பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரியாகும் விஜய் டிவி நடிகையின் கணவர்.. இனியாவால் பாக்யா அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி எழிலுக்கு செய்த உதவி குறித்து செழியனிடம் சொல்கிறார். அதே நேரத்தில் இந்த சீரியலில் இன்று விஜய் டிவி சீரியல் நடிகையின் கணவர் என்ட்ரி கொடுக்கிறார். மேலும் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபியையும் செழியனும் வாக்கிங் போகும்போது மீட் பண்ணுகின்றனர். அப்போது செழியன் இடம் கோபி வருத்தப்படாத நான் உனக்கு எப்படியாவது வேலைக்கு ரெடி பண்ணி தாரேன். அதற்காகத்தான் நான் சிலரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அதோடு தன்னுடைய ப்ரொடியூசர் நண்பரை தான் பல வருடங்கள் கழித்து பார்த்ததாகவும் அவரிடம் எழிலுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்ததாக சொல்ல, செழியன் ரொம்பவும் சந்தோஷப்படுகிறார். நீங்கள் தான் பெஸ்ட் அப்பா என்று செழியன் உருகி கொண்டிருக்கிறார். அப்போதும் கோபி பாக்கியா மீது இருக்கும் வன்மத்தை கக்குகிறார். நான் உங்கள் அம்மாவை மட்டும்தான் விவாகரத்து செய்தேன் உங்களை யாரையும் விட்டுட்டு போகணும்னு நினைக்கல.
சிறகடிக்க ஆசை: போனை தூக்கிய ரோகிணி.. உண்மைகளை உளறிய முத்து.. அண்ணாமலை எடுத்த எதிர்பாராத முடிவு
ஆனால் உங்களுடைய மனதில் உங்க அம்மா என்னை பற்றி தவறான சிந்தனைகளை விதைத்திருக்கா. நான் எப்போதும் நீங்க சந்தோஷமா இருக்கணும் என்று நினைக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு உனக்கு கூடிய சீக்கிரத்தில் ஒரு வேலையை ரெடி பண்ணி விடுவேன் என்று சொல்லிக் கொண்டு நான் தான் எழிலுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன் என்று ஒருபோதும் அவனுக்கு தெரியக்கூடாது.
நீ அவனிடம் எதுவும் சொல்லிடாத. அவன் கவரிமான் மாதிரி இதெல்லாம் வேண்டாம் என்று ரொம்ப பிகு பண்ணுவான் என்று சொல்கிறார். அதற்கு எழில் அந்த ப்ரொடியூசர் உங்க பேரை சொல்லிட்டா என்ன பண்றதுன்னு கேட்க நான் அவரிடம் சொல்ல கூடாதுன்னு ஸ்ட்ரைட்டா சொல்லிட்டேன். நீ எழில் இடம் சொல்லி அந்த புரொடியூசரை சந்திக்க சொல்லு என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
இன்னொரு பக்கத்தில் இனியா காலேஜில் டீச்சரை சந்திப்பதற்காக பாக்கியாவை கூட்டிட்டு போகிறார். அங்கு இனியாவை டான்ஸ் மாஸ்டரிடம் சேர்த்து விடுமாறு டீச்சர் சொல்ல, சரி என்று பாக்கியா டான்ஸ் மாஸ்டரை சந்திக்க வருகிறார். (சீரியல் நடிகை காயத்ரியின் கணவர் யுவராஜ் தான் டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார்). ஆனால் அவர் 15000 பீஸ் கட்டணும் என்றும் சொன்னதும் பாக்கியா சரி நாளையில் இருந்து வருகிறோம் என்று சொல்லி அங்கிருந்து இனியாவை அவசர அவசரமாக கூட்டிக்கொண்டு வெளியே வருகிறார்.

ரோட்டில் வரும்போது இனியா பாக்யாவிடம் நான் இந்த டான்ஸ் கிளாஸில் சேருகிறேன் அம்மா. அப்பதான் என்னால ஒழுங்கா டான்ஸ் பிராக்டிஸ் பண்ண முடியும். நான் இந்த போட்டியில் ஜெயிக்கணும் என்று கெஞ்சி கொண்டிருக்கிறார். ஆனால் பாக்கியா தன்னால் 2000 என்றால் தர முடியும் 15,000 என்றால் தர முடியாத நிலை என்று நிலைமையை புரிய வைக்கிறார்.
ஆனாலும் இனியா அடம் பிடித்துக் கொண்டு வருகிறார். அந்த நேரத்தில் கோபி ராதிகாவோடு அதே தெருவில் ஷாப்பிங் வந்திருக்கிறார். கோபியும் ராதிகாவும் காரில் வரும்போது இனியாவும் பாக்கியாவும் வாக்குவாதம் செய்து கொண்டு இருப்பதை பார்க்கிறார். கோபி நான் என்னென்னு விசாரிச்சிட்டு வர்றேன் என்று கிளம்ப, ராதிகா இப்ப போக வேண்டாம் இனியாவுக்கு கால் பண்ணி பிறகு பேசிக்கோங்க என்று தடுக்கிறார்.
இதுவும் சரியாக தான் என்று கோபி காரை எடுத்துவிட்டு செல்கிறார். இறுதியாக பாக்யா ரெஸ்டாரண்டை ஆரம்பிக்க அங்கு வேலை ஆட்கள் இருவர் வரவில்லை. அவர்கள் இனி வரமாட்டார்கள் என்று சொல்கிறார்கள். அதற்குப் பிறகு அங்கு இருப்பவர்களிடம் கஸ்டமர் வராங்களான்னு பார்த்து சமையலை கால்வாசியா குறைத்து பண்ணுங்க என்று பாக்கியா ஆர்டர் போடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications