எனக்கும் தான் அந்த நடிகரை "பதம்” பார்க்கணும்..ஓபன் ஆக சொன்ன ரேஷ்மா.. கடைசியில் இப்படி ஆகிடுச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ராதிகா கேரக்டரில் நடித்து வருகிறார்.

அடிக்கடி மார்டன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ரேஷ்மா பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் ரேஷ்மாவை பற்றி இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளால் கருத்து தெரிவித்த ரசிகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.

பல முகம் இருக்கு

பல முகம் இருக்கு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக தெரிந்த ரேஷ்மா பசுபுலேட்டி அவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் தொகுப்பாளியாக தான் ஆரம்பத்தில் தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். ஒரு ஆங்கில செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, இன்று திரைப்படங்கள், வெப் தொடர்கள், டிவி சீரியல்கள் என பிஸியாக ரசிகர்களின் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல் அந்தரங்கம் அன்லிமிடெட் என்ற பாட் காட்ஸ் தொடரையும் நடத்த இருக்கிறார். ஏர் ஹோஸ்டர்ஸ், நர்ஸ், தொகுப்பாளி என பல முகம் கொண்ட ரேஷ்மா தற்போது சமூக வலைத்தளத்திலும் பிரபலமாக இருந்து வருகிறார்.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

ரேஷ்மா 2015 ஆம் ஆண்டு வெளியான மசாலா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானாலும், அவருக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்தது என்றால் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் தான். இந்த திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் இவர் பட்டையை கிளப்பி இருக்கிறார். அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக வலம் வர தொடங்கினார்.

அதைப் பற்றி கவலை இல்லை

அதைப் பற்றி கவலை இல்லை

இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் எனும் சீரியலில் மெயின் வில்லியாகவும் களமிறங்கி இருக்கிறார். அடிக்கடி சமூக வலைத்தளத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு இவர் அதிகமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வைத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்கள் போட்டோவுக்கு இணையவாசி ஒருவர், உன்னை பதம் பார்க்கணும் என்று கமெண்ட் செய்துள்ளதை குறித்து கேட்டிருக்கின்றனர். அதற்கு என் உடம்பு, மார்பகம், பின்னழகை பற்றி நிறைய பேசுவார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கொஞ்சம் கூட கவலையே படமாட்டேன்.

அந்த அதிர்ஷ்டசாலி இவர்தானாம்

அந்த அதிர்ஷ்டசாலி இவர்தானாம்

அது மட்டுமல்லாமல் நீங்க சொன்னது போல் எனக்கும் கூட பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை ஒரு முறை பதம் பார்க்கணும் போல் உள்ளது. ஆனால் என்ன பண்ண முடியும்? அவர் மனைவி ஆலியா பட் என்னை செருப்பால் அடிக்க மாட்டாங்க? பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க. அதை எல்லாம் கண்டுக்காம நாம் நம் வேலையை மட்டும் பார்க்கணும் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த மாதிரி கருத்து ஓபன் ஆகவா சொல்றது என்று கமெண்ட்களை கொட்டுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+