அம்மாவை கூட்டிட்டு போயிரு! பாக்யாவிடம் சரணடைந்த கோபி.. தாய் பாசத்தில் ஈஸ்வரி சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் மூன்றாம் தேதி முதல் 7ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராதிகா வீட்டில் ஈஸ்வரியை வைத்து பிரச்சனை வந்து கொண்டே இருப்பதால் கோபி, பாக்கியா விடம் தன்னுடைய அம்மாவை கூட்டிட்டு போகும் படி கெஞ்சுகிறார்.
அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கோபியை வீட்டை விட்டு துரத்தியதால் கோபி தன்னோடு தன்னுடைய அம்மாவை ராதிகா வீட்டிற்கு கூட்டிட்டு போயிருந்தார். அங்கு ராதிகாவின் அம்மா கமலாவிற்கும் ஈஸ்வரிக்கும் தினமும் சண்டை சச்சரவு தான். ஈஸ்வரி கமலாவை வீட்டில் இருந்து துரத்த வேண்டும் என்று பிளான் செய்து கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் கமலா எப்படியாவது ஈஸ்வரியை வீட்டை விட்டு துரத்தி விட வேண்டும் என்று பிரச்சனை பண்ணிக் கொண்டிருக்கிறார்.

இதற்கு இடையில் ராதிகாவும் கோபியும் மாட்டிக்கொண்டு திணறிக் கொண்டிருக்கின்றனர். இதனால் கோபமான ராதிகா உங்க அம்மாவை நாளைக்கு வீட்டை விட்டு வெளியே போக சொல்லுங்க என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் கோபி இத்தனை நாட்களாக என்னுடைய அம்மா இந்த வீட்டில் தான் இருப்பாங்க எனக்கு அவங்க முக்கியம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆனால் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரியிடம் நீங்க பிரச்சனை பண்ணாம இருங்கம்மா உங்களால தான் இந்த வீட்டில் சண்டை வருது என்று சொன்னதால் ஈஸ்வரி கோபப்பட்டு பெட்டியை தூக்கிக்கொண்டு கிளப்பிவிட்டார். பிறகு ஒரு வழியாக கோபி ஈஸ்வரியை சமாதான படுத்தி வீட்டில் வைத்திருக்கிறார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் பாக்கியாவும் கோபியும் எதிரெதிர் பக்கத்தில் இருந்து வாக்கிங் போய்க் கொண்டிருக்கின்றனர்.

அப்போது பாக்கியாவை பார்த்த கோபி ஓடி வந்து பாக்யா அந்த வீட்டில அம்மாவுக்கும் ராதிகா அம்மாவுக்கும் டெய்லி சண்ட, நீ வந்து அம்மாவை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியுமா? நீ கூப்டா அம்மா கண்டிப்பா வருவாங்க.. என்று சொல்ல அதற்கு பாக்கியா "சாரி பாஸ்.. முடியாது" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். அடுத்த கட்டத்தில் பாக்யாவும் ஈஸ்வரியும் கோவில் ஒன்றில் சந்தித்துக் கொள்கின்றனர்.
அப்போது பாக்கியா பெரிய கேரியலில் சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க அதற்கு ஈஸ்வரி எனக்கு ஒன்னும் வேணாம் என்று சொல்ல, பாக்கியா அப்போ இங்கேயே வச்சுட்டு போங்க என்று சாப்பாடை அங்கேயே வைத்துவிட்டு கோயிலை சுற்றி கும்பிடுவதற்காக போகிறார். பிறகு கோயிலை சுற்றி விட்டு வரும்போது ஒரு இடத்தில் இருந்து ஈஸ்வரி சாப்பாடை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறதை பார்க்கிறார்.

அதோடு நல்ல சாப்பாட்டை சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு என்று ஈஸ்வரி பீல் பண்ணிக் கொண்டிருப்பதை பார்த்து பாக்கியா கண்கலங்குகிறார். பிறகு நம்ம வீட்டுக்கு வந்துடுங்க அத்தை என்று பாக்கியா கூப்பிட, அதற்கு ஈஸ்வரி இல்ல... இப்ப நான் வந்தா கோபி ரொம்ப வருத்தப்படுவான், என்று சொல்லிக் கொண்டிருக்க அதை கேட்டு பாக்கியா வருத்தப்படுகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைகிறது. வழக்கம் போல பாக்கியா இந்த முறையும் ஈஸ்வரி இடம் சொல்லுங்க அத்தை என்று வந்திருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications