பாக்கியலட்சுமி: கோபி போலவே முட்டாளாக பேசிய இனியா.. நறுக்குன்னு ராதிகா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பராகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 23ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி மற்றும் பாக்கியா இருவரும் சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரலானதும் ராதிகா வீட்டிற்கு சென்ற இனியா ராதிகாவிடம் வாக்குவாதம் செய்கிறார்.
இன்றைய எபிசோடில் கமலா ராதிகாவிடம் பாக்யாவும் கோபியும் சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வந்ததாக காட்ட, அதை பார்த்து ராதிகா கோபப்படுகிறார். அப்போது கோபி வந்ததும் இப்போ உங்களுக்கு சந்தோஷமா? நான் வெளியவே போக கூடாதுன்னு திட்டம் போட்டு பண்ணிட்டீங்களா? உங்கள பார்த்து தான் உங்க பிள்ளைகள் வளரும்.

உங்களுக்கு பாக்கியா மீது கோபம் இருந்தால் ரெஸ்டாரண்டில் விஷத்தை கலக்க எப்படி மனசு வந்துச்சு? அந்த குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லையா? என்று திட்ட, அதற்கு ராதிகாவின் அம்மா மாப்பிள்ளை கிட்ட இப்படியா பேசுவ? அவரு ஒன்னும் தப்பு பண்ணல.. என்று சொல்ல, அதற்கு கோபி நான் விஷம் கலக்கல. அந்த செஃப் தான் கெட்டுப் போன கறியை கலந்தது. நான் எதுவும் செய்யல என்று சொல்கிறார்.
ஆனாலும் என் முகத்திலேயே முழிக்காதீங்க என்று ராதிகா திட்டி விட்டுப் போகிறார். மறுபக்கத்தில் இனியா காலேஜில் தனியாக உட்கார்ந்து இருக்கிறார். அப்போது அவருடைய பிரெண்ட்ஸ் எல்லாரும் பாக்யா மற்றும் கோபி இருவரும் சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வெளியானதை வைத்து கிண்டல் செய்கிறார்கள். அதோடு இனியாவை கூப்பிட்டு செல்ஃபி எடுக்கின்றனர்.
இதனால் கோபமான இனியா காலேஜிலிருந்து வீட்டிற்கு வந்து நடந்ததை பற்றி சொல்லி அழுகிறார். அதோடு நீ எதற்காக அப்பாவோட சண்டை போட்ட என்று பாக்யாவை திட்டுகிறார். அதற்கு பாக்கியா ஆரம்பத்தில் இருந்தே உங்க அப்பா தான் எனக்கு பிரச்சனை கொடுத்து கொண்டே இருப்பது. நானா போய் யாரிடமும் வம்பு செய்யவில்லை என்று விளக்கம் கொடுக்கிறார்.
அதை இனியா ஏற்றுக்கொள்ளாமல் மேலும் மேலும் பேசிக் கொண்டிருக்க ஜெனி ஆன்ட்டி பக்கம் என்ன தப்பு இருக்கு? என்று கேட்க, நீங்க நாங்க பேசறது எதையும் கேட்காமல் சண்டை போடுறதால தான் நாங்க பாதிக்கப்பட்டோம் என்று இனியா திட்டி விடுகிறார். பிறகு நான் அப்பாவை பார்க்க போறேன் என்று ராதிகா வீட்டிற்கு இனியா செல்கிறார்.
அங்கு இனியாவை பார்த்ததும் ராதிகா வா இனியா என்று கூப்பிடுகிறார். கமலா உங்க அம்மா வேவு பார்க்க அனுப்பினாளா? என்று பாக்யா பற்றி தப்பு தப்பாக பேசுகிறார். இதனால் கோபமான இனியா அம்மாவை பற்றி தப்பா பேச வேண்டாம் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் ராதிகா தான் என்று சொல்கிறார். இவங்களை எங்க அப்பா கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி எங்க குடும்பம் ரொம்ப சந்தோஷமா இருந்தது.
என்னைக்கு எங்க அப்பா இவங்களை கல்யாணம் பண்ணுனாங்களோ அதோட எல்லாமே முடிஞ்சு போச்சு. இவங்களால தான் எங்க வீட்டில் அடிக்கடி சண்டை வருது என்று சொல்கிறார். அதே நேரத்தில் இனியாவை தேடி ஜெனியும் அங்கு வருகிறார். ஜெனியை பார்த்ததும் மீண்டும் கமலா பாக்யாவை திட்ட ஜெனியும் ராதிகாவால் தான் இந்த குடும்பத்தில் சந்தோஷமெல்லாம் போனது, இப்ப தினம் தினம் பிரச்சனையா இருக்கு என்று குத்தி காட்டி பேசிவிட்டு இனியாவை கூட்டி செல்கிறார். இதனால் ராதிகா இடிந்து போய் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications