பாக்கியலட்சுமி: என் வாழ்க்கைக்கு நான் முக்கிய முடிவு எடுத்து இருக்கிறேன்! இனியா சொன்ன வார்த்தை.. ஆடி போன குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தன்னுடைய வாழ்க்கைக்காக தான் முக்கிய முடிவு எடுத்திருப்பதாக இனியா சொன்னதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இனியா சொன்ன முடிவுக்கு ஈஸ்வரி என்ன பதில் சொல்லப் போகிறார் என்று பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத கதை தான் வந்திருக்கிறது. இனியாவின் கணவரான நிதிஷுக்கு போதைப்பொருள் பழக்கம் இருக்கும் விஷயம் இனியாவிற்கு தெரிய வந்ததும் அவர் அதிர்ச்சியில் இருந்தார். ஆனாலும் அது பற்றி கேட்டபோது இனியா அவருடைய முன்னாள் காதலன் ஆகாஷ் உடன் பேசியதால் தான் நிதிஷ் இப்படி மாறிவிட்டார் என்று மொத்த கதையையும் சுதாகர் குடும்பத்தினர் மாற்றி வைத்திருந்தனர்.

இதனால் இனியாவிற்கு ஒரு வருத்தமும் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் நடந்த விஷயத்தை பற்றி கோபியிடம் இனியா சொல்லி இருந்தார். அதைக் கேட்டு கோபி கோபத்தில் இருக்கிறார். தன்னுடைய மகள் வாழ்க்கை இப்படி ஆனதற்கு நானும் ஒரு காரணமாகி விட்டேனே என்று கோபி வருத்தத்தில் இருக்கும்போது பாக்யா கண் முன் நிதிஷை போலீஸ் அரெஸ்ட் செய்திருக்கின்றனர். அது பற்றி சுதாகரிடம் சொன்னபோது தன்னுடைய மகனுக்கு எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது, ஆனால் அவனுடைய நண்பர்கள் செய்த தப்பால்தான் நிதிஷை போலீஸ் அரெஸ்ட் செய்துட்டாங்க இன்று மாலைக்குள் கூட்டிட்டு வந்துருவேன் என்று சுதாகர் சொல்லி இருந்தார்.
ஆனால் வீட்டிற்கு வந்த பாக்யாவிடம் இனியா மேலும் பல ரகசியங்களை சொல்லி இருந்தார். அதாவது பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்காக தான் இந்த திருமணம் நடந்தது என்ற உண்மைகளை இப்போது இனியா மொத்த குடும்பத்திற்கும் சொல்லி இருக்கிறார். இதனால் சுதாகர் பற்றி குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் சுதாகர் இனியாவை சமரசம் செய்து மீண்டும் வீட்டிற்கு கூட்டிட்டு வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்
இப்படியான நிலையில்தான் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இனியா இனி காலம் முழுக்க இந்த வீட்டிலேயே இருக்கலாம் என்று கோபி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது இனியா என்னுடைய வாழ்க்கைக்காக ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறேன் என்று சொன்னதும் எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்கின்றனர். அதற்கு நான் நிதிஷை விவாகரத்து செய்யப் போகிறேன் என்று சொல்கிறார். அதை கேட்டு மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி ஆகியும் சொன்னார்.
பாக்கியலட்சுமி: சுதாகர் போட்ட திட்டம்.. கோபி எடுத்த முடிவு.. இனியா பாக்கியாவிடம் சொன்ன விஷயம்
ஆனால் இனியா எடுத்த முடிவு நல்லதாக இருந்தாலும் இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஆனாலும் பூமர் ஈஸ்வரி இதற்கு என்ன பஞ்சாயத்து செய்ய போகிறார் என்று அடுத்த வாரம் பார்க்கலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications