பார் திறப்பு விழாவால் பாக்யாவுக்கு அதிர்ச்சி! ராமமூர்த்தியால் வந்த பிரச்சனை.. ஈஸ்வரி செய்த ரகளை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். பார் திறப்பு விழாவிற்கு பாக்கியா ஆர்டர் எடுத்ததால் அவருக்கு புது பிரச்சனை வந்திருக்கிறது. மறுபக்கத்தில் ராமமூர்த்தி சொன்ன வார்த்தையால் ஜெனி வருத்தப்படுகிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஹோட்டலில் பாக்யாவிடம் பணி செய்யும் பெண்கள் எல்லோரும் பார் திறப்பு விழாவை பார்த்தாலே பயமாய் இருக்கிறது. இங்கே வந்து யாரெல்லாம் எப்படி பிரச்சனை பண்ணுவாங்கன்னு தெரியலையே என்று புலம்பி கொண்டு இருக்க, பாக்கியா நடப்பது நடக்கட்டும் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது எல்லோரும் சாப்பிட வருகின்றனர்.

அப்போது அவர்கள் முதலில் அமைதியாக எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிறகு கடலை இல்லையா? கொத்துக்கறி இல்லையா? என்று பிரச்சனை செய்ய அதற்கு பாக்யா அதெல்லாம் எங்களுடைய மெனுவில் அவர்கள் சொல்லவில்லை என்று சொல்ல, இதுவெல்லாம் இல்லாமல் ஏன் நீங்க சாப்பாடு போடுறீங்க என்று வந்தவர்கள் பிரச்சனை செய்கிறார்கள்.
அந்த நேரத்தில் பாக்யா ஹோட்டலுக்கு சாப்பிட வருபவர்களும் உள்ளே எல்லோரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து வெளியே போய்விட பாக்யா அவர்களை சமாதானப்படுத்துவதற்காக வெளியே வந்து பார்க்க அங்கு வாசலில் சிலர் சிகரெட் குடித்துக் கொண்டிருக்க அவர்களிடம் இந்த இடத்தில் நின்று சிகரெட் குடிக்காதிங்க என்று சொல்ல, அதற்கு நாங்கள் என்ன உங்க ஹோட்டலுக்குள் வந்து குடிச்சோமா? என்று அவர்கள் பிரச்சனை செய்கிறார்கள்.
அப்போது ஹோட்டலுக்குள் இருந்து பெண்கள் அக்கா இங்கே வாங்க ரொம்ப பிரச்சனை போயிட்டு இருக்குன்னு சொல்ல பாக்யா அங்கே போகிறார். உள்ள எல்லோருக்கும் பதில் சொல்ல முடியாமல் பாக்கியா திணறிக் கொண்டிருக்கும் போது பழனிச்சாமி அங்கு வருகிறார். மறுபக்கத்தில் ஜெனியும் அமிர்தாவும் வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் போது ராமமூர்த்தி குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கிறார்.
அப்போது குழந்தை அழுததும் குழந்தையை ஜெனியிடம் கொடுக்கிறார். அந்த நேரத்தில் அமிர்தா டேபிளில் இருக்கும் பேப்பரை எடுத்து விடலாமா? என்று கேட்க, அதற்கு ராமமூர்த்தி இனிமே நான் பேப்பர் படிக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். எல்லாத்தையும் எடுத்துட்டு போயிடுமா கட்டின பொண்டாட்டி வீட்டுல இருக்கும்போது இன்னொரு பொண்ணு கூட ஒருத்தன் நடிச்சிட்டு இருக்கிறான். இப்போ கட்டுன பொண்டாட்டி நடுத்தெருவுல நிக்குது.
இதெல்லாம் படிக்கும்போதே கஷ்டமா இருக்கு நம்ம வீட்ல கோபின்னு ஒருத்தன் இருக்கானே என்று கோபியை பற்றி திட்டிக் கொண்டிருக்கும் போது ஜெனி முகம் மாறுகிறது. குழந்தை அழுது கொண்டிருப்பதை கூட கவனிக்காமல் சோகமாக இருக்க, அமிர்தா குழந்தையை ஜெனியிடமிருந்து வாங்க போக ஜெனி குழந்தையை நானே பார்த்துக்கொள்கிறேன். என் கையில் இருந்து தானே அழுதுட்டு இருக்குது இருக்கட்டும் என்று முகத்தில் அடித்துவிட்டது போல பேசி விடுகிறார்.
மறுபக்கத்தில் ரெஸ்டாரண்டில் பார் திறப்பு விழாவிற்கு வந்து பிரச்சனை செய்தவர்கள் எல்லோரையும் பழனிச்சாமி சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். அப்போது பார் ஓனர் அங்கு வரும்போது பாக்யா நீங்க சொன்னதை விடவும் அதிகமானோர் சாப்பிட்டு போயிருக்காங்க. அதற்காக இன்னும் பணம் தர வேண்டியது இருக்கும் என்று சொல்ல, அவர் அதெல்லாம் தர முடியாது.. என்னங்க உங்களுக்கு பிசினஸ் கொடுத்து இருக்கிற, இதை கூட பண்ண மாட்டீங்களா என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.
அடுத்ததாக ராதிகா ஈஸ்வரிக்கு சாப்பாடு கொடுக்க தயாராக, கோபி ரெஸ்டாரண்டில் இருந்து சாப்பாடு கொடுத்து அனுப்ப அதை ஈஸ்வரி ராதிகாவை வெறுப்பேற்றியபடியே சாப்பிடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications