பாக்கியலட்சுமி: இனியாவை வைத்து கலகம் ஏற்படுத்தும் கோபி.. கடிதத்தில் ராமமூர்த்தி கொடுத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் 13-ஆம் தேதிக்கான எபிசோடில் இனியாவை தனியாக கூட்டிட்டு போய் கோபி குடும்பத்தை பற்றி பல தகவல்களை சொல்கிறார். மறுபக்கத்தில் ராமமூர்த்தி இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் பாக்கியா கையில் கிடைக்க, அதை படித்து எல்லோரும் அழுது கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் எழில் இனியாவை கூட்டிக்கொண்டு வெளியே போயிருந்த நிலையில் அங்கு வந்த கோபி இனியாவை தன்னோடு அழைத்துச் செல்ல கேட்க அதற்கு எழில் சரி என்று சம்மதம் சொல்லிவிடுகிறார். பிறகு எழில் வீட்டிற்கு தனியாக வந்ததும் பாக்கியா எழிலிடம் என்ன எழில் எதுவும் மறந்து போயிட்டியா என்று கேட்க இல்லம்மா நான் வெளியே போயிருக்கும் போது அப்பா வந்தாரு அவரு இனியாவை காரில் கூட்டிட்டு போய் விடுறேன்னு சொன்னாரு. ஏற்கனவே அவர் டிப்ரஷன்ல இருந்தார்.

television baakiyalakshmi serial vijay tv

திரும்பவும் அவர் கூட வாக்குவாதம் பண்ணி அவரை டிஸ்டர்ப் பண்ண விரும்பல... இனியாவும் தாத்தாவை நினைச்சு அழுதுட்டே இருக்கா. அவர்கூட போனா கொஞ்சம் ரிலீஃபா இருப்பானு தான் அனுப்பினேன், தப்பா மா என்று கேட்க, பாக்யா சரி தான் என்று சொல்கிறார். அதற்கு செல்வி ஏற்கனவே கோபி சார் உன் மேல கோவமா இருந்தாரு. இப்ப நடந்த விஷயத்துக்கு இன்னும் உன் மேல கோபமா இருப்பாரு. இனியாவை கூட்டிட்டு போய் ஏதாவது பண்ணுனா என்ன பண்ணுவது என்று கேட்கிறார்.

அதற்கு பாக்கிய அவருக்கு என் மேல இருக்கிற கோபத்துக்கு என்னை கத்தியால குத்துவாரே தவிர பசங்களை என்னைக்குமே அப்படி பண்ண மாட்டாரு என்று பாக்கியா சொல்கிறார். மறுபக்கத்தில் இனியா காரில் அமைதியாக வர, கோபி என்னாச்சும்மா என்று கேட்க, அதற்கு இனியா தாத்தாவும் பாட்டியும் தான் என்னை காலேஜில் விட்டுட்டு கூட்டிட்டு வருவாங்க. இருவருக்குமே உடம்பு சரியில்லாமல் தான் இருக்கும். ஆனா அவங்க தான் என்னை விடுவாங்க.

television baakiyalakshmi serial vijay tv

இப்போ அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா வந்து என்ன டிராப் பண்ண மாட்டாங்களான்னு தோணுது என்று சொல்ல, அதற்கு கோபி ஆறுதல் சொல்கிறார். மறுபக்கத்தில் பாக்யா ராமமூர்த்தியின் பீரோவில் இருக்கும் துணிகளை செல்வியிடம் எடுத்துக்குறியா செல்வி? பாதிக்கு மேல புது துணி தான் இருக்கு என்று சொல்ல, எடுத்துக்கிறேன் அக்கா இதுல என்ன இருக்கு என்று சொல்கிறார்.

நீ எதுவும் தப்பா நினைக்கலயே என்று கேட்க, அதற்கு செல்வி அவர் என்னுடைய அப்பா மாதிரி அப்பாவோட துணியை எடுத்துட்டு போறதுக்கு நான் என்ன நினைப்பேன் என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி செல்வி எனக்கு அவரோட ஒரு செட் மட்டும் குடுமா அவருடைய ஞாபகமா வச்சிக்கிறேன் என்று வாங்கி வைத்துக் கொள்கிறார். பிறகு பீரோவில் இருந்த டைரி லெட்டர்கள் எல்லாம் கிடைக்கிறது.

television baakiyalakshmi serial vijay tv

அதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ராமமூர்த்தி லெட்டர் எழுதி வைத்திருப்பதை பார்க்கிறார். அதற்கு ஈஸ்வரி, கடவுள் கிட்ட போன பிறகு யாரும் எந்த வருத்தமும் வந்திட கூடாது என்று உயிலும் தனித்தனியாக லெட்டரும் எழுதி வச்சிருக்காரு என்று சொல்லிவிட்டு லெட்டரை எல்லார்கிட்டயும் கொடுத்துடு பாக்கியா என்று சொல்ல, செழியன் உயிலை படிக்கிற்ர். அதில் நிலத்தை பாக்கியா பெயரில் எழுதி வைத்திருக்கிறார்.

நகை மற்றும் பணம் பேரம் பேத்தி மற்றும் மருமகள்கள் என அனைவருக்கும் யார் யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டுமோ எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கிறார். அதோடு இனியாவின் திருமணத்திற்கும் தனியாக காசு சேர்த்து வைத்திருப்பதாகவும் சொல்ல எல்லோரும் அழுகின்றனர்.

television baakiyalakshmi serial vijay tv

பிறகு ஈஸ்வரிக்கு அவர் எழுதிய லெட்டரை படித்து பார்க்கிறார். அதில் நான் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கேன். ஈஸ்வரி நீ இதுக்கு மேல நம்ம குடும்பத்தை வழி நடத்து. நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும். எல்லாருடைய சந்தோசத்துக்கு நீ தான் காரணமா இருக்கணும். பாக்கியவை நல்லா பாத்துக்கோ, என்னை பற்றி கவலைப்படாத நீ எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும் என்று எழுதி இருப்பதை படித்து ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+