Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழனிச்சாமி பற்றி செழியன் உடைத்த ரகசியம்.. முட்டாளாக இருக்கும் ஈஸ்வரியின் மூக்கை உடைத்த எழில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 28ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து கோபி அசிங்கமாக பேச அதற்கு பாக்கியா கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார்.

Baakiyalakshmi Serial November 28th 2023 promo and episode full episode

அதே நேரத்தில் பாக்யாவுக்கு ஆதரவாக செழியன் மற்றும் எழில் பேசுகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் கோபி பாக்யா மற்றும் பழனிச்சாமி பேசுவதை பார்த்து அசிங்கமாக பேச, அதற்கு ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத பாக்கியா நான் என்ன வேணா செய்வேன், என்னை கேள்வி கேட்க இவர் யாரு. இவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு அதான் வேண்டாம் என்று ஆச்சில என்று திட்டுகிறார்.

அப்போது ஈஸ்வரி, கோபி தானே கேள்வி கேட்கக் கூடாது. ஆனால் நான் கேள்வி கேட்கலாம் தானே? அந்த பழனிச்சாமியால தான் இவ்ளோ பிரச்சனை என்று சொல்ல, அதைக் கேட்டு கோபி ஜாலியாகி விடுகிறார். ஈஸ்வரி பேசியதை கேட்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாகி இருக்க அதற்கு ஈஸ்வரி பழனிசாமி ஏன் யாரும் இல்லாமல் இங்கே வரணும் என்று கேள்வி கேட்டு, அதுக்காக நீ கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்லுவியா என்று கோபப்படுகிறார்.

அதற்கு கோபி நான் வரும் போது அவங்க ரெண்டு பேரும் நெருக்கமா உக்காந்து பேசிட்டு இருந்தாங்க. இதே இனியா அவ பிரண்ட்ஸ் உடன்பார்த்தால் என்ன நினைப்பா? இல்லை எழிலும் அமிர்தாவும் உள்ளே வரும்போது இப்படி இருந்தா இந்த பொண்ணு என்ன நினைக்கும்? என்று பிரச்சனையை பெரிதாக நினைக்க, அதற்கு அமிர்தா நான் எதுவும் நினைக்க மாட்டேன்.

எனக்கு அம்மா பத்தி தெரியும் என்று பதிலடி கொடுக்கிறார். அதிலும் அசராத கோபி சரி இனியா வந்து பார்த்தால் என்ன ஆகும்..? அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க என்று கோபி ஈஸ்வரியை ஏத்தி விடுகிறார். அதற்கு ஈஸ்வரியும் ஆமாம் சாமி போட இதனால் கடுப்பாகும் பாக்கியா அக்கம் பக்கத்தில் இருக்குறவங்களுக்கு என்னை பத்தி நல்லாவே தெரியும்.

உங்க பிள்ளை பேசுவது தான் சரியா இல்ல என்று வழக்கம் போல செண்டிமெண்டாக பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான எழில் கோபியிடம் சண்டைக்குப் போக அப்போது அங்கு எழிலை தடுத்தபடி உள்ளே வரும் செழியன் நானும் பார்த்துக்கிட்டே தான் இருக்கேன் யாரும் இல்லைன்னு சொல்லிட்டு இருக்கீங்க.

நான் இங்கே தான் இருந்தேன் என்று சொல்ல அதைக் கேட்டு கோபி அதிர்ச்சியாகி பொய் சொல்லாத. இங்கு யாருமே இல்லையே என்று சொல்ல, அதற்கு செழியன் நான் மாடியில் நின்றேன் அந்த மனுஷன் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பேச ஆரம்பிச்சாரு. நானும் அவர்கிட்ட பேசிட்டு தான் போனேன் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி என்ன அம்மாவுக்கு சப்போர்ட் பண்றியா? இவ நினைச்சிருந்தா உன்னையும் ஜெனியையும் எப்பவோ சேர்த்து வைத்திருக்கலாம்.

ஆனால் செய்யல என்று செழியனை பாக்கியாவுக்கு எதிரா திருப்பி விட பாக்கிறார். ஆனால் செழியன் நான் தப்பு பண்ணி இருக்கேன். அதுக்கு எனக்கு இந்த தண்டனை தேவை தான் என்று சொல்கிறார். அதனால் கோபி இவை எல்லாரையும் டியூன் பண்ணி வச்சிருக்கா என்று சொல்ல, கோபமான செழியன் நீங்க பேசின பாதிய கூட அம்மா இங்கே சொல்லல என்று சொல்ல எழில் இவர் என்ன சொன்னாரு என்று கேட்க, அதற்கு செழியன் அதை சொல்ல வாய் கூசுது.

அந்த மனுஷன் தலை குனிஞ்சு போனாரு. அதோட இவரு பேசுனது அவ்வளவு அசிங்கம். அதனால் தான் அதை தாங்க முடியாம அம்மா வெளியே போக சொன்னாங்க என்று செழியன் சொல்ல அந்த நேரத்தில் அங்கு ஒரு கார் வந்து நிற்க காருக்குள் இருந்து ராதிகா வீட்டிற்கு வர ராதிகாவை பார்த்ததும் கோபி நீ தான் நியாயத்தை சொல்லுவ என்று சொல்கிறார். இங்கே நடந்தது எதுவும் புரியாமல் ராதிகா பார்த்துக் கொண்டு இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+