வீட்டை விட்டு வெளியேறிய இனியா.. கோபி எடுத்த முடிவால்..மாறிப்போன கதை.. எதிர்பார்க்காத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா பள்ளியில் நடந்ததை வீட்டில் சொல்லாத காரணத்தால் ஈஸ்வரியால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
இனியாவை வீட்டை விட்டு வெளியேற்றி இருந்தால் கடும் கோபத்தில் கோபி எடுத்த முடிவால் பாக்கியலட்சுமி வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
இனியாவால் மீண்டும் வீட்டிற்குள் வந்து கோபி செய்யும் பிரச்சனைகளால் பல திருப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது.

கிடைத்த அதிர்ச்சி
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில், கோபி ஸ்கூலுக்கு வந்து போனதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். ஹெட் மாஸ்டர் இடம் மன்னிப்பு கேட்டு விட்டு வெளியே வந்து பாக்கியா காத்துக் கொண்டிருக்கும் போது தோழிகளோடு நடந்து வந்த இனியா பாக்யாவை பார்த்ததும் பயந்து போய் நிற்கிறார். அம்மாவை கூட்டிட்டு வர சொன்னாங்களா? என பாக்யா கேட்க இனியா எல்லாமே தெரிஞ்சிடிச்சே என அதிர்ச்சி அடைகிறார்.

குடும்பத்தினரின் கேள்வி
இனியவை அழைத்துக் கொண்டு பாக்யா வீட்டிற்கு வருகிறார் .வீட்டிற்கு வந்த பாக்கியாவிடம் எதற்காக ஸ்கூலுக்கு போனா? என ஈஸ்வரி கேட்கும்போது பள்ளியில் நடந்த விஷயங்களை பாக்கியா சொல்கிறார். அனைவரும் கோபி பள்ளிக்கு வந்ததை குறித்து அதிர்ச்சி அடைந்து நடந்த விஷயங்களை வீட்டில் சொல்லி இருக்க வேண்டியதுதானே? எதற்காக கோபிக்கு போன் பண்ணி சொன்னா என்று கேள்வி கேட்கின்றனர். நான் சொல்லியிருந்தால் இப்படித்தான் நீங்க எல்லாரும் சத்தம் போட்டு இருப்பீங்க, அதனால்தான் சொல்லல கண்டிப்பா பேரன்ட்ஸ் வரணும்னு சொன்னாங்க. வேற வழி இல்லாம லஞ்ச் பிரேக்கில் தான் நான் டாடிக்கு போன் பண்ணி வர வச்சேன் என்று கூறுகிறார்.

இனியாவை அடித்த பாக்கியா
இனியாவின் பேச்சைக் கேட்டு கோபத்தில் பாக்கியா தப்பு பண்ணி விட்டு திமிரா பேசுறா என இரண்டு அறை அறைய, பிறகு டாடியை தான் வர சொன்னேன். அவர் வந்து எவ்வளவு நல்லா பேசினார்? என்கிட்ட கோபமே படல. நீங்க தான் எல்லோரும் சேர்ந்து ஒன்றுமில்லாத விஷயத்துக்கு இப்படி திட்டுறீங்க என சொல்ல ஈஸ்வரி அடிக்க பாய் நீங்களும் என்னை அடிக்க வரீங்களா? அப்பா வீட்டை விட்டு வெளியே போனதும் எல்லோரும் என்ன அடிக்க வரீங்க என்று அழுதபடியே இனியா பேசுகிறார் உன் டாடி தான் வேணும்னா அவன் கூடவே போய் இருக்க வேண்டியதுதானே என ஈஸ்வரி சொல்கிறார்.

இனியாவால் மீண்டும் வீட்டுக்கு வந்த கோபி
இந்த வீட்டில் யாருக்கும் என்னை பிடிக்கல ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு இப்படி எல்லோரும் என்னை திட்டுறீங்க. நான் இந்த வீட்டை விட்டு எங்கேயாவது போறேன் என பேக்கை தூக்கிக் கொண்டு கிளம்புகிறார் .இந்த நேரத்தில் காரில் இருந்து கீழே இறக்கும் கோபி வீட்டில் சத்தம் கேட்பதை பார்த்து வீட்டு வாசலில் நிற்க, வெளியே வந்த இனியா எல்லோரும் என்ன அடிக்கிறாங்க ,திட்றாங்க நான் இந்த வீட்டை விட்டு போக போறேன் என சொல்ல, உனக்காக நான் பேசுகிறேன் என கூட்டிக்கொண்டு கோபத்துடன் வீட்டுக்குள் வருகிறார் மீண்டும் கோபி இனியாவோடு வீட்டிற்குள் வந்ததை பார்த்த அனைவரும் அதிர்ச்சியோடு இருக்கின்றனர் .இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications