பாக்கியலட்சுமி: பிரஸ் மீட்டிங்கில் பாக்யா சொன்ன வார்த்தை.. ஜாமீனில் வந்த கோபி.. கோபத்தில் இனியா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்க சொல்லி ஈஸ்வரி சொல்லும்போது பாக்கியா முடியாது என்று சொல்கிறார். பிறகு பிரஸ் மீட்டிங் வைத்து மொத்த உண்மைகளையும் பாக்கியா சொல்லிவிடுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி மூலமாக வந்த சான்ஸ் வேண்டாம் என்று சொல்லப் போறேன் என எழில் சொல்கிறார். அதோடு நான் இனி படம் எடுக்கும் நினைப்பை விட்டு விட்டு படித்த படிப்பிற்கு வேலைத் தேட போறேன் என்று எழில் சொன்னதும் பாக்யா அப்படி ஒன்று யோசிக்க வேண்டாம். படம் பண்ணுவது தான் உன்னுடைய கனவு. அந்த சான்ஸ் யார் மூலமாக வந்தா உனக்கு என்ன? இதை கட்டாயம் பண்ணு என்று சொல்கிறார்.

அடுத்ததாக பாக்கியா ஈஸ்வரியை சாப்பிட கூப்பிட அவர் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். அதோடு நான் யோசித்து பார்த்தேன் நடந்ததெல்லாம் நடந்துவிட்டது, நீ செழியனோடு போய் கோபி மீது கொடுத்த கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்கு என்று ஈஸ்வரி சொல்ல, அதற்கு பாக்கியா நான் கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்க மாட்டேன் என்று சொல்கிறார்.
மேலும் நீங்க ஜெயிலுக்கு போனபோது நான் கமலாவிடம் சென்று கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்குமாறு கேட்டு அவர்கள் வாங்கவில்லை. உங்களுடைய மகனும் வாங்க சொல்லி சொன்னாரா? என்று தெரியவில்லை. கைகட்டி வேடிக்கை மட்டும் தான் பார்த்தார் என்று சொன்னதும் ஈஸ்வரி அப்போ எனக்காக தான் நீ அவனை பழி வாங்குறியா என்று கேட்கிறார்.
அதற்கு பாக்கியா இல்ல உங்களுக்காக மட்டும் இல்ல, இதை எனக்காகத்தான் நான் செய்தேன். இனி அவர் என்னுடைய வழியில் குறுக்க விடக்கூடாது என்பதற்காக என்னுடைய முடிவில் நான் ஆணித்தரமாக இருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு பிறகு செல்வி பாக்யாவிடம் நீ உன்னுடைய மனசை கல்லாக்கிட்டு கோபி சார் வெளியே வந்ததும் அவருடைய அம்மா ஈஸ்வரியையும் இனியாவையும் அவருடைய அனுப்பி வைக்கா நீ எத்தனை முறை அவங்களுக்காக உதவி செஞ்சாலும் அவங்க அதை மறந்து போயிட்டு இருக்கங்க என்று சொல்கிறார்.
.
அடுத்த நாள் பாக்கியாவின் வீட்டிற்கு செய்தியாளர்கள் வருகிறார்கள். அவர்கள் பாக்கியாவிடம் ரெஸ்டாரண்ட் பிரச்சனை பற்றி கேட்கிறார்கள். அப்போது பாக்கியா ஆரம்பத்தில் இருந்தே நடந்த எல்லா விஷயங்களையும் பற்றி சொல்ல அதை எல்லாம் கேட்டு இனியா இப்போ உனக்கு சந்தோசமா? நாளைக்கு என்னுடைய நண்பர்கள் எல்லோரும் என்னை கேலி செய்வாங்க என்று கோபித்துக் கொண்டு போகிறார்.
அடுத்ததாக செழியன் கோபியை பார்ப்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார். அங்கு கோபிக்கு ஜாமீன் கிடைக்கிறது. அப்போது கோபி என்ன இருந்தாலும் ஒரு பொம்பளைக்கு இவ்வளவு அகங்காராகம் இருக்கக் கூடாது. ஒரு நாள் ஃபுல்லா என்னை ஸ்டேஷனில் உட்கார வச்சுட்டாலே என்று கோபத்தில் குழம்பிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications