பாக்கியலட்சுமி: பாக்யாவை எதிர்த்த பிள்ளைகளுக்கு தரமான பதிலடி கொடுத்த செல்வி.. எழில் எடுத்த முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 16ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி செய்த செயல்கள் எல்லாம் இனியா மற்றும் செழியனுக்கு செல்வி மூலமாக தெரிய வருகிறது. மறுபக்கத்தில் கோபியிடம் ராதிகா கோபமாக நடந்து கொள்கிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஜெனி, செழியன், இனியா, ஈஸ்வரி என நான்கு பேரும் உட்காந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது பாக்யாவும் செல்வியும் வருகின்றனர். நடந்த விஷயங்களை ஈஸ்வரி அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க செழியன் அப்பா தான் அப்படி பண்ணுனாருன்னு உனக்கு முதலிலேயே தெரியுமா என்று கேட்க தெரியும் என்று பாக்கியா சொன்னதும் ஏம்மா எங்ககிட்ட சொல்லல என்று செழியன் கேட்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

சொல்லியிருந்தால் என்ன பண்ணி இருப்பீங்க? எதுவும் பண்ணிருக்க முடியாது இல்ல, அதனால தான் சொல்லல என்று பாக்கியா சொல்கிறார். இனியா அப்பா செஞ்சது தப்புதான்.. பெரிய தப்புதான் நான் இல்லைன்னு சொல்லல. ஆனா நீ பண்ணதும் தப்புதான். பூஜைக்கு நீ ஏன் வரல என்று கேட்க பாக்கியா எனக்கு வேலை இருந்துச்சு என்று சொல்கிறார்.

அதற்கு இனியா நீங்க பண்ணுனதும் தப்பு தானே என்று பேசிக்கொண்டே இருக்கும்போது பூஜைக்கு அக்கா வந்துச்சு எழில் தம்பிதான் உள்ளே விடல என்று செல்வி சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். உண்மையாவாமா நீ வந்தியா என்று செழியன் கேட்டதும் ஆமா நான் கோவிலுக்கு போயிட்டு வந்தேன். எழிலுக்கு ஆசையா விபூதி வச்சிட்டு உள்ளே போலாமா என்று சொன்னபோது நீ உள்ளே வந்தா இந்த படம் நடக்காதும்மான்னு சொன்னான்.

அதற்குப் பிறகு நான் எப்படி உள்ளே போக முடியும்? அதையும் மீறி நான் உள்ளே போகணுமா...? என்று கேட்க, எல்லோரும் கண்கலங்குகின்றனர். பிறகு நான் வெளியே வந்தேன் ஆனாலும் மனசு கேக்கல. அவன் பேசி முடிக்கிற வரைக்கும் நான் வெளியே தான் நின்னுட்டு இருந்தேன் என்று பாக்கியா சொல்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

ஈஸ்வரி எழிலா இப்படி சொன்னான் என்று கேட்டதும் அதற்கு பாக்கியம் நான் பிரஷ்அப் ஆகிட்டு வரேன் என்று அங்கிருந்து போய் விடுகிறார். பிறகு பாக்கியா சமைத்து முடித்து விடுகிறார். அப்போதும் வந்து ஈஸ்வரி எழில் அப்படி சொன்னானா? என்று கேட்டதும் அவன் அப்படித்தான் சொன்னான். எத்தனை வாட்டி கேட்டாலும் உண்மை அதுதான் என்று பாக்கியா சொல்கிறார்.

உடனே செழியன் எங்ககிட்ட சொல்லிருந்தா நாங்க உன்ன உள்ள கூட்டிட்டு வந்து இருப்போம் அம்மா என்று கேட்க, அவனுக்கே விருப்பம் இல்லாத போது நீங்க கூட்டிட்டு வந்து நான் எப்படி நிற்க முடியும்? எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் போறேன் என்று கிளம்பி விடுகிறார். மறுபக்கத்தில் அமிர்தா எழிலுக்காக காத்திருக்கிறார்.

பிறகு எழில் ரெஸ்டாரண்டில் நடந்த பிரச்சனைகளுக்கும் கோபி தான் காரணம் என்று சொன்னதும் அமிர்தா அதிர்ச்சியாகி நிற்கிறார். அதோடு அவர் வாங்கித் தந்த வாய்ப்பில் நான் படம் பண்ணல, என்று சொல்லப் போறேன் என்று சொன்னதும் அமிர்தா இந்த முடிவு நீங்கள் லேட்டா எடுத்து இருக்கீங்க. இந்த வாய்ப்பு வேண்டாம் என்று சொல்லிருங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக மறுநாள் காலையில் பாக்கியா எல்லோருக்கும் காபி கொடுத்துவிட்டு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது காலையில் நான் எழுந்து பார்த்ததும் நிறைய மெசேஜ் வந்திருக்கிறது. எல்லாரும் ஸ்வீட் நல்லா இருக்கு இனிமே உங்ககிட்ட தான் வாங்குவோம்ன்னு சொல்லி இருக்காங்க என்று பாக்கியா சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது செல்வி வருகிறார்.

பிறகு செல்வி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, செல்வி பாக்யாவிடம் கோபி சாரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா? என்று கேட்க, அதற்கு பாக்கியா எனக்கு தெரியல. நான் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டேன் நடக்கிறது நடக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் எழில் அம்மாவை சந்தித்து படத்திற்கான பூஜையில் கோபி செய்த செயல் குறித்து சொல்ல போறேன் என்று கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+