நியூட்டனையே கோபமடைய வைக்கும் பாக்கியலட்சுமி காட்சி.. அந்தரத்தில் நடந்த கொடுமை..உலக திரையுலகமே காணாதது
: உலகத்தில் எங்கும் நடக்காத அதிசயங்கள் எல்லாம் சில சீரியல்களின் காட்சிகளாக வந்து ரசிகர்களை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இப்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. அது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

ஒருவேளை புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்த நியூட்டன் இப்போது உயிரோடு இருந்திருந்தால் இந்த சீரியலின் காட்சிகளை பார்த்து அவரே தற்கொலை பண்ணி இருப்பார் என்று இணையத்தில் ரசிகர்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் என்னதான் நடந்தது என்பதை பார்ப்போம். பொதுவாக மக்கள் தங்களுடைய கவலையை மறப்பதற்காக பொழுதுபோக்குகளை நாடுவது வாடிக்கையாக இருக்கிறது. அதில் இணையத்தின் பயன்பாடால் பலர் இணையத்தை பயன்படுத்தி கொண்டு இருந்தாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் தொலைக்காட்சியை தான் நம்பி கொண்டிருக்கின்றனர்.
இதை பயன்படுத்திக் கொண்ட சில தொலைக்காட்சி சேனல்கள் தாங்கள் என்ன வேணாலும் செய்தாலும், சொன்னாலும் அதை மக்கள் பார்ப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு உலகத்தில் எங்கும் நடக்காத விஷயங்களையும் யாரும் செய்யத் துணியாத காரியங்களையும் கூட சீரியலில் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது தமிழ் சீரியல்களில் மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் இந்த நிலைதான் இருக்கிறது என்பதற்கு சான்றாகத்தான் இப்போது இணையத்தில் ஒரு வீடியோ பலரையும் வாயை பிளக்க வைத்து இருக்கிறது.
பொதுவாக ஹிந்தி சீரியல்கள் தாக்கம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது. அந்த ஹிந்தி சீரியல்களில் கதாநாயகிகள் போடும் ஆடை அணிகலனை பார்ப்பதற்காகவே தமிழ் ரசிகர்கள் அந்த மொழி புரியாமலே கூட சீரியலை பார்த்து வருபவர்கள் ஏராளம் இருக்கின்றனர். அதுபோல "சில" தமிழ் சீரியல் இயக்குனர்களும் தங்களுடைய மூளையை கழட்டி வைத்து விட்டு பிற மொழி சீரியல்களை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து விடுகிறார்கள்.
அதில் வரும் கதையை அப்படியே பின்பற்றுவதால் நமது கலாச்சாரம், பண்பாடு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. அது குறித்து பலர் வேதனைப்பட்டு கொண்டு இருந்தாலும் நாங்கள் இப்படித்தான் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அந்த மாதிரி தான் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அப்பா தொடங்கி மகன்கள் வரை எல்லோருக்கும் ரெண்டு பொண்டாட்டி கான்செப்ட் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுவும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் இந்த சீரியலும் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் இதே தமிழ் பாக்கியலட்சுமி பெயரை ஹிந்தியில் கொண்ட ஒரு சீரியலில் இப்போது எல்லோரும் கண்களை விரிய வைக்கும் அளவிற்கு ஒரு காட்சி உருட்டப்பட்டு இருக்கிறது.
அதாவது அந்த சீரியலில் கதாநாயகி லட்சுமியும் அவருடைய கணவர் ரிஷியும் ஹனிமூனுக்கு சென்று இருக்கின்றனர். அப்போது வில்லியான மலிஷ்கா இவர்களை கொலை செய்வதற்காக ஒரு ட்ரக்கை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் இவர்களை கொலை செய்வதற்காக ஏற்பாடுகளை செய்கிறார். அதிலிருந்து இவர்கள் தப்பித்து இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக மலை உச்சியில் கதாநாயகி தொங்கிக் கொண்டிருக்கிறார்.
அப்போது கதாநாயகன் அவரை காப்பாற்றுவதற்காக ட்ரை பண்ணி கொண்டிருக்கிறார். ஆனாலும் கதாநாயகி லட்சுமி ரிஷிவின் கைப்பிடியில் இருந்து தவறி அந்த மலை உச்சியில் இருந்து கீழே விழுகிறார். அப்போது அதிர்ச்சியான ரிஷியும் அதைத் தொடர்ந்து உச்சியில் இருந்து குதிக்கிறார். முதலில் கீழே வந்து கொண்டிருந்த லட்சுமியை தாண்டி ரிஷி பரந்தபடியே கீழே வந்து லட்சுமியை தாங்கி பிடித்துக் கொள்கிறார்.
அதோடு தன்னுடைய காதலை ஏற்றுக் கொள் என்று ரிஷி சொல்ல அந்த நேரத்தில் லட்சுமி மயங்கி விடுகிறார். அப்போது தன்னுடைய காதல் ஆழத்தை பற்றி ரிஷ காற்றில் பறந்தபடியே சொல்லிக் கொண்டிருக்கிறார். இதுவெல்லாம் பல நிமிடங்களுக்கு ஸ்லோ மோஷனில் காட்டப்படுகிறது. இப்படியாக இவர்கள் பரந்தபடியே கீழே வந்து கொண்டே இருக்க அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பில் பல நிமிடங்களுக்கு மேலாக ரசிகர்கள் காத்திருக்க வேண்டியது இருக்கிறது.
ஒரு கட்டத்தில் பல மரங்களில் ரிஷியுடைய தலை அடிபடுகிறது ஆனால் லட்சுமிக்கு எதுவும் ஆகவில்லை. புவியீர்ப்பு விசையில் ஒரு பொருள் விழுந்தால் அது கீழே நோக்கி வரும் என்பதை நியூட்டன் கண்டுபிடித்து அதை ஒரு விதியாகவே சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த சீரியலில் கீழே விழுந்த ரிஷி அப்படியே காற்றில் பல்டி அடித்து லட்சுமி தன்னுடைய நெஞ்சில் சுமந்தபடி மல்லாந்து வானத்தைப் பார்த்தபடியே கீழே பறந்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் இவர்கள் கீழே ஓடும் ஆற்றில் விழுந்து விடுகிறார்கள். பிறகு சீரியலின் கதைப்படி இவர்களை மலையில் வாழும் மக்கள் காப்பாற்றி விடுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காட்சி இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் இப்படியெல்லாம் காட்சிகள் எடுப்பதற்கு எங்கிருந்துதான் இவர்கள் யோசிப்பார்களோ? கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
ஒருவேளை இந்த காட்சிகளை நியூட்டன் பார்த்தால் அவரே நம்ம கண்டுபிடித்த விதி எல்லாம் பொய்யா என்று குழம்பி போய்விடுவார். அதுபோல காதல் என்று சொல்லிக்கொண்டு மலை உச்சியில் விழுந்தால் இப்படி இருக்கும் என்று யாரும் முயற்சித்து விட வேண்டாம் என்றும் ரசிகர்கள் பயந்தபடியே பலருக்கு வார்னிங் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
They did it best🥲 pic.twitter.com/JjWhDMKZY3
— mon💋 (@asliwaalimon) October 23, 2023












Click it and Unblock the Notifications