பாக்கியலட்சுமி: கோபியை பற்றி ஈஸ்வரி சொன்ன உண்மைகள்.. பதறும் ராதிகா! எதிர்பாராத திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி மீது தனக்கு இருக்கும் பாசம் மற்றும் அன்பை ஈஸ்வரி வெளிப்படுத்துகிறார். அதே நேரத்தில் கோபியை காணாமல் ராதிகா தேடிக் கொண்டிருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றால் பாக்கியா கையெழுத்து போட வேண்டும் என்று சொல்ல, அதற்கு பாக்கியம் நான் எப்படி கையெழுத்து போட முடியும் என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி இந்த நேரத்தில் எல்லா பிரச்சனைகளையும் நினைத்துக் கொண்டிருக்க முடியாது, தயவு செய்து கையெழுத்து போடு பாக்யா என்று சொல்கிறார். அதனால் பாக்கியா மறுக்க முடியாமல் கையெழுத்து போட்டு விடுகிறார்.

மறுபக்கத்தில் மயூக்கு ராதிகா சாப்பாடு கொடுத்து கொண்டிருக்கிறார். அப்போது டாடி வரலையா அவங்க மறுபடியும் பாக்கியா ஆன்ட்டி வீட்டுக்கு போயிட்டாங்களா? என்று மயூ கேட்க, அதற்கு ராதிகாவின் அம்மா அப்படி எல்லாம் இல்ல அவர் வந்துருவாரு என்று மயூவை சமாதானம் செய்கிறார். அதோடு ராதிகாவிடம் நீ மாப்பிள்ளைக்கு ஒரு போன் பண்ணு இப்படியே நீ இருந்துட்டு இருந்தா அவரு அந்த வீட்டுக்கு போயிருவாரு என்று சொல்கிறார்.
அதனால் ராதிகா கோபிக்கு போன் போடுகிறார். அப்போது கோபியின் போன் செழியன் கையில் இருக்கிறது. ஈஸ்வரி யாருடா போன் பண்றது என்று கேட்டதும், ராதிகா என்று செழியன் சொல்ல போனை ஆஃப் பண்ணி வை என்று ஆப் பண்ணி வைத்து விடுகிறார். இதனால் போன் சுவிட்ச் ஆஃப் ஆனதும் ராதிகா குழப்பத்தில் இருக்கிறார்.
அடுத்ததாக ஈஸ்வரி 10 பிள்ளைகள் இருந்தால் கூட செய்யாத அளவிற்கு என்னுடைய பிள்ளை கோபி எனக்காக எல்லா விஷயமும் செஞ்சான். படிப்பு விஷயத்திலும் அவ்வளவு நல்லா படிச்சான். பிசினஸ் பண்ண போறேன்னு சொல்லி பிசினஸ் தொடங்கினான் அதுவும் நல்லபடியா போச்சு. எங்க பேச்சைக் கேட்டு எல்லா விஷயத்திலும் நடந்துக்கிட்டான். ஆனா ஒரு நாள் அவன் என்னை விட்டு போயிட்டான்னு நான் அவனை தலை முழுகிட்டேன்னு சொன்னேன். அப்படி சொன்னாலும் அவன் என் பிள்ளை இல்லைன்னு ஆகிடுமா...? என்று அழுது கொண்டிருக்கிறார்.
அப்போது ஈஸ்வரிக்கு பாக்கியா ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ராதிகாவிற்கு கோபியின் கிச்சனிலிருந்து செஃப் போன் செய்து கோபி சார் இன்னும் ரெஸ்டாரண்டுக்கு வரல என்று சொல்ல, ராதிகா குழப்பம் அடைகிறார். பிறகு கோபியின் பிரண்டுக்கு போன் பண்ணி அவர் ஏதாவது உங்களிடம் பேசினாரா என்று கேட்க, அதற்கு அவர், கோபி எனக்கு போன் பண்ணி இருக்கிறான். அதற்கு பிறகு இப்போ நான் ட்ரை பண்ணேன் போன் சுவிட்ச் ஆப் ஆக இருக்கிறது என்று சொல்லி விடுகிறார்.
பிறகு கோபிக்கு ஆபரேஷன் முடிந்து அவர் நன்றாக இருக்கிறார் என்று டாக்டர் வந்து குடும்பத்தினரிடம் சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். இந்த விஷயத்தை செழியன் அமிர்தா மற்றும் ஜெனிக்கு சொல்ல அவர்களும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறார்கள்.
அந்த நேரத்தில் ராதிகாவின் அம்மா அவர் எங்க போனாருன்னு தெரியல ஆனா கண்டிப்பா அந்த வீட்டுக்கு தான் போயிருப்பார் நான் போய் பாத்துட்டு வரேன் என்று சொல்ல, ராதிகா நானும் வருகிறேன் என்று இருவரும் பாக்யா வீட்டில் வந்து பார்க்கின்றனர். அங்கு யாரும் இல்லை என்பதால் எங்க போயிருப்பாங்க என்று குழப்பத்தில் இருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications