கோபியிடம் பாக்கியா கேட்ட உருப்படியான கேள்வி.. ஜெனிக்கு வந்த சிக்கல்.. கண் கலங்கிய செழியன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் இரண்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி இதில் விரிவாக பார்க்கலாம். அந்த வகையில் பாக்யாவிடம் மீண்டும் அபசகுணமாக பேசும் கோபிக்கு பாக்கியா பதிலடி கொடுத்து அவமானப்படுத்துகிறார். அதே நேரத்தில் செழியன் தன்னுடைய குழந்தையை நினைத்து கண்கலங்கி கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து பாக்கியா ஜெனி வீட்டிற்கு போய் இருந்த நிலையில் அங்கு அவருக்கு அவமானம் கிடைக்கிறது. ஆனாலும் அதை கண்டுகொள்ளாத பாக்கியா ஜெனிக்காக பொறுத்துக் கொள்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி ராதிகாவிடம் பசங்க அம்மா அப்பா என எல்லோரும் தன்னை பற்றி கவலைப்பட்டு தன்னிடம் பாசமாக நடந்து கொள்வதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது இவங்க எல்லாம் எனக்கு கிடைச்சதில் நான் ரொம்ப கொடுத்து வச்சவன் என்று பேசிக் கொண்டிருக்க அதில் எந்த இடத்திலும் தன்னை பற்றி பேசாததால் ராதிகா கோபியிடம் கோபப்படுகிறார்.
அதைத் தொடர்ந்து ஈஸ்வரி டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கு அப்பா மகன் பாட்டு ஒளிபரப்பாகிறது. அதைக்கேட்ட செழியன் கண்கலங்கி ரூமுக்கு சென்று விட அதை பார்த்து பாக்கியா செழியனுக்கு ஆறுதல் கூறுகிறார். பிறகு கோபி பாக்கியாவிடம், நீ ஆரம்பித்து வைத்த பிசினஸ் எல்லாமே பாதியில் தான் முடிஞ்சிருக்கு. அதுபோல இப்போ பிசினஸ் ஆரம்பிச்சிருக்கு.

அதுவும் பாதியிலேயே முடிஞ்சிரும். இந்த ஓப்பனிங்கும் அப்படித்தான் இருக்கும் என்று வம்பு இழுக்கிறார். அதற்கு முதலில் பாக்கியா பிரச்சினை வேண்டாம் என்று கோபியை விட்டு விலக அதற்கு விடாமல் கோபி பேசிக்கொண்டு இருக்க கோபமான பாக்கியா முட்டி மோதி இப்ப என்கிட்ட ஒரு வேலை இருக்கு சிலருக்கு அது கூட இல்ல... நான் வீட்டில் பல அவமானங்களையும் தாண்டி பிள்ளைகள் மாமனார் மாமியார் எல்லாவற்றையும் பார்த்து ஒரு வேலையில் இருக்கிறேன்.
ஆனால் சிலர் டிப் டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு எழுந்து வந்ததும் சாப்பிட்டு உடனே கிளம்பி போயிருவாங்க. அவங்களுக்கு ஆபீஸ்ல தான் இப்ப பெரிய பூட்டு தொங்குது என்று அவமானப்படுத்த கோபி அதற்கு கோபப்படுகிறார். அப்போது அதற்கு பாக்கியா பார்த்துப் பார்த்து பிபி அதிகமாகி ஹார்ட் அட்டாக் வந்துட போகுது. அப்புறம் ஹார்ட் பேஷண்ட் ஆகிடுவீங்க என்று பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி போகிறார்.

அடுத்த கட்டத்தில் பாக்யா மற்றும் இனியா இருவரும் ஜெனி வீட்டிற்கு வந்து இன்விடேஷன் கொடுக்க ஜெனியின் அப்பாவும் அம்மாவும் கோபப்பட்டு திட்டுகின்றனர். அதற்கு பாக்யா கேஸ் ஒரு பக்கம் இருக்கட்டும் எனக்கு ஜெனி மேல உண்மையான அன்பும் அக்கறையும் இருக்கு அதனால இன்விடேஷன் கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை. நான் கொடுக்கிறேன் ஆனால் வருவதும் வராததும் ஜெனியோட இஷ்டம் என்று சொல்லி பத்திரிக்கையை அங்கே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications