பாக்கியலட்சுமி: இனியா தப்பு பண்ணுனதை நான் பார்த்தேன்! ஆவேசப்பட்ட நிதிஷ், பாக்யா கொடுத்த அதிரடி பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் ஜூன் ஒன்பதாம் தேதி முதல் பதிமூன்றாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆகாஷ் இனியா மீது தவறான குற்றச்சாட்டு வைக்க அதனால் கோபமான பாக்கியா சுதாகர் குடும்பத்திடம் நேருக்கு நேர் சவால் விடுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவுக்கு மட்டும் ஒவ்வொரு வாரமும் புதியது புதியதாக பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு பிரச்சனையிலும் பாக்கியா ஜெயித்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார். கடந்த வாரத்தில் பாக்யாவுக்கு சப்போர்ட் செய்து செழியன் கவுன்சிலரை அடித்திருந்தார். அதனால் கவுன்சிலர் செழியன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்ததால் செழியனை போலீஸ் கைது செய்து வைத்திருந்தனர்.

Baakiyalakshmi Serial vijay TV

செழியன் செய்த செயல்

செழியனை பல போராட்டங்களுக்குப் பிறகு பாக்யா ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வந்திருந்தார். ஏற்கனவே கவுன்சிலர் பாக்யா மீது கோபத்தில் இருக்கிறார், இப்போது அவருடைய பதவியையும் நாம் பாக்கியாவால் பறிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அடுத்து என்ன செய்வாரோ என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் இப்போது இனியா வாழ்க்கையில் பிரச்சனை வர தொடங்கிவிட்டது.

நிதிஷுக்கு தெரிந்த உண்மை

இனியா இதுவரைக்கும் தன்னுடைய அம்மாவிற்காக சுதாகரிடம் எதிர்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு நிதிஷ் இனியாவை அதட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது இனியாவும் ஆகாஷும் ஏற்கனவே காதலித்தார்கள் என்ற விஷயமும் நிதிஷுக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் இதுவரைக்கும் இதை சொல்லாமல் இருந்த நிதிஷ் இப்போது ஆகாஷ் மற்றும் இனியா இருவரும் பேசியதை பார்த்ததும் சொல்லி இருக்கிறார்.

குடும்பத்தினரின் அவமதிப்பு

அதோடு இனியா பற்றி தன்னுடைய அம்மா அப்பாவிடமும் நிதிஷ் சொல்லி இருக்கிறார். இதனால் எல்லோரும் இனியா மீது வெறுப்பை காட்ட அதனால் கோபமான இனியா இது பற்றி கோபியிடம் சொல்லி இருக்கிறார். இப்படியான நிலையில் அடுத்த வாரத்திற்கு என்று வெளியான ப்ரோமோவில் கோபி பாக்யாவிடம் இனியா வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து சொல்லி இருக்கிறார்கள்.

Baakiyalakshmi Serial vijay TV

நிதிஷ் சொன்ன வார்த்தை

இதனால் பாக்கியாவும் கோபியும் சுதாகர் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அப்போது ரெஸ்டாரண்ட் விஷயத்தில் நான் அமைதியாக இருந்த மாதிரி என் பொண்ணு வாழ்க்கையில் ஏதாவது நடக்கும் போதும் என்னால பாத்துட்டு இருக்க முடியாது என்று சொல்ல, அதற்கு நிதிஷ் தினம் தினம் உங்க ஹோட்டலுக்கு அவா ஏன் வரானு எனக்கு தெரியாதுன்னு நெனச்சீங்களா என்று கேட்க, அதற்கு பாக்கியா அவ கண்டிப்பா எந்த தப்பும் பண்ண மாட்டா என்று சொன்னதும் நிதிஷ் எழுந்து நின்று, சும்மா கதை சொல்லாதீங்க அவ இன்னும் அவன் கூட பழகிக்கிட்டே தான் இருக்கிறா.

Baakiyalakshmi Serial vijay TV

புது பிரச்சனை

அந்த ஆகாஷும் இனியாவும் பேசி பழகுறதை என் கண்ணால நானே பார்த்தேன் என்று சொல்ல, அதற்கு கோபமான பாக்கியா இனிமேல் இனியாவை மரியாதை குறைவா பேசினீங்க, நடத்துனீங்கன்னா நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன் என்று வார்னிங் கொடுக்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் அடுத்த வாரத்தில் இனியா வீட்டில் புது பிரச்சனை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+