பாக்கியலட்சுமி: பாக்யாவுக்கு மீண்டும் கல்யாணம்! ஈஸ்வரி எடுத்த முடிவு.. ஆனால் எழில் சொன்ன எதிர்பாராத பதில்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யாவிற்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஈஸ்வரி முடிவு எடுக்கிறார். ஆனால் அதற்கு செழியன் மற்றும் எழில் இருவரும் எதிர்பார்க்காத பதில் சொல்கின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த சீரியலில் சில மாதங்களாக ரிப்பீட்டு மோடில் கதை வந்து கொண்டே இருந்ததால் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது என்பது பலருடைய கருத்தாக இருந்தது. அதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக ராதிகாவிடமிருந்து பிரிந்து மீண்டும் கோபி பாக்கியா வீட்டிற்கு வந்துவிட்டார்.

அதுபோல ராதிகாவும் கோபியின் வாழ்க்கையில் இருந்து விவாகரத்து வாங்கி பிரிந்து போய்விட்டார். இந்த நிலையில் இனியா செல்வியின் மகனை காதலிக்கும் விஷயமும் தெரிய வந்திருக்கிறது. இதனால் இனியாவின் திருமணத்தை நோக்கிதான் சீரியல் போகும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இன்று வெளியான ப்ரோமோ வியப்பை கொடுத்து இருக்கிறது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா பகிர்ந்த போட்டோஸ்..குவியும் வாழ்த்து
அதாவது ராதிகாவை பிரித்து வைத்துவிட்டு பாக்யாவிற்கும் கோபிக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஈஸ்வரி நினைத்துக் கொண்டிருந்தார். இன்று அதற்கான வேலையை பிரமோவில் செயல்படுத்த தொடங்கி இருக்கிறார். அதாவது கோபியிடம் நீ இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது. உனக்கும் பாக்கியாவிற்கும் மீண்டும் கல்யாணம் நடத்த வேண்டும் என்று சொல்ல,

அதற்கு கோபி இந்த முடிவை நான் மட்டும் எப்படி எடுக்க முடியும்? இதற்கு பாக்கியாவும் சம்மதம் சொல்லனுமே என்று சொல்ல, உனக்கு சம்மதம் என்றால் சொல்லு நான் பாக்கியாவிடம் பேசுகிறேன் என்று ஈஸ்வரி சொல்கிறார். பிறகு கோபி சம்மதம் சொல்லிவிடுகிறார். அதை தொடர்ந்து எழில் மற்றும் செழியனை ஈஸ்வரி கோவிலுக்கு வரச் சொல்லி இருக்கிறார்.
பாக்கியலட்சுமி: ஈஸ்வரி சொல்பேச்சுக்கு ஆடும் பாக்யா.. இப்படி மாறிட்டாரே! அப்போ இனியா நிலைமை?
அவர்களிடமும் நான் பாக்யாவிற்கும் கோபிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறேன் என்று சொல்ல, அதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர். அப்போது எழில் அம்மாவுக்கு துணை வேணும்னு நினைச்சா அவங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கட்டும். நானே முன்னாடி நின்னு அந்த கல்யாணத்தை நடத்தி வைப்பேன்.

ஆனால் அது அவரோட( கோபி) என்றால், கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்ல, இதை எதிர்பார்க்காத ஈஸ்வரி அதிர்ச்சியில் இருக்கிறார். நான் எப்படியாவது கோபியையும் பாக்கியாவையும் சேர்ந்து வாழ வைப்பேன் என்று இறந்து போன கணவர் மீது சத்தியம் செய்து வைத்திருக்கும் ஈஸ்வரி எழில் சொன்ன இந்த பதிலைக் கேட்டு இனி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
ஏற்கனவே சில மாதங்களாகவே பழனிச்சாமியின் குடும்பத்தினரை காணவே இல்லை. மீண்டும் பழனிசாமியின் குடும்பம் ரீ என்ட்ரி இருக்குமா? பாக்யாவிற்கும் பழனிச்சாமிக்கும் கல்யாணம் செய்து வைப்பதற்காக எழில் முடிவு எடுப்பாரா என்றும் கேள்விகள் எழுகிறது. எது எப்படியோ இனிவரும் எபிசோடு பரபரப்பாக இருக்கப் போகிறது என்று மட்டும் தெரிகிறது.

பாக்யாவிற்கும் கோபிக்கும் மீண்டும் கல்யாணம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது பாக்கியா யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லையென்றால் இந்த சீரியலுக்கு சீக்கிரமாக முடிவு போட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சொல்லுங்க பாஸ்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications