இனியாவிற்காக விமல் செய்த செயல்.. பாக்யாவின் அருமையை புரிந்த கோபி.. ராதிகா சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் மூன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். அதில் பாக்கியா இத்தனை வருடங்களாக எப்படித்தான் ஈஸ்வரியை சமாளித்தாரோ என்று முதல்முறையாக கோபி பாக்யாவை நினைத்து பீல் பண்ணுகிறார். அதே நேரத்தில் இனியா மற்றும் விமல் பழகுவதை பார்த்து பாக்கியாவும் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் இனியா காலேஜில் சோகமாக இருக்க, அங்கு வரும் விமல் இனியாவிடம் என்ன ஆச்சு என்று கேட்க, அதற்கு இனியா நான் இன்னும் ப்ராஜெக்ட் செய்யல. நாளைக்கு சப்மிட் பண்ணனும் என்று சொன்னதும் விமல் தான் செய்த ப்ராஜெக்ட்டை எடுத்துக் கொடுக்க அதைப் பார்த்து இனியா சப்ரைஸ் ஆகுகிறார். பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே பாக்கியா வருகிறார்.

அப்போது விமலிடம் நீ என்ன இங்கே என்று கேட்க அதற்கு விமல் இனியா ப்ராஜெக்ட்ல டவுட்டுன்னு சொன்னாங்க அதான் கிளியர் பண்ணிட்டு போலாம்னு வந்திருக்கிறேன் என்று சொல்ல, அதற்கு நீ இங்கே வந்தது உங்க மாமாவுக்கு தெரியுமா? என்று பாக்யா கேட்டதும் இதையெல்லாமா சொல்லுவாங்க என்று விமல் சொல்ல நீ உங்க மாமாவுடைய பாதுகாப்பில் தானே இப்போ இருக்க, அதனால நீ எங்க போற, வர்றேங்கறது உங்க மாமாவுக்கு தெரியணும்.

நீ சொல்றியோ இல்லையோ இதை நான் சொல்லப்போறேன் என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து பாக்யா இனியாவிடம் உனக்கு ப்ராஜெக்ட்டில் டவுட் என்றால் எழிலிடமோ, செழியனிடமோ கேட்கலாமே என்று சொல்ல அதற்கு இனியா எதார்த்தமா பேசும் பேசும்போது ப்ராஜெக்ட் பத்தி பேசினேன் என்று சொல்ல, அதற்கு பாக்கியா நீ இன்னமும் விமல் கிட்ட பேசிகிட்டு தான் இருக்கியா? என்று மீண்டும் கேட்க அதற்கு இனியா எப்பவாவது தான் பேசுவேன் என்று சொன்னதும்,
அம்மாவை கூட்டிட்டு போயிரு! பாக்யாவிடம் சரணடைந்த கோபி.. தாய் பாசத்தில் ஈஸ்வரி சொன்ன வார்த்தை
பாக்யா சும்மா தானே பேசிட்டு இருக்குற? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக அதற்கு இனியா கேஸ்வலா தான் அம்மா பேசுறேன் என்று முடித்து வைக்கிறார். பிறகு மறுபக்கத்தில் வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது ஜெனி அமிர்தாவிடம் இப்பல்லாம் அதிகமாக கோபப்படுறேன். நான் ஏன் இப்படி பண்றேன்னு எனக்கே தெரியல என்று எழிடம் மன்னிப்பு கேட்கிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த செழியன் நைட் டின்னருக்கு வெளியே கூட்டிட்டு போக போறதாக சொல்ல, அதற்கு பாக்யா போயிட்டு வாங்க பாப்பாவை நான் பார்த்துக்கிறேன் என்று அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் கோபி வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரி வழக்கம்போல பிரச்சனைகளை செய்ய, ராதிகா உங்க அம்மா வந்ததும் தான் இவ்வளவு பிரச்சனை பார்த்தீர்களா? என்று சொல்கிறார்.

அதோடு பாக்யா எப்படித்தான் இவங்களை சமாளிச்சாங்களோ என்று சொல்ல, கோபியும் தனியாக உட்கார்ந்து ராதிகா சொல்றது உண்மைதான் 27 வருஷமா பாக்யா அம்மாவை எப்படி சமாளிச்சான்னு தெரியலையே என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். பிறகு செழியன் ஜெனியை கூட்டிட்டு வந்து சர்ப்ரைஸ் செய்கிறார். ஜெனி டேபில் டெக்ரேசன் செய்து வைத்திருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார். அப்போது ஜெனிக்கு பிடித்த உணவுகளை எல்லாம் செழியன் ஆர்டர் செய்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications