ராதிகா கர்ப்பம் குடும்பத்துக்கு தெரிஞ்சாச்சு..காத்திருந்த அதிர்ச்சி! இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலையே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே ஏழாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயம் கோபி மூலமாக ஈஸ்வரிக்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் ஈஸ்வரி குழந்தையை கலைக்க சொல்ல அதற்கு ராதிகா அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரியை கோபி தனியாக காரில் வெளியே போகலாம் என்று கூட்டிட்டு போகும் போது கோபியின் நடவடிக்கையை பார்த்து ஈஸ்வரி உனக்கு ஏதாவது பிரச்சனையா? ஒரு வாரமா நீயும் சரி இல்ல ராதிகாவும் சரி இல்ல என்று கேட்க அதற்கு கோபி நீங்க பாட்டியாக போறீங்கன்னு தெரிஞ்சா எப்படி பீல் பண்ணுவீங்க என்று கேட்க, ஈஸ்வரி அதான் நான் ஏற்கனவே பாட்டி ஆகிட்டேனே என்று சொல்கிறார்.

அதற்கு கோபி நம்ம வீட்டுக்கு ஒரு குழந்தை வரப்போகுது என்று சொன்னதும் ஈஸ்வரி அமிர்தா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று குழப்பத்தில் கேள்வி கேட்க, அதற்கு கோபி இல்ல நான் எழில் அமிர்தா பற்றி பேசல என்று சொன்னதும் ஈஸ்வரி செழியனுக்கு குழந்தை பிறக்க போகுதா? அவங்க இப்பதான சண்டை போட்டு சேர்ந்து இருக்காங்க என்று குழப்பத்தில் இருக்கும் போது கோபி கோபத்தில் நான்தான் அப்பாவாக போகிறேன்.
ராதிகா அம்மாவாக போகிறார் என்று உண்மையை சொல்லி விடுகிறார். அதைக் கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். அதோடு இது எத்தனாவது மாசம் என்று ஈஸ்வரி விசாரிக்க அதற்கு கோபி எனக்கு அந்த கணக்கெல்லாம் தெரியாது. அடுத்த வாரம் ஸ்கேன் பார்க்கணும் என்று சொன்னாங்க என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி எல்லாரும் பையன் அம்மா கிட்ட அப்பாவாக போறேன்னு சொன்னா சந்தோஷப்படுவாங்க.
ஆனால் என்னால் அப்படி சந்தோஷப்பட முடியலை என்று கவலைப்படுகிறார். அதற்கு கோபி தெரியாமல் நடந்து விட்டது என்று சொல்ல, ஈஸ்வரி உங்களுக்கு இந்த குழந்தை அவசியமா? ராதிகாவும் வேண்டாம் என்ற முடிவில் தானே இருக்கிறா என்று கேட்க, அதற்கு கோபி இல்லம்மா அவ பெத்துக்கலாம் என்று சொல்லுறா.. அவங்க அம்மாவும் எங்கள் இருவருக்கும் ஒரு ஆதாரம் வேண்டும் என்று சொல்லுறாங்க என்று சொன்னதும் ஈஸ்வரி இது வெளியே தெரிஞ்சா ஊர் உலகம் என்ன பேசும்?
வீடு இருக்கிற சூழ்நிலையில் அதெல்லாம் சரிப்பட்டு வராது. நாளைக்கு உன் பசங்க உன்னை மதிக்கக்கூட மாட்டாங்க. இதுவரைக்கும் நல்ல அப்பாவாக இருந்ததற்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்று சொல்கிறார். அதோடு நான் ராதிகா கிட்ட இந்த விஷயத்தை பற்றி பேசுகிறேன். என்னதான் இருந்தாலும் பாக்கியா இவ்வளவு நடந்த பிறகும் எங்களை விட்டுப் போகாமல் எங்க கூடவே இருக்கிறார். அவ தான் எங்களுக்கு முதலில் முக்கிய அப்புறம் தான் நீ என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு கோபியும் ஈஸ்வரியும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது ஈஸ்வரியின் முகம் சோகமாக இருப்பதை பாக்கியா பார்த்து என்னவென்று விசாரிக்க அதற்கு ஈஸ்வரிக்கு வெயிலில் வெளியே போயிட்டு வந்ததால இப்படி இருக்கிறேன் என்று சமாளித்து ராதிகா எங்கே இருக்கிறார் என்று கேட்டு மாடிக்கு போகிறார்.
அப்போது ராதிகாவிடம் இது எத்தனாவது மாசம் என்று கேட்க, இது இரண்டாவது மாசம் என்று ராதிகா சொன்னதும் அப்போ சரி பிரச்சனை இல்ல.. இந்த குழந்தை வேண்டாம். அபார்ஷன் பண்ணிட்டு என்று சொன்னதும் கோபமான ராதிகா இந்த குழந்தை விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது நானும் கோபியும் தான். என்னால் அபார்ஷன் பண்ண முடியாது என்று சொல்ல, ஈஸ்வரி அதிர்ச்சியாக இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications