பாக்கியலட்சுமி: கோபியை வைத்து பாக்கியாவை பழிவாங்க வந்த புது வில்லன்.. தரமான சம்பவம் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 27ஆம் தேதி மற்றும் 28ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யாவிற்கு சுதாகர் என்ற புது வில்லன் பிரச்சனை கொடுக்க வந்திருக்கிறார். அவர் எதற்காக வந்திருக்கிறார் என்று விரிவாக பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்று கடந்த மாதமே தகவல்கள் வெளியானது. ஆனாலும் அது எப்போது முடிவுக்கு வரப்போகிறது என்று யாருக்கும் தெரியாத ரகசியம்தான். இந்த சீரியலை பிரமோஷன் செய்வதற்காகவே முடிவடைய போகிறது என்று ஒரு உருட்டு உருட்டிவிட்டார்கள் என்று தான் தோன்றுகிறது. ஏற்கனவே இனியாவின் காதல் விஷயம் குடும்பத்திற்கு தெரிய வந்ததும் இனியாவின் திருமணத்தோடு சீரியல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

Baakiyalakshmi Serial vijay TV

சந்தோஷத்தில் ஈஸ்வரி

ஆனால் இப்போது சில மாதங்கள் கடந்து என்று கதை பயணித்து வருகிறது. இனியா பாக்கியா சொன்னது போலவே தன்னுடைய காதலன் ஆகாஷை நேரில் சந்திக்காமல் தன்னுடைய படிப்பை முடித்து இருக்கிறார். ஆனால் ஆகாஷ் நினைத்த மாதிரி அவர் யுபிஎஸ் எக்ஸாமில் பாஸ் ஆக முடியவில்லை. இதை கேட்டு ஈஸ்வரி, செழியன் எல்லோரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

மீண்டும் திருமண ஏற்பாடு

அதே நேரத்தில் இனியாவிற்கு மீண்டும் திருமண ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பாக்கியாவிற்கு புது பிரச்சனை வந்திருக்கிறது. பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு இன்று சில ஆட்கள் வந்திருந்தார்கள். அவர்கள் இந்த ரெஸ்டாரண்ட் சரியாக இருக்கும் என்று பேசிக்கொண்டு இருந்ததை பார்த்து பாக்கியா யார் என்ன விஷயம் என்னவென்று விசாரிக்க அதற்கு அவர்கள் உங்களுக்கு சுதாகர் சார் தெரியுமா? என்று கேட்க யார் அந்த சுதாகர் எனக்கு தெரியாது என்று பாக்கியா சொல்லியிருந்தார்.

அறிமுகமாகும் சுதாகர்

நீங்க இப்போதான வளர்ந்து வரீங்க அதனால உங்களுக்கு தெரிஞ்சிருக்காது அவர் பெரிய தொழிலதிபர். அவர் இந்த இடத்தில் ஒரு ரெஸ்டாரண்ட் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் இந்த இடத்தை எங்களுக்கு கொடுத்துடுங்க என்று மிரட்டி இருந்தனர். அதற்கு பாக்யா பதிலடி கொடுத்து அவர்களை அனுப்பி இருந்தார்.

புது வில்லன்

இந்த நிலையில் தற்போது இன்று மற்றும் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்யாவின் வீட்டிற்கு அந்த சுதாகர் வருகிறார். பாக்யா யாரென்று விசாரிக்க மேடம் நான் தான் சுதாகர் உங்க ரெஸ்டாரண்ட்டை விலைக்கு கேட்டது நான்தான் என்று அறிமுகம் செய்கிறார். அதற்கு பாக்கியா நான் தான் ரெஸ்டாரண்ட் கொடுக்க முடியாதுன்னு நேற்றே சொல்லிட்டேன்ல என்று சொல்ல, அதற்கு சுதாகர் ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கும் ஒரு ரெஸ்டாரன்ட் தொடங்குவது தான் எங்களுடைய லட்சியம் என்று சொல்ல, அதற்கு பாக்கியா இந்த ரெஸ்டாரண்ட் என் உழைப்பின் அடையாளம் இதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல, அதற்கு சுதாகர் எப்படி இந்த ரெஸ்டாரண்டை உங்க கிட்ட இருந்து வாங்கணும் என்று எனக்கு தெரியும் என்று சொல்கிறார்.

சுதாகர் போடும் பிளான்

அதற்கு பாக்கியா உங்களால முடிஞ்சதை பண்ணிக்கோங்க, வெளியே போங்க என்று விரட்டி விடுகிறார். பிறகு சுதாகர் தன்னுடைய வீட்டில் யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் அவருடைய ஆட்கள் பாக்கியலட்சுமியும் அவர்களுடைய ஹஸ்பண்டுக்கும் டைவர்ஸ் ஆகிடுச்சு. அவர்களுடைய ஹஸ்பண்ட் கிளவுட் கிட்சன் நடத்திட்டு இருக்கிறார் என்று சொல்கிறார்.

கோபியின் முடிவு

நான் அவரை உடனே சந்திக்கணும் அவரை வர சொல்லுங்க என்று சுதாகர் சொல்லி அனுப்புகிறார். இதனால் பாக்யாவின் அடுத்த புரட்சி தொடங்கியிருக்கிறது. இதில் பாக்கியாவிற்கு சப்போர்ட்டாக கோபி இருக்கப் போகிறாரா? அல்லது கோபி பாக்யாவை மீண்டும் பழிவாங்க போகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ஏற்கனவே செல்வியை வேலைக்கு சேர்த்தது எனக்கு பிடிக்கவில்லை என்று கோபி கோபப்பட்டு கொண்டிருக்கிறார். இதனால் இனி மனம் மாறுவாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+