ஜோசப் மீது உள்ள கோபத்தால் கோபி எடுத்த முடிவு.. பாக்கியாவும் மாறிவிட்டாரே! அதிர்ச்சி கொடுத்த ஈஸ்வரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 20ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ஜெனிக்கு அவருடைய அப்பா இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொன்னதை தொடர்ந்து கோபியும் ஈஸ்வரியும் சேர்ந்து செழியனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுத்து இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் இப்போதும் தன்னுடைய மறுப்பை கோபமாக வெளி காட்டாத பாக்கியா செழியனை சமாதானம் செய்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா ஜெனி வீட்டுக்கு போன செழியன் இன்னும் வரவில்லையே என்று பதட்டத்தோடு நின்று கொண்டிருக்க அப்போது எழில் செழியனை கூட்டிக்கொண்டு வருகிறார். ஆனால் செழியன் உடம்பெல்லாம் அடிபட்டு இருப்பதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அப்போது எல்லோரும் என்னாச்சு என்று விசாரிக்க செழியன் ஜெனியின் அப்பா அடித்த விஷயத்தை சொல்ல அதை கேட்டு கோபி அவருடைய வீட்டுக்கே சென்று சண்டை போட போவதாக கிளம்புகிறார். ஆனாலும் எல்லோரும் தடுத்து ஜெனியின் அப்பா ஜோசப்பிற்கு போன் போட சொல்லுகின்றனர்.
முதலில் ஜோசப் போனை எடுக்காமல் இருக்க ஈஸ்வரி அவன் ஃபோனை எடுக்கிற வரைக்கும் விடாத என்று சொல்ல கோபி ஃபோனை போட்டுக் கொண்டே இருக்கிறார். அதனால் ஒரு கட்டத்தில் ஜோசப் போனை எடுக்கிறார். அப்போது கோபி ஈஸ்வரி என எல்லோரும் செழியனுக்கு கேட்க ஆள் இல்லைனு இப்படி அடிச்சு இருக்கீங்களா? உங்க ரவுடித்தனத்தை காட்டுறீங்களா? என்று திட்டுகின்றனர்.

அதற்கு ஜோசப் நான் ரவுடி தனத்தை நான் காட்டி இருந்தா அவனே என்னைக்கோ கையை காலை உடைத்து போட்டு இருப்பேன் என்று மிரட்டுகிறார்கள். அதோடு இனி செழியன் மட்டுமல்ல அந்த வீட்டில் இருந்து யாரும் இங்க வரக்கூடாது என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி நாங்க செழியனுக்கு வேற பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கு வச்சிக்கிறோம் என்று மிரட்டுகிறார்.

அதோடு உங்க குடும்பம் நல்லா இருக்காது என்று சாபம் கொடுக்கிறார். அப்போது பாக்கியா அமைதியாக இருங்க இப்படி எல்லாம் பேசுறது பிரச்சனைக்கு சரியான தீர்வு இல்ல, ஜெனியும் செழியனும் மீண்டும் சேர்ந்து வாழணும் என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி அப்படியெல்லாம் இனி இவங்க வாழ முடியாது என்று சொல்கின்றனர். பிறகு மீண்டும் கோபி நான் ஜோசப் வீட்டுக்கு போறேன் என்று கிளம்ப ராதிகா இப்போ போனா சரிப்பட்டு வராது என்று தடுத்து நிறுத்துகிறார்.
அதைத் தொடர்ந்து செழியன் ரூமுக்கு போன பாக்கியா அவரிடம் அடிபட்ட காயத்தை பார்த்து கண் கலங்குகிறார். அதோடு ஜெனியும் நீயும் சேர்ந்து வாழும் நாள் நெருங்கிடுச்சு. ஜெனி இப்போ மெல்ல மெல்ல மனம் மாறிட்டே வரா என்று நம்பிக்கை கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications