ஈஸ்வரிக்கு இந்த அவமானம் தேவையா? பாக்யா செய்த அதிரடி! செழியனும் இப்படி மாறிட்டாரே! செம ட்விஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 22ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் செழியனுக்கு ஈஸ்வரி இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்காக பெண் வீட்டாரை வீட்டிற்கு வர வைத்திருக்கும் நிலையில் செழியன் மற்றும் பாக்யா இருவரும் கோபி ஈஸ்வரிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
அதே நேரத்தில் இதுவரைக்கும் "நான் என்ன பண்ணட்டும் அத்தை" என்று கேள்வி பதில் கேள்வி கேட்டு கொண்டிருந்த பாக்கியா இன்று தன்னுடைய மகனுக்காக தைரியமான முடிவு எடுக்க அதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா-கணேஷ் பிரச்சனை முடிவடைந்ததும் செழியன்-ஜெனி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் மாலினியால் ஜெனி மற்றும் செழியன் விவாகரத்துக்கு கோர்ட்டில் அப்ளை செய்திருக்கின்றனர். அதே நேரத்தில் ஜெனிக்கு ஜோசப் இன்னொரு கல்யாணத்தை செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்க ஈஸ்வரி எனக்கு இன்னொரு கல்யாணம் வேண்டாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்.
அதே நேரத்தில் எனக்கு இன்னொரு கல்யாணம் வேண்டாம் என்று செழியன் செழியன் பேச்சை ஈஸ்வரி கேட்காததால் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியே போய் மாலினியை மிரட்டி இருக்கிறார். அப்போது நான் உன்னிடம் கல்யாணம் ஆனதை பற்றி சொல்லவில்லையா? நீதானே நான் வேண்டும் என்று என் பின்னாடி சுத்துன? நான் நீ வேண்டாம் என்று எத்தனையோ முறை அவாய்ட் பண்ணுனேன் இந்த பிளைன்ட் எனக்கு வேண்டாம் என்று கம்பெனியில் உன்ன பத்தி சொன்ன போது கூட அவங்க அதை கண்டுக்கல.
இன்னொரு முறை என்னுடைய வாழ்க்கையில் நீ தலையிட்ட உன்னை கொலை பண்ணிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதுவரைக்கும் செழியன் இந்தளவிற்கு கோபப்பட்டு பேசாத போது இப்போது செழியனின் இன்னொரு முகத்தை பார்த்த மாலினி அதிர்ச்சியில் இருக்கிறார். இப்படியான நிலையில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் செழியனுக்கு இன்னொரு கல்யாணம் செய்ய பெண் வீட்டார் வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.
அப்போது ஈஸ்வரி என்னுடைய பேரனுக்கு தான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ண போறோம் என்று சொல்லி அறிமுகப்படுத்த செழியன் அந்த இடத்தில் எதுவும் பேசாமல் அங்கிருந்து கோபமாக போய்விடுகிறார். அதற்கு பிறகு பாக்கியாவும் இனியாவும் வீட்டிற்கு வர அவர்களை பார்த்ததும் ஈஸ்வரி பெண் வீட்டுக்காரரிடம் இதுதான் மாப்பிள்ளையின் அம்மா என்று சொல்ல அதை கேட்டு அதிர்ச்சியான பாக்கியா அங்கிருந்து வேகமாக போய் செழியனை கூட்டிட்டு வருகிறார்.
எல்லார் முன்பும் சரியா நீ தான் உன்னுடைய வாழ்க்கைக்காக பேசணும்.. உனக்கும் ஜெனிக்கும் இன்னும் விவாகரத்து ஆகல. அதற்குள் இவங்க திருமணம் செய்ய பாக்குறாங்க என்று சொல்லு என்று பாக்யா சொல்ல அதை கேட்டு கிளிப்பிள்ளை போல அப்படியே செழியனும் ஆமா, நான் எப்போதும் ஜெனியை தான் காதலிக்கிறேன் என்று திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்ல வந்திருந்தவர்கள் முன்பு ஈஸ்வரியும் கோபியும் அவமானப்படுகின்றனர். இப்படியாக ப்ரோமோ முடிவு அடைந்திருக்கும் நிலையில் இதை பார்த்த ரசிகர்கள் அப்பாடா பாக்யாவுக்கு இப்பவாவது சுயமா முடிவெடுக்கனும்னு தோணுச்சு அதுவே பெரிய விஷயம் என்று பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications