ஜெனி விஷயத்தில் ராமமூர்த்தி சொன்ன வார்த்தை..பாக்யா மீண்டும் ஜெயிச்சாச்சு.. ஈஸ்வரி இப்படி கேட்கலாமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 11ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் அமைச்சர் பல தடைகளை தாண்டி பாக்யாவின் ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவிற்கு வந்ததை பார்த்து கோபி அதிர்ச்சியில் இருக்கிறார். அதே நேரத்தில் அமைச்சர் பாக்யாவின் ரெஸ்டாரண்டை புகழ்ந்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் போஸ்ட் போட்டதால் அது வைரல் ஆகிவிடுகிறது.
அதைத்தொடர்ந்து ஜெனி மற்றும் செழியன் விஷயத்தில் ராமமூர்த்தி சில வார்த்தைகளை சொல்ல அதற்கு அதைக் கேட்டு ஜெனி மனம் மாறுகிறார். இதில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கடைசி நேரத்தில் அமைச்சர் வந்துவிட்டதால் கோபி உச்சகட்டமாக அதிர்ச்சியாகி கட்டுப்படைந்து அங்கிருந்து வெளியே வருகிறார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரி, ராமமூர்த்தி, மினிஸ்டர், அமிர்தா, ஜெனி, செல்வி என எல்லோரும் விளக்கை ஏற்றி வைக்கிறார்கள். பிறகு பாக்யா எல்லோருக்கும் நன்றி சொல்லி பேசுகிறார். மினிஸ்டரும் பாக்கியாவை புகழ்ந்து பேசிவிட்டு போகிறார்.
அதை தொடர்ந்து எல்லோரும் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது செழியன் ஜெனியை பார்த்துக்கொண்டே இருக்க அதை பார்த்து இனியா இதோடு 72 முறை நீங்க அக்காவை பார்த்துக்கிட்டே இருக்கீங்க என்று சொல்லி செழியனை கலாய்க்கிறார். அதோடு ஜெனி இடமும் அக்கா அண்ணன் தான் உங்களை இத்தனை முறை பார்க்கிறாரே நீங்கள் ஒரு முறையாவது திரும்பி பாருங்கள் என்று சொல்ல அதற்கு அமிர்தா பேசாமல் சாப்பிடு என்று இனியாவை அதட்டுகிறார்.

அதற்கு வந்தவர்கள் எல்லோரும் சாப்பிட்டு சாப்பாடு சூப்பராக இருக்கிறது என்று பாராட்டி வெளியே கிளம்புகின்றனர். அப்போது இனியா அமைச்சர் நம்ம ரெஸ்டாரண்ட்டை பாராட்டி போஸ்ட் போட்டு இருக்காங்க என்று காட்ட எல்லோரும் அதை பார்க்க வரும்போது ஜெனி மற்றும் செழியன் மோதிக் கொள்கின்றனர். இருந்தாலும் இருவரும் பேசாமல் அமைதியாக இருக்க செழியன் குழந்தையை பார்க்க தவித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது ஜெனி வீட்டுக்கு கிளம்புவதாக சொல்ல எல்லோருடைய முகமும் மாறுகிறது. ஈஸ்வரி கண்கலங்கியபடியே என்னுடைய பேத்தியையே என்னால் ஆசை தீர கொஞ்ச கூட முடியல என்று வருத்தப்படுகிறார். அதைத் தொடர்ந்து ஜெனி வீட்டுக்கு கிளம்புவதற்காக எழில் கேப் புக் பண்ண முயற்சி செய்ய கேப் கிடைக்காததால் ராமமூர்த்தி செழியனை கூட்டிட்டு போய் ஜெனியை விட சொல்கிறார்.

அதற்கு ஜெனி வேண்டாம் என்று சொல்ல அதற்கு ராமமூர்த்தி சண்டை எல்லாம் அப்புறம் இருக்கட்டும். நீ நம்ம விட்டு பொண்ணு எப்படியோ போகட்டும்னு விட முடியாது என்று சொல்லி செழியனை அனுப்பி வைக்கிறார். ஜெனி எல்லோரிடமும் போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications