பாக்கியலட்சுமி: கோபி ஆள் செய்த சதி.. ரெஸ்டாரண்டில் குவிந்த அதிகாரிகள்.. பாக்யாவிற்கு பெரிய பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 12ஆம் தேதிக்கான எபிசோடில் கோபியின் ஆள் பாக்யாவின் ரெஸ்டாரண்டில் உள்ள சாப்பாடில் கலப்படம் செய்ததால் சாப்பாடு கெட்டுப் போய்விட்டது என்று பாக்யாவிடம் வாடிக்கையாளர்கள் பிரச்சனை செய்கிறார்கள்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யா டெலிவரி செய்யும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அந்த நேரத்தில் கோபி செட் பண்ண ஆள் ஆனந்த்திடம் கோபி போன் பண்ணி எப்படி போயிட்டு இருக்கு வேலை என்று கேட்க அதற்கு ஆனந்த் பக்ரீத் வேலையெல்லாம் போயிட்டு இருக்கு சார் இன்னும் கொஞ்ச நேரத்தில் நீங்கள் எதிர்பார்த்தபடி இங்க பிரச்சனை ஆரம்பிச்சிடும் என்று சொல்ல கோபி அந்த கண்கொள்ளா காட்சியை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று சந்தோஷப்படுகிறார்.

அந்த நேரத்தில் பாக்யாவுக்கு பிரச்சனை வர ஆரம்பிக்கிறது. பக்கெட் உடன் ஒருவர் வந்து இந்த பிரியாணியை சாப்பிட்டு என் பொண்ணு வாந்தி எடுத்துட்டு இருக்கா, சிக்கன் 65 இல்ல ஸ்மெல் அதிகமா இருக்கு என்று செல்கிறார். அதற்கு பாக்கியா அப்படியெல்லாம் இருக்காது என்று அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் இதையெல்லாம் பார்த்து ஆனந்தன் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்.
பிறகு ஒவ்வொருவராக பிரியாணி கெட்டுப் போய்விட்டது என்று பக்கெட்டை தூக்கி கொண்டு வந்து பிரச்சனை செய்கின்றனர். இதை சோசியல் மீடியாவில் போடணும், உங்களை ஜெயில்ல பிடிச்சு போடணும் என்று அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட இதற்கு பாக்கியா என்ன செய்ய என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஆனந்த் இதை வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணி கோபி சாருக்கு அனுப்பனும் என்று ரெக்கார்டு அனுப்பி கொண்டிருக்கும் போது செல்வி இதை கவனித்து விடுகிறார்.

அவரிடம் இங்கு எவ்வளவு பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு நீங்க போனை பாத்துட்டு இருக்கீங்க, நீங்கதானே சாப்பாடு செஞ்சீங்க நீங்கதான் வந்து பேசணும் என்று சொல்ல, அதற்கு ஆனந்த் மேடம் அது நம்ம கடை பிரியாணியா இருக்காது என்று செல்வியை சமாளிக்க பார்க்க, அதற்கு என்ன மெதுவா பேசிகிட்டு இருக்கீங்க நீங்க வந்து பேசுங்க என்று செல்வி சொல்ல அதற்கு ஆனந்த மறுக்கிறார்.

அந்த நேரத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வருகின்றனர். அவர்களும் பாக்கியாவை திட்டி விட்டு கடைக்குள் சென்று செக் பண்ணி பார்க்கின்றனர். அப்போது ரெஸ்டாரண்டில் இருந்த ஒரு பக்கெட் எடுத்துக்கொடுக்க அந்த சாப்பாடு எதுவும் கெட்டுப் போகாமல் இருக்கிறது. ஆனால் மக்கள் கொண்டு வந்து கொடுத்த பக்கெட்டில் இறைச்சி கெட்டுப் போயிருக்கிறது. இதை பத்திரிக்கையாளர்கள் செய்தி சேனல்களில் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு நபர் பிரியாணியை நடு ரோட்டில் போட்டு உடைக்கிறார். அதை பார்த்து பாக்கியா அதிர்ச்சியாகி இருக்க, இதையெல்லாம் பத்திரிகையாளர் நியூஸ் ஆக போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்து கோபி சந்தோஷப்படுகிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரிக்கு தகவல் தெரிந்து செழியன் மற்றும் அமிர்தாவை கூப்பிட்டு சொல்கிறார். எல்லோரும் டிவியில் பாக்கியா ரெஸ்டாரண்ட் பற்றி சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications