ஜெனி வீட்டில் குழப்பம் பண்ணிய பாக்யா! போன் போட்டு மரியம் சொன்ன தகவல்.. மறுபடியும் முதலில் இருந்தா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். அதில் ஜெனியை பார்க்க போன பாக்யா செழியனுக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதை பற்றி சொல்ல, அதனால் ஜெனி குழப்பத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் ஜெனிக்காக அவருடைய அம்மா மரியம் சில முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்.
மறுபக்கத்தில் பாக்யா தன்னுடைய மகனின் வாழ்க்கைக்காக தான் எடுத்திருக்கும் முடிவு தன்னுடைய குடும்பத்திற்கு தெரிய வேண்டாம் என்று மீண்டும் கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்கி இருக்கிறார். என்ன நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஜோசப் வீட்டுக்கு போன பாக்யாவை ஜோசப் உங்களுக்கு இவ்வளவுதான் மரியாதை வெளியே போங்க என்று வீட்டை விட்டு துரத்த மரியமும் சேர்ந்து பாக்யாவை வீட்டை விட்டு போக சொல்கிறார். பிறகு ஜெனி பாக்யாவிடம் பேசுவதற்காக முயற்சி செய்ய அதற்கு ஜோசப் தடுத்து நிறுத்தி விடுகிறார். பாக்யா போன பிறகு ஜெனி கதறி அழுது கொண்டிருக்கிறார்.

அப்போது ஜெனி எப்படி செழியன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்? அப்போ என்னுடைய வாழ்க்கை அவ்வளவுதானா? செழியன் மீது நான் கோபத்தில் இருக்கிறேன்... அவ்வளவு தானே? அதுக்குன்னு அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவானா? என்று புலம்பிக்கொண்டே இருக்க அதற்கு ஜோசப் நான் உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க போறேன் என்று சொல்ல, அதற்கு கோபமான ஜெனி என்னால இன்னொரு கல்யாணம் பண்ண முடியாது டாடி என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் போய் அழுது கொண்டிருக்கிறார்.

பிறகு மரியத்திடமும் செழியன் எப்படி இன்னொரு கல்யாணம் பண்ண சம்மதிச்சான் என்று அழுது கொண்டே இருக்கிறார். மறுபக்கத்தில் பாக்கியா வீட்டிற்கு வந்து ஈஸ்வரி இடம் சாப்பிட்டீங்களா? என்று கேட்க அதற்கு ஈஸ்வரி நீ பண்ண வேலைக்கு எனக்கு பசியே இல்லாமல் போயிடுச்சு என்று கோபப்படுகிறார். பிறகு பாக்யா ராமமூர்த்தி இடம் தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்க அவர் பாக்யா உனக்கு செழியன் விஷயத்தில் என்ன செய்யணும்னு தோணுதோ அதை செய் என்று சொல்கிறார்.

அடுத்ததாக பாக்யா எழில் மற்றும் அமிர்தாவிடம் ஜெனி வீட்டுக்கு போனது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஜெனியின் அம்மா மாதிரியும் போன் போட்டு செழியன் கல்யாணம் பற்றி தெரிந்ததும் ஜெனி அழுது கொண்டே புலம்பி கொண்டிருப்பதைப் பற்றி சொல்கிறார். பிறகு இனிமே இவர்கள் இரண்டு வரையும் சந்தித்து பேச வைக்கிறது தான் சரியா இருக்கும் அதற்கான ஏற்பாடை நான் பண்ணுறேன் என்று சொல்ல பாக்யா சந்தோஷப்படுகிறார்.

பிறகு மறுநாள் காலையில் மரியம் லொகேஷனை அனுப்பி வைக்க பாக்யா செழியனை கூட்டிக்கொண்டு எழிலோடு வெளியே கிளம்புகிறார். செழியனுக்கு எங்கே போகிறோம் என்று தெரியாததால் அவர் விசாரித்துக் கொண்டே இருக்க அதற்கு எழில் அம்மா எங்க கூப்பிட்டா நல்ல பையனா உடனே கிளம்பி போனும் என்று சொல்லி மூவரும் கிளம்பி போக, அப்போது ராமமூர்த்தி, கோபி, ஈஸ்வரி எல்லோரும் சோபாவில் உட்கார்ந்து இருக்கின்றனர். அவர்கள் எங்க போறீங்க என்று கேட்க அதற்கு மூன்று பேரும் மூன்று பதில் சொல்ல எல்லோரும் சிக்கிக் கொள்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications