பாக்யாவுக்கு போட்டியாக கோபி தொடங்கிய பிசினஸ்.. ஆரம்பமே அமோகம்.. எழில் சொன்னதை கேட்டீங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யாவுக்கு போட்டியாக கோபி கிச்சன் பிசினஸ் தொடங்கி இருக்கிறார். அதே நேரத்தில் கோபி தொடங்கிய பிசினஸால் பாக்யாவுக்கு அதிர்ச்சி கிடைக்கிறது. அதே நேரத்தில் கோபியின் வளர்ச்சியை பார்த்து ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் பாக்யாவின் ரெஸ்டாரண்டின் திறப்பு விழாவிற்கு கோபி போகவில்லை என்று சொல்லிவிட்டு போயிருப்பதை இனியா காட்டிய போட்டோவால் ராதிகா தெரிந்து கொள்கிறார். இதனால் கோபியிடம் அந்த போட்டோவை காட்டி அடித்து சண்டை போடுகிறார். அதே நேரத்தில் பாக்யா தன்னுடைய ரெஸ்டாரண்டில் முதல் நாளிலேயே கூட்டம் அமோகமாக இருந்தது என்று சந்தோஷமாக வீட்டில் வந்து சொல்ல எல்லோரும் பாக்யாவை பார்த்து பெருமைப்பட்டு சந்தோஷப்படுகின்றனர்.

மறுபக்கத்தில் ஜெனி செழியனோடு காரில் வீட்டிற்கு போய்க்கொண்டிருக்கும் போது ஜெனி இடம் செழியன் பேச வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால் ஜெனி நீ என்னிடம் பேசினால் நான் காரை விட்டு இறங்கி விடுவேன் என்று மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் செழியன் ஜெனியை வீட்டில் கொண்டு போய் விடுகிறார். அப்போது செழியனை பார்த்ததும் ஜெனியின் அப்பா ஜோசப் கோபப்பட்டு செழியனை அடிக்க போகிறார்.
பிறகு ஜெனி மற்றும் அவருடைய அம்மா ஜோசப்பை வீட்டிற்கு கூட்டிட்டு போகின்றனர். அப்போது ஜெனியிடம் அவர்கள் நீ இந்த செழியனை மறந்துவிடு அவனை விவாகரத்து செய்ததும் உனக்கு வேறு திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்ல அதற்கு ஜெனி மறுத்துவிடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்திருக்கும் நிலையில் அதைத்தொடர்ந்து மார்ச் இரண்டாம் தேதியில் இருந்து 16ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

அதில் கோபி தன்னுடைய அம்மா ஈஸ்வரி இடம் நான் மறுபடியும் புது பிசினஸ் தொடங்கலாம்னு இருக்கேம்மா அதுக்கு பேரு ஈஸ்வரி கிட்சன் என்று சொல்கிறார். அதை கேட்டு பாக்யா அதிர்ச்சியடைய, ராதிகா சந்தோஷப்படுகிறார். அடுத்ததாக கோபி பிசினஸ் தொடங்க போவதை கேட்டதும் எழில் நீங்க என்ன புதுசா கிச்சன் பக்கம் எல்லாம் வரீங்க? எங்க அம்மாவுக்கு போட்டியா வர்றீங்களா? என்று கேட்க அதற்கு கோபி உங்க அம்மாவை நான் ஒரு ஆளாவே மதிக்கிறது இல்லடா...
அப்புறம் எப்படி எங்களுக்குள்ள போட்டி என்று சொல்ல அதற்கு எழில் இப்படியெல்லாம் பேசாதீங்க என்று மிரட்டுகிறார். அடுத்த கட்டத்தில் கோபி திறக்கும் ஈஸ்வரி கிச்சன் ரெஸ்டாரண்ட்க்கு ஈஸ்வரி, ராமமூர்த்தி, இனியா, செழியன் என எல்லோரும் வருகின்றனர். ரெஸ்டாரண்டை ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் திறந்து வைக்கின்றனர்.

அந்த நேரத்தில் பாக்யா ரெஸ்டாரண்டில் எல்லா சாப்பாடும் அப்படியே இருப்பதை பார்த்து என்ன எல்லா சாப்பாடும் அப்படியே இருக்கு யாருமே சாப்பிட வரல என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கோபி தொடங்கி இருக்கும் ஈஸ்வரி கிச்சனில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதை பார்த்ததும் ஈஸ்வரி முதல் நாளே நல்ல வியாபாரம் என்று ராமமூர்த்தியிடம் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்.

அதோடு கோபி இடம் உன்னை இந்த மாதிரி பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் கோபி தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு கூட்டம் வர வேண்டும் என்பதற்காக என்ன பிளான் செய்து இருக்கிறார் என்று தெரியவில்லை என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications