பழனிசாமியின் வீட்டில் முயற்சி செய்தது கோபி மூலமாக பாக்யாவிற்கு தெரிந்திருந்த நிலையில், இது குறித்து பாக்கியா பழனிசாமி இடம் பேசி இருக்கிறார். அதே நேரத்தில் ராதிகாவின் கர்ப்பமும் கலைந்து போயிருக்கிறது. இந்த நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்று கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. காரணம் இத்தனை நாட்களும் பாக்கியாவிற்கும் பழனிச்சாமிக்கும் திருமணத்தை நடத்தி வைத்து விடலாம் என்று பழனிச்சாமியின் அம்மாவும், அக்காவும் முடிவு செய்து அதற்கான முயற்சியில் இருந்தனர். அது போல பழனிச்சாமியும் பாக்கியாவை ஒருதலையாக காதலிப்பது போன்று தான் சுற்றிக்கொண்டு இருந்தார்.

இதனால் இதில் பாக்கியா திருமண விஷயத்தில் என்ன முடிவெடுப்பார்? என்று குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் இன்றைய எபிசோடில் பாக்கியா பழனிசாமியிடம் எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கிறது. என்னுடைய குழந்தைகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இனியாவிற்க்கு திருமணம் ஆகப்போகிறது. எனக்கு என்னுடைய குழந்தைகள் தான் முக்கியம். என்னுடைய வாழ்க்கையில் நான் பட்ட அவமானங்கள் ஏராளம்.
இனி மீதம் இருக்கும் வாழ்க்கையை எனக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும். அதற்கு நீங்கள் நண்பராக எனக்கு இப்போது இருப்பது போலவே துணையாக இருக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லி இருக்க, அதைக் கேட்டு பழனிச்சாமியும் இனி தான் நண்பராக மட்டுமே இருக்கப் போவதாக உறுதி எடுத்து இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க கோபிக்காக பாக்யா வீட்டில் இருந்து கிளம்பி போன ஈஸ்வரிக்கும் ராதிகாவின் அம்மாவிற்கும் வீட்டில் அடிக்கடி சண்டை நடந்து கொண்டே இருக்கிறது.
இன்றைய எபிசோடில் ராதிகா ஆஸ்பிட்டலுக்கு செக்கப் போக வேண்டும் என்று கோபியிடம் சொல்லி இருந்த நிலையில் கோபி ரெஸ்டாரண்டுக்கு போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி போயிருக்கிறார். அப்போது ராதிகா தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் வழியில் கீழே கிடந்த பூ ஜாடியை கவனிக்காமல் மிதித்து விட அதில் தவறி விழுந்ததில் வயிற்றில் அடிபட்டு இருக்கிறது.
இப்படியாக எபிசோடு முடிவடைந்தாலும நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் ராதிகாவின் கர்ப்பம் கலைந்து விட்டது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் ராதிகா உங்க அம்மா தான் என்னை பிடித்து தள்ளிவிட்டார்கள் என்று சொன்னதால் கோபியும் அதை நம்பி ஈஸ்வரியை திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்.
இந்த நிலையில் இந்த சீரியலில் கோபியாக நடிக்கும் நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கோபியாக நான் நடிப்பதை எல்லோரும் பாராட்டுகிறீர்கள். எனக்கு அது சந்தோசம் தான். ஆனால் இனிதான் இந்த சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் வரப்போகிறது. இனி காமெடியை விடவும் அதிகமாக வில்லத்தனம் தான் நான் செய்யப் போகிறேன்.
இந்த சீரியலில் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் இருக்கிறது. அதிலும் பல சென்டிமென்ட் காட்சிகளும் இருக்கிறது. இதுவரைக்கும் எங்களுக்கு ஆதரவு தந்தது போலவே இனியும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அந்த வீடியோவில் சதீஷ் பேசி இருக்கிறார். இதற்கு அவரை பாராட்டி ரசிகர்கள் கமெண்ட்களை குவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications