கோபிக்கு இந்த அவமானம் தேவைதான்! சபாஷ் ராதிகா.. ராமமூர்த்தி இப்படி சொல்லிட்டாரு.. பாவம் பாக்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 15ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் கோபி எங்க அம்மா சொல்லாம நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என்று பிரச்சனை செய்து கொண்டு இருக்க அதற்கு ஈஸ்வரி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா, இனியா, ஜெனி, அமிர்தா எல்லோரும் கிச்சனில் இருக்கும்போது ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் ஹாலில் உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது அங்கு வரும் கோபி ஈஸ்வரியிடம் என்னை இந்த வீட்டை விட்டு வெளியே போக சொல்லுறாங்க. நான் உங்க சந்தோஷத்துக்காக தான் இந்த வீட்டுக்கு வந்தேன். அவன் எப்படி என்ன வீட்டை விட்டு போக சொல்லலாம்? என்று கேட்க,

அதற்கு ராமமூர்த்தி தலையும் இல்லாம வாலும் இல்லாம சொன்னா என்ன அர்த்தம்? யார் உன்னை போகச் சொன்னது என்று கேட்க அந்த நேரத்தில் எழிலும் செழியனும் மாடியில் விருந்து கீழே வருகின்றனர். எழில் நான் தான் சொன்னேன் என்று சொல்ல ராமமூர்த்தி சரியா தான சொல்லியிருக்கான் என்று கேட்க கோபி ஈஸ்வரியிடம் நீங்க சொல்லுங்கம்மா நீங்க சொல்லி உங்களுக்காக தானே நான் இந்த வீட்டுக்கு வந்தேன்.
அவன் எப்படி என்னை போக சொல்லலாம் என்று மீண்டும் கேட்க ஈஸ்வரி எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். அதற்கு எழில் திரும்பவும் நீங்க இங்க இருக்க கூடாது வெளியே போங்க என்று சொல்ல, அதற்கு கோபி என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல நீ யாரு? இது என்னுடைய வீடு. நான் கட்டுன வீடு என்று பேச இதைக் கேட்டவுடன் கிச்சனிலிருந்து பாக்யா கோபமாக வெளியே வருகிறார்.

இது என்னுடைய வீடு. எங்க எல்லாரிடமும் இருந்த கடைசி பணம் வரைக்கும் போட்டு வாங்கின வீடு. பணத்தை வாங்கிட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல இந்த வீட்டை என் பேருக்கு மாத்தி கொடுத்தது ஞாபகம் இல்லையா? என்று அதிர்ச்சி கொடுக்கிறார். அதற்கு கோபி நீங்க சொன்னா நான் போயிடனுமா? எங்க அம்மாவுக்காக தான் இங்க வந்தேன். என் பையன் செழியன் அமைதியா தான் இருக்கிறான் என்று சொல்ல,
அதற்கு செழியன் அமைதியா இருக்கிறேன் என்றால் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன்னு அர்த்தம் கிடையாது. அவன் பேசுறது சரியா இருக்கு அதனால்தான் நான் அமைதியாக இருக்கேன் என்று அதிர்ச்சி கொடுக்க கோபி இனியா விடம் பேச போகும்போது இனியா நீங்க இங்க இருக்கிறது எனக்கு பிடிக்கல டாடி எரிச்சலா இருக்கு, உங்கள சுத்தமா எனக்கு பிடிக்கல என்று பாக்யா பக்கத்தில் போய் நிற்கிறார்.

அடுத்து ஈஸ்வரியும் பிள்ளைங்க ஏதாவது பண்றதுக்குள்ள இங்கிருந்து நீயா வெளிய போயிடு என்று சொல்ல கோபி உடைந்து போய் கண்ணீரோடு நிற்கிறார். பிறகு ராதிகா மாடிக்கு சென்று தன்னுடைய துணிமணிகளை எல்லாம் எடுத்து வைக்க பின்னாடியே கோபி வந்ததும் நான் சொன்னபோது நீங்க கிளம்பி இருந்தா இந்த அவமானம் உங்களுக்கு தேவையா? என்று திட்ட அதற்கு கோபி என் பொண்ணு இனியா என்னை டாடி டாடி சொல்லுவா அவ கூட இப்போ நீங்க வேண்டான்னு சொல்லுற என்று சொல்ல அதற்கு ராதிகா உங்கள பத்தி யோசிக்காதவங்களை பற்றி நீங்க யோசிச்சுட்டே இருக்கீங்க.
இனிமே என்னால் இந்த வீட்ல இருக்க முடியாது. நீங்க வேணா இங்கே இருந்து அவமானப்பட்டுக்கோங்க என்று சொல்கிறார். அதற்கு கோபி கடைசியாக ஒரு முறை அம்மாகிட்ட பேசுகிறேன் என்று சொல்ல இது பாக்கியா வீடு அவங்க வெளியே போங்கன்னு சொல்லிட்டாங்க. இதற்குப் பிறகும் நீங்க உங்க அம்மா கிட்ட உங்கள விட்டு என்னால இருக்க முடியாது. நான் இங்கே இருக்க போறேன்னு கால்ல விழுந்து கெஞ்ச போறீங்களா? என்று கோபப்படுகிறார்.

பிறகு ராதிகாவும் கோபியும் மாடியில் இருந்து கீழே வர வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது பாக்கியா ராமமூர்த்தி இடம் மாமா நான் அவருக்காக நிறைய சகிச்சுட்டு போயாச்சு. ஆனா இனிமே அப்படி என்னால் இருக்க முடியாது என்று சொல்ல, அதற்கு ராமமூர்த்தி இது உன்னுடைய வீடுமா.. இங்கே யார் இருக்கணும் இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ண வேண்டியது நீதான். கோபியோட அப்பா, அம்மா எங்களையும் நீ வெளியே போக சொன்னா நாங்க போய் தான் ஆகணும் என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சூட்டிங் ஸ்பாட்க்கு வந்த செய்தி.. 48 நாள் ICUவில் போராட்டம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வந்த சோதனை! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications