பாக்கியலட்சுமி: கோபியிடம் கதறி அழுத செழியன்.. ஜெனி எடுத்த முக்கிய முடிவு.. பாக்யா சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 18ஆம் தேதிக்கான எபிசோடில் செழியனுக்கு வேலை போய்விட்டது என்பதால் கோபியிடம் சென்று அழுது புலம்புகிறார். ஆனால் வீட்டில் அந்த உண்மையை மறைத்து விடுகிறார். அதுபோல பாக்கியா பண விஷயத்தில் முக்கிய முடிவெடுத்திருக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் செழியன் ஆபீஸில் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் தங்களுடைய ஆபீஸ் நிலைமை சரியில்லாமல் இருக்கிறது அதனால் வேறு வழியில்லாமல் தான் இந்த முடிவு எடுத்தோம் நீங்கள் நோட்டீஸ் பீரியட் கூட வேலை பார்க்க வேண்டாம். இன்றைக்கு வேலையில் இருந்து ரிலீவ் ஆகிவிடலாம் என்று சொல்லுகின்றனர்.

இதனால் வேறு வழி இன்றி தன்னுடைய ஐடி கார்டு கொடுத்துவிட்டு உடைந்து போய் வெளியே வருகிறார். மறுபக்கத்தில் எழில் பாக்கியா படும் கஷ்டத்தை நினைத்து அமிர்தாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார். அம்மா 11 லட்சம் கொடுக்க வேண்டும் என்னால் ஒண்ணுமே செய்ய முடியவில்லை இந்த நேரத்தில் உறுதுணையாக இருக்கணும் என்று நினைக்கிறேன் ஆனால் இப்படி எதுவும் செய்ய முடியாத நிலைமையில் இருக்கிறேனே என்று அழுது கொண்டிருக்கிறார்.

அதோடு நான் என்னுடைய சுய கௌரவத்தையும் ஆசைகளையும் மண் தோண்டி புதைத்து விட்டு கிடைக்கிற வேலைக்கு போக போறேன் என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு அமிர்தா எல்லாம் சரியாகும் என்று நம்பிக்கை கொடுக்கிறார். இதைத்தொடர்ந்து செழியன் கோபியின் ரெஸ்டாரண்டுக்கு சோகமாக வர கோபி என்னாச்சு என்று கேட்டதும் கையில் இருக்கும் பேக்கை கீழே போட்டு விட்டு கதறி அழுது கொண்டிருக்கிறார்.
கோபி தன்னிடம் வேலை பார்ப்பவர்களை உள்ளே போக சொல்லிவிட்டு நடந்தது என்னவென்று விசாரிக்க செழியன் வேலை போய்விட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு கோபி இதைவிட நல்ல வேலை கிடைக்கும் என்று அட்வைஸ் பண்ணுகிறார். மறுபக்கத்தில் பாக்கியா ஈஸ்வரி வீட்டில் சாப்பிடவில்லை என்று செல்வியிடம் கவலைப்பட்டு கொண்டிருக்கிறார்.

அப்போது ஜெனி தன்னுடைய நகைகளை எடுத்து கொடுத்து அடகு வைத்து விட்டு கடன் பிரச்சனையை கொடுக்குமாறு சொல்கிறார். ஆனால் அப்படியெல்லாம் வேண்டாம் நான் நிச்சயம் இந்த பிரச்சனையை எப்படியாவது முடிப்பேன் என்று பாக்கியா சொல்கிறார். அடுத்த கட்டத்தில் செழியன் வீட்டிற்கு வருகிறார் எதுவுமே சொல்லாமல் வீட்டிற்குள் போய்விடுகிறார்.

தனக்கு வேலை போன விஷயத்தை அவர் வீட்டில் யாரும் சொல்லாமல் இருக்கிறார். அதே நேரத்தில் எழில் பழைய ப்ரொடியூசரை சந்தித்து தனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு கெஞ்சுகிறார். ஆனாலும் அவர் நான் உனக்கு தந்த வாய்ப்பை நீ சரியா பயன்படுத்தல. அதனால உனக்கு இன்னொரு வாய்ப்பு தர முடியாது என்று மறுத்து விடுகிறார். வேறு வழி தெரியாமல் எழில் அங்கேயே சோகமாக இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications