பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபியின் நிலைமை இதுதானாம்.! புதிய கதாநாயகன் பற்றி பேசிய ராமமூர்த்தி
பாக்கியலட்சுமி சீரியலில் இனி வரும் கதையைப் பற்றி அந்த சீரியலில் ராமமூர்த்தி பல தகவல்களை கூறியிருக்கிறார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்.டி.பி ரோசரி நடித்து வருகிறார்.
இனி பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கேரக்டர் எந்த மாதிரி இருக்கப் போகிறது என்று முதல் முறையாக அவர் பல தகவல்களை கூறி இருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் பசுபதி அறிமுகமாகி இருப்பதை குறித்தும் பல தகவல்களை எஸ்டிபி ரோசரி கூறியிருக்கிறார்.

இனி வரும் சுவாரசியம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் மாமனாராக எஸ்டிபி ரோசரி நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அதில் பாக்கியலட்சுமி சீரியலில் இனி நடக்க இருக்கும் பல ட்விஸ்ட்கள் பற்றி பல தகவல்களை கூறி இருக்கிறார். அந்த வகையில் நடிகர் பசுபதி இப்ப பழனிச்சாமி கேரக்டரில் புதியதாக சீரியலில் அறிமுகமாகி இருப்பதால் இனி சீரியலில் என்ன மாதிரி ட்விஸ்ட் வர இருக்கிறது என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் புதிய கேரக்டர் அறிமுகத்தால் ஏற்கனவே பல மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது. கதையில் சுவாரசியமும் இனி அதிகமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

மாற்றம் இல்லை
அதுமட்டுமில்லாமல் நடிகர் பசுபதி அறிமுகத்தால் இனி கோபியின் கேரக்டர் பாதிக்கப்படுமா? என்று ஏற்கனவே கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷ் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் கேள்வி வரும் நிலையில் அதற்கும் அந்த வீடியோவில் அவர் பதில் அளித்திருக்கிறார். அந்த மாதிரி எந்த ஒரு மாற்றமும் வராது. ஏற்கனவே இந்த சீரியல் எந்த அளவிற்கு வெற்றி பெறுவதற்கு முக்கியமான கேரக்டரில் கோபி கேரக்டரும் இருந்து வருகிறார். அதனால் எந்த இடத்திலும் கோபி கேரக்டரை குறைக்க மாட்டார்கள். தொடர்ந்து கோபிக்கு இதே போல தான் ரோல் இருந்து கொண்டிருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

அதுபோல இருக்காதாம்
பழனிச்சாமி மற்றும் பாக்யாவின் கதை கொஞ்சம் அதிகமாக இனி இருக்கப் போகிறது என்றும் வேற மொழிகளில் இந்த சீரியலில் பாக்கியாவிற்கும் பழனிச்சாமிக்கும் திருமணம் டிராக் வரைக்கும் வந்துவிட்டது. இந்த சீரியலில் இப்போதுதான் இங்கே பழனிச்சாமி அறிமுகம் வந்திருக்கிறது. பழனிச்சாமி இந்த சீரியலில் அறிமுகமானதால் இனி கதையே மாறிவிடும் என்று பலரும் யூகிக்க தொடங்கி விட்டார்கள். அது உண்மைதான். ஆனால் பிற மொழி சீரியல்களைப் போல இந்த சீரியல் இருக்காது என்று நான் நினைக்கிறேன். ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியல் பிற மொழி தழுவல் ஆக இருந்தாலும் இங்கே பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறியிருக்கிறார்.

எப்படி வேண்டும் என்றாலும் மாறலாம்
மேலும் எஸ்.டி.பி ரோசரி பேசுகையில், பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த ட்விஸ்ட் இனி வர இருக்கிறது. அதுவும் ரசிகர்கள் இப்போது கருத்து வெளியிட்டு கமெண்ட்களில் கேட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பழனிச்சாமி அறிமுகமாகும் போது அனைவரும் இது இதுதான் பாக்யாவிற்கு ஜோடியா என்று கேட்க தொடங்கி விட்டார்கள். நாங்கள் இந்த மாதிரி கதையை வைத்தால் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று நினைத்திருந்தோம். ஆனால் தற்போது ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு பார்க்கும் போது கதை இனி எப்படி வேணாலும் மாறலாம் என்று வாய்ப்பிருக்கிறது என கூறியிருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications