ராதிகா வீட்டில் ஈஸ்வரி செய்த தில்லாலங்கடி வேலை.. கடைசியில் இப்படி ஆகிவிட்டதே! கோபிக்கு வந்த சிக்கல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே இருபதாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் கோபியோடு ராதிகா வீட்டிற்கு வந்த ஈஸ்வரிக்கு ராதிகாவின் அம்மாவால் சாப்பாடு பிரச்சனை ஏற்படுகிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராதிகா கோபியை சாப்பிட கூப்பிட கோபி டைனிங் டேபிளில் வந்து உட்காருகிறார். பிறகு அம்மாவை கூப்பிட்டு வருகிறேன் என்று எழுந்து போய் ஈஸ்வரியை சாப்பிட கூட்டிட்டு வந்து உட்கார வைக்கிறார். ஈஸ்வரி வந்ததும் என்ன சாப்பாடு என்று கேட்க அவள் உப்புமா என்று கோபி என் கையாலே பரிமாறுகிறேன் என்று பரிமாற போக அதற்கு ஈஸ்வரி அவள் உப்புமாவா இதெல்லாமா சாப்பிடுவாங்க என்று கேட்க அதற்கு கமலா எங்க வீட்டுல சாப்பிடுவோம் என்று சொல்கிறார்.

அதற்கு ஈஸ்வரி நாங்க இதெல்லாம் சாப்பிட மாட்டோம் என்று சொல்ல கோபி இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. நாளையில் இருந்து உங்களுக்கு சப்பாத்தி போட சொல்றேன் என்று சொல்ல கமலா எல்லாருக்கும் யாரு சப்பாத்தி தேய்க்கிறது என்று கேள்வி கேட்கிறார். அதைத் தொடர்ந்து தொட்டுக்க என்ன இருக்கு என்று ஈஸ்வரி கேட்டதும் அவள் உப்புமாவுக்கு யாராவது தொட்டுக்க செய்வாங்களா என்று கமலா கேள்வி கேட்க, அதற்கு ஈஸ்வரி நாங்க செய்வோம் என்று பதில் கொடுக்கிறார்.
பிறகு அவள் வேகவே இல்ல என்று ஈஸ்வரி குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ராமமூர்த்தி வருத்தப்படுவார் என்று எழில் அமிர்தா எல்லோரும் ராமமூர்த்தி இடம் பேசி அவருக்கு ஆறுதல் சொல்ல அதற்கு ராமமூர்த்தி ஈஸ்வரி புள்ள பாசத்துல இருக்கா. அவன் அந்த பாசத்தை வச்சு அவளை ஏமாத்திக்கிட்டு திரியிறான். அவ அந்த வீட்டில நல்லா பட்டு வரட்டும். அப்பதான் அவளுக்கு புத்தி வரும் என்று சொல்கிறார்.
அடுத்ததாக கமலா ராதிகாவிடம் இருக்கிறது ரெண்டு ரூமு அதுல அந்த அம்மா எங்க தூங்கும்? என்று கேட்க அதற்கு ராதிகா ஈஸ்வரியோடு பேசிக் கொண்டிருக்கும் கோபியை தனியாக பேச வேண்டும் என்று கூப்பிடுகிறார். அதற்கு ஈஸ்வரி எதுவாக இருந்தாலும் என் முன்னாடியே பேசு என்று சொல்ல அதற்கு ராதிகா இருக்கிறது ரெண்டு ரூம் தான் அதுல ஒரு ரூமில் நாங்க தூங்குறோம் இன்னொரு ரூமில் அம்மாவும் மயூவும் தூங்குறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஈஸ்வரி குறுக்கிட்டு ஒரு ரூம்ல நீங்க தூங்குங்க இன்னொரு ரூம்ல நான் தூங்குவேன் என்று சொல்ல,
அதற்கு ராதிகா அப்போ எங்க அம்மா எங்க தூங்குவாங்க என்று கேட்க ஹால்ல தூங்க சொல்லு என்று தன்னுடைய சூட்கேஸை தூக்கிக்கொண்டு ரூமிற்கு சென்று விடுவதோடு மட்டுமல்லாமல் கமலாவின் துணிகளை எடுத்து வந்து ஹாலில் வைத்து உங்களுக்கு ஏத்த இடத்துல வச்சுக்கோங்க என்று சொல்கிறார். இதனால் கோபி ராதிகாவிடம் சிக்கிக் கொள்கிறார். அதோடு இன்னும் ரெண்டு நாள் தான் டைம் இருக்கு உங்க அம்மாவை உங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க என்று ராதிகா கண்டிஷன் போட கோபி என்ன செய்ய என்று முழித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications