பாக்கியலட்சுமி: மீண்டும் பழைய கதை.. பட்டும் திருந்தாத பாக்யாவின் பிள்ளைகள்.. ஈஸ்வரி கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் 28ஆம் தேதிக்கான எபிசோடில் இனியா தான் டான்ஸ் ஆட வேண்டும் என்று பாக்கியா மறுப்பதால் கோபியோடு சேர்ந்து இருக்கிறார். அதுபோல கோபிக்கு ஆதரவாக செழியனும் ஈஸ்வரியை எதிர்த்து பேசுகிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் இனியா டான்ஸ் ஆட குடும்பத்தினர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். இருந்தாலும் மத்தவங்க ஆடுறதை நம்ம டிவில பார்க்கிற மாதிரி தானே என்று ஜெனி சொல்ல, மத்தவங்க ஆடும் போது நம்ம என்ன எல்லாம் பேசுறோம் அது மாதிரி தானே பேசுவாங்க என்று ஈஸ்வரி சொல்கிறார். உடனே பாக்கியா படிக்கிற வேலையை இப்போ பாரு.

இந்த நேரத்தில் டிவியில முகம் தெரிய ஆரம்பிச்சா படிப்பு மேல கவனம் இருக்காது. நான் அப்படி நிறைய பேரை பார்த்திருக்கிறேன். அதனால நீ படிப்பை முடிச்சுட்டு எங்க வேணா டான்ஸ் ஆடு என்று சொல்கிறார். ஈஸ்வரியும் பாக்கியாவும் இனியா டான்ஸ் ஆட விட முடியாது என்ற முடிவில் இருக்க, இனியா சோகமாக இருக்கிறார். உடனே கோபிக்கு போன் போட்டு நான் உங்களை பாக்கணும் டாடி என்று சொல்ல, கோபி வெளியே காத்துக்கொண்டிருக்கிறார்.
கோபி வந்ததும் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று இனியா சொன்னதும் கோபி வீட்டுக்கு வா போலாம் என்று ராதிகா வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். அப்போது இனியா முதலில் மறுத்தாலும் பிறகு போய்விடுகிறார். இனியாவை ராதிகா பார்த்ததும் உள்ளே கூப்பிட்டு உட்கார வைத்து என்ன விஷயம் என்று கேட்கிறார். அதற்கு இனியா நான் இங்க எல்லாம் தங்கிடமாட்டேன். டேடி கூப்பிட்டதால வந்தேன் உடனே சொல்லிட்டு போயிடுவேன் என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல நீயே இங்கு தங்கினாலும் எங்களுக்கு சந்தோசம் தான் என்று ராதிகா சொல்ல கோபி ஆமாம் என்று சொல்கிறார்.

பிறகு இனியா காலேஜில் நடந்த டான்ஸ் காம்பெடிஷன் பற்றியும் அதில் ஜெயித்த விஷயத்தையும் கோபியிடம் சொல்கிறார். கோபி சந்தோஷப்பட்டு சூப்பர்டா என்று பாராட்டுகிறார். அது மட்டும் இல்லாமல் இனி டிவியில் டெலிகாஸ்ட் ஆகும் இரண்டு மாதம் ஷோ நடக்கும் என்று சொல்ல, அதற்கு ராதிகா நிறைய பிராக்டிஸ் பண்ணனும்ல்ல என்று சொல்கிறார். அதற்கு இனியா ஆமாம் என்று சொல்ல, உடனே கோபி ரெண்டு மாசத்துக்கு படிப்பு என்ன ஆகிறது என்று கேட்க, கோபமான இனியா நீங்களும் பாட்டியும் அம்மா மாதிரியும் பேசாதீங்க டாடி என்று கோபப்பட்டு எழுந்து போக முயற்சி செய்கிறார்.

பாக்கியா சம்மதிக்கவில்லை என்றதும் உடனே இனியாவை நிறுத்தி வைத்து உனக்கு முழு சப்போர்ட் நான் பண்றேன் என்று கோபி சொல்ல இனியா சந்தோஷப்படுகிறார். மறுபக்கத்தில் பாக்கியா வீட்டில் இனியாவைதேடி வீட்டிற்குள் அலைகின்றனர். பிறகு எங்கும் இல்லாததால் அவர் இனியாவின் தோழிக்கு போன் பண்ண அங்கேயும் வரவில்லை என்று சொல்கின்றனர்.

அந்த நேரத்தில் கோபியுடன் இனியா பாக்யா வீட்டிற்கு வர ஏன் சொல்லாம போன என்று ஈஸ்வரி இனியாவை திட்டுகிறார். அதற்கு நீங்க சொன்னா நான் எங்க அப்பா கிட்ட பேசணும், நீங்க வெறுக்கும் போது நானும் வெறுக்கணுமா? என்று இனியா எதிர்த்து கேள்வி கேட்கிறார். இதனால் ஈஸ்வரி கோபி மீது கோபப்பட்டு சின்ன பொண்ணை எங்களுக்கு எதிரா திருப்பி இருக்கியா? என்று திட்ட,
அந்த நேரத்தில் செழியன் வந்து சும்மா அவரை திட்ட வேண்டாம் என்று கோபிக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார். இதனால் பாக்கியாவும், ஈஸ்வரியும் அதிர்ச்சி அடைகின்றனர். இதனால் ஈஸ்வரி ஒன்றும் பேசாமல் அமைதியாக ரூமுக்கு சென்று விடுகிறார். பாக்யா இனிமேல் அந்த ஆளோட கதை இந்த வீட்டுக்குள் வரக்கூடாது என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications