பாக்யாவுக்கு ராதிகா கொடுத்த ஐடியா.. வாயடைத்த ஈஸ்வரி.. அப்போ ரசிகர்கள் நிலைமை அவ்வளவுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 30-ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ராதிகா பாக்யாவிற்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ளும்படி அட்வைஸ் கொடுக்கிறார்.

அதே நேரத்தில் கோபி, இனியா தனக்கு சப்போர்ட் பண்ணவில்லையே என்று கேட்க அதற்கு இனியா கோபியை அவமானப்படுத்துகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், ராதிகாவை தொடர்ந்து ரூமிற்குள் வரும் கோபியை பார்த்து ராதிகா, உங்க முன்னாள் மனைவி என்ன பண்றாங்க? யார் கூட பேசிட்டு இருக்காங்க? என்று தான் நீங்க எப்போதும் பார்த்துட்டே இருப்பீங்களா? நீங்க பாக்கறீங்க என்றால் அதுல எனக்கு என்ன வேலை? என்று திட்டிக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் ஈஸ்வரி தாலி கட்டின புருஷனை இப்படித்தான் பேசுவியா என்று கேட்கிறார்.
அதற்கு ராதிகா உங்க பையன் தேவையில்லாத விஷயம் எல்லாம் பேசுவாரு. அதுக்கு நான் சப்போர்ட் பண்ணனுமா? தேவையான வேலையை மட்டும் பார்க்க சொல்லுங்க என்று சொல்ல அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஈஸ்வரி வாயடைத்து போய் நிற்கிறார். மறுபக்கத்தில் எழில், அமிர்தா, செல்வி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எழில் பாக்யாவை கோபியை எதிர்த்து பேசியதற்காக பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு பாக்கியா எவ்வளவு நாள் தான் பொறுமையாக இருக்கிறது. அதனால்தான் நான் கோபியை வீட்டை விட்டு போக சொன்னேன் என்று பேசிக் கொண்டிருக்கும் போது அமிர்தா, நல்லவேளை அங்கிள் ராதிகாவை கல்யாணம் பண்ணுனாரு. எப்படி பேசினாங்க பாத்தீங்களா? என்று கேட்க, அதற்கு எழிலும் இவங்கதான் கேண்டின்கு வரக்கூடாதுன்னு சொன்னாங்க. ஆனா இப்ப அவங்களே அம்மாவுக்கு சப்போர்ட் பண்றாங்க என பேசிக் கொண்டிருக்கின்றனர்.
மறுபக்கத்தில் இனியாவுடன் பேசுவதற்காக கோபி முயற்சி செய்கிறார். அப்போது இனியாவிடம் தான் இதுவரைக்கும் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என்பதை எல்லாம் சொல்லிக்காட்டி, பிறகு நீ ஏன் எனக்கு சப்போர்ட் பண்ணல என்று கேட்க அதற்கு இனியா நீங்க நல்ல அப்பா தான். ஆனால் நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு போன பிறகு அம்மா தான் எல்லாத்தையுமே அப்போ தனி ஆளா நின்னு பாத்துக்கிட்டாங்க.

நீங்க அவங்கள பத்தி பேசுறது தப்பு என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி போகிறார். அதைத் தொடர்ந்து பாக்கியா கிச்சனில் இருக்கிறார். அப்போது அங்கு ராதிகா வருகிறார். ராதிகா பாக்கியாவிடம் நான் உங்ககிட்ட ஒன்னு பேசணும் என்று சொல்லி, நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம் தானே எத்தனை நாளைக்கு தான் தனியாய் இருப்பீங்க? உங்களுக்கும் சின்ன வயசு தானே? நீங்க பழனிச்சாமி கூட நல்லா பேசுறீங்க நல்லா நட்பா இருக்கிறீங்க, அவங்களே நீங்க கல்யாணம் பண்ணிக்கலாம்.
அது உங்க விருப்பம் என்று சொல்கிறார். இதை கேட்ட பாக்யா கல்யாணம் பண்ணவங்க எல்லாரும் சந்தோஷமாவா இருக்குறாங்க என்று கேட்க பக்கத்தில் இருக்கும் செல்வி நான் மட்டுமில்லை யாருமே சந்தோஷமா இல்ல என்று சொல்ல, பாக்கியா ராதிகாவிடம் நீங்க கல்யாணம் பண்ணி சந்தோஷமாவா இருக்கீங்க என்று கேட்கிறார். இதனால் ராதிகா பாக்கியாவிட மன்னிப்பு கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு போகிறார். அதைத் தொடர்ந்து பாக்கியா தன்னோடு ராதிகா சேர்ந்துட்டாங்க என்று ஈஸ்வரி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக. இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications