பாக்கியலட்சுமி: சுதாகர் போட்ட திட்டம்.. கோபி எடுத்த முடிவு.. இனியா பாக்கியாவிடம் சொன்ன விஷயம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூலை நான்காம் தேதிக்கான எபிசோடில் இனியாவின் வாழ்க்கைக்காக கோபி மற்றும் பாக்கியா இருவரும் முக்கியமான முடிவெடுத்து இருக்கின்றனர். அதே நேரத்தில் இனியாவை மீண்டும் கூட்டிட்டு வரவேண்டும் என்று சுதாகர் பிளான் போட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபியும் பாக்கியமும் காரில் வந்து கொண்டிருக்கும் போது கோபி நான் பெரிய தப்பு பண்ணிட்டேன், அந்த ஆளை சும்மா விடமாட்டேன் என்னை மன்னிச்சிடு பாக்கியா என்று சொல்கிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரி நம்ம குடும்பத்துக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியல, எல்லார் கல்யாணத்திலும் போலீஸ் ஸ்டேஷன் பிரச்சனை வந்துகிட்டே இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு ஜெனி ஏன் என்கிட்ட இதை ஆரம்பத்தில சொல்லவே இல்ல. அப்பவே சொல்லி இருந்தா அந்த நிதிஷை புடிச்சு ஜெயிலில் போட்டு இருக்கலாம் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் பாக்கியாவும் கோபியும் வீட்டிற்கு வருகின்றனர். அவர்களிடம் சுதாகர் வீட்டில் என்ன நடந்தது என்று ஈஸ்வரி கேட்க, பாக்யா அவர் பையனுக்கு ஏற்கனவே இந்த போதைப்பொருள் பழக்கம் இருக்கிறது உண்மைதான். இனியாவை கல்யாணம் பண்ணி வச்சா திருந்திடுவான் என்று அவர் நினைச்சேன்னு சொல்லுறாரு என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி அவங்க பையனை திருத்துவதற்காக தான் நாம பொண்ணை பெத்து வச்சிருக்கிறோமா? என்று கேட்கிறார்.
அதோடு வேற என்ன சொன்னாங்க என்று கேட்க, கோபி அவர் ரொம்ப திமிரா பேசுறாரு. எங்க பொண்ணு வாழ்க்கையை கெடுத்தவங்கள சும்மா விடமாட்டேன்னு நான் சொன்னதுக்கு உங்களால முடிஞ்சதை பண்ணிக்கோங்கன்னு சொன்னாரு. இதுவரைக்கும் நாம பார்த்த சுதாகர் வேற, ஆனா இப்போ முழுசா வேற மாதிரி இருக்காரு. பாக்கியா சொல்லும்போது நான் கேட்கல இனிமே என் பொண்ணு வாழ்க்கை என்ன ஆகும்? நானே அவளை பாதாள குழியில தள்ளிட்டேன்.
மாப்பிள்ளை எப்படின்னு விசாரிச்சு இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது பாக்கியா நான் அவ்வளவு தூரம் வேண்டாமென்று சொன்னேன் அதை யாருமே நம்பலையே என்று கேட்க, பாக்கியா சொல்லும்போது அவ செல்வி பையனுக்காகத்தான் பேசுறான்னு நினைச்சு நாம அதை உதாசீனப்படுத்திட்டோம். ஆனா அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பதான் தெரியுது என்று எல்லோரும் குடும்பமாக புலம்பி கொண்டு இருக்கின்றனர்.
இப்ப என்ன பண்றது என்று கேட்க இப்போதைக்கு எதுவும் பண்ண வேண்டாம் கொஞ்சம் பொறுமையா இருப்போம், முதலில் இனியா நார்மல் ஆகட்டும் என்று முடிவெடுக்கின்றனர். மறுபக்கத்தில் இனியா ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது பாக்யா வருகிறார். என்கிட்ட எதுவுமே சொல்லலையே என்று பாக்கியா கேட்க, நீ ஏற்கனவே என் கல்யாணத்துக்காக நிறைய விஷயத்தை இழந்துட்ட அம்மா. இதையும் சொன்னா நீ ஒடஞ்சு போயிடுவ அதனாலதான் சொல்லல.
நீ எனக்காக யோசித்து எந்த உண்மையையும் என்கிட்ட மறைக்காத என்று பாக்கியா சொன்னதும் உடனே இனியா நான் இன்னொன்னு சொல்லவா என்று, நான் நிம்மதியா தூங்கி ரொம்ப நாளாச்சு மா, உன்னை கட்டி பிடிச்சுகிட்டு தூங்கிக்கவா என்று கேட்க இதெல்லாம் ஏன்டா கேட்டுக்கிட்டு இருக்க வா என்று சொல்லி இனியாவை தூங்க வைக்கிறார்.
மறுநாள் காலையில் சுதாகர் நிதிஷை வெளியில் எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது சந்திரிகா வந்து பேசுகிறார். அப்போது அந்த இனியாவை போய் கூட்டிட்டு வரணும் என்று சொல்ல, சந்திரிகா எதுக்கு? என்று கேட்டதும், நேற்று அவங்க அப்பா அம்மா கோபமா வந்து பேசிட்டு போய் இருக்காங்க. இப்ப நம்ம மேல அவங்க கோபத்தில் இருப்பாங்க. அதனால போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தா நாம மூணு பேரும் உள்ளே தான் இருக்கணும். அதனால இனியாவை எப்படியாவது பேசி வீட்டிற்கு கூட்டிட்டு வரது தான் நமக்கு சேப் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications