பாக்கியலட்சுமி: ராமமூர்த்தி கடைசியாக பேசியதை சொன்ன பாக்யா.. ராதிகாவின் மனமாற்றம்.. கதறி அழுத கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் நான்காம் தேதிக்கான எபிசோடில் ராமமூர்த்தியின் உடலை பார்த்து மொத்த குடும்பமும் அழுது கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா ராமமூர்த்தி கடைசியாக தன்னிடம் பேசிய விஷயத்தை பற்றி சொல்லி இருக்கிறார். அதோடு ராதிகா மனம்மாறி ஈஸ்வரிக்கு பணிவிடை செய்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் முழுக்க அழுகாச்சி தான் நடைபெற்றது. ராமமூர்த்தியின் உடலை பார்த்து எல்லோரும் அவர் பேசிய பழைய விஷயங்களை சொல்லி அழுது கொண்டிருக்கிறார்கள். அப்போது எழில், செழியன், கோபி என எல்லோரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் அழுது கொண்டிருக்கும் போது பழனிச்சாமி நல்லபடியா வாழ்ந்துட்டு சந்தோசமா போய் சேர்ந்திருக்கிறார்.

அதற்காக அவருக்கு செய்ய வேண்டிய கடைசி காரியங்களை நாமதான் செஞ்சாகணும். இப்படியே நின்னுட்டு இருந்தா சரியா வராது என்று இறுதி காரியத்திற்கு ஏற்பாடுகளை செய்கிறார். பிறகு ராமமூர்த்தியின் உடல் ஹாலில் வைக்கப்பட்டிருக்கிறது. அவரை சுற்றி எல்லோரும் இருந்து அழுது கொண்டிருக்கின்றனர். பாக்கியா கடைசியாக ராமமூர்த்தி தன்னிடம் பேசிய விஷயத்தை சொல்லி அழுகிறார்.
ஈஸ்வரி உங்க மாமாவுக்கு என்ன அவசரம் பாரு பாக்கியா இப்படி விட்டுட்டு போயிட்டாரு. கடைசியா ராத்திரி முழுக்க வீட்டை சுத்தி சுத்தி பார்த்துகிட்டே இருந்தாரு. நான் அவருக்கு என்னன்னு கேட்டு போது ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டாரு என்று சொல்ல, செல்வி நான் வீட்டுக்குப் போகும்போது என்னை நிற்க வைத்து பேசினாரு.. அவருக்கு நாம இறந்து போக போறோம் என்கிறது தெரிஞ்சிருக்கு.

அதனால் தான் எல்லாருக்கும் நல்ல வார்த்தை எல்லாம் சொன்னாரு என்று சொல்லிக் கொண்டிருக்க, இதை எல்லாம் கேட்டு கோபி சோகமாக நிற்கிறார். பிறகு அமிர்தா, இனியா, ஜெனி என எல்லோரும் அழுது கொண்டே இருக்கின்றனர். கோபி வாசலில் நின்று கொண்டிருக்கும் போது ராதிகா வந்து கோபியை தனியாக கூட்டிட்டு சென்று அடுத்து என்ன நடக்கணுமோ அதை பாருங்க இப்படியே வச்சுட்டே இருந்தா எல்லாரும் அழுதுட்டு இருப்பாங்க இறுதி சடங்கை பாருங்க என்று சொன்னதும் கோபி சரி என்று சொல்கிறார்.
பிறகு அமிர்தாவின் அம்மா அழுது கொண்டிருக்கிறார். அவர் அமிர்தாவை நீ போய் கொஞ்சம் உங்க அத்தைக்கு ஏதாவது குடிக்க கொண்டுட்டு வா என்று சொல்ல, அமிர்தா கிச்சனுக்கு போகிறார். அங்கு அதற்கு முன்பு ராதிகா காபி போட்டு எடுத்து வச்சி விடுகிறார். அவங்க ஏற்கனவே சுகர் பேசன்ட், ஜெனியும் ப்ரெக்னன்ட்டா இருக்கா இதை முதலில் கொடு என்று கொடுத்தனுப்ப அமிர்தா அதை கொண்டு போய் ஜெனி மற்றும் ஈஸ்வரி இடம் கொடுக்கிறார்.

ஈஸ்வரி அதை குடிக்க மறுக்கிறார். நான் செத்துப் போனால் கூட பரவாயில்லை என்று அழுது கொண்டிருக்க பழனிச்சாமி ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்கிறார். பிறகு பழனிச்சாமி கோபி மற்றும் செழியனிடம் இறுதி காரியத்துக்கு சொல்லிட்டீங்களா? என்று கேட்க செழியன் எனக்கு யாரையும் தெரியாதே என்று சொன்னதும் பழனிச்சாமி எனக்கு தெரிந்த ஆட்களை வச்சு சொல்றேன் என்று சொல்கிறார்.
அப்போது ஜெனியின் அப்பா ஜெனி அம்மாவை கூப்பிட்டு ஜெனி இப்போ கர்ப்பமாக இருக்கிறா... இந்த நேரத்தில் இப்படி அழுதுட்டே இருந்தா சரியா வராது என்று குழந்தை அழுதுட்டே இருக்கு நீ போய் பாரு என்று ஜெனியை அந்த இடத்தை விட்டு எழுப்பி போக வைக்கிறார். பிறகு கோபி வீட்டு வாசலில் பாடைக்கு பச்சை ஓலை ரெடி பண்ணி கொண்டிருப்பதை பார்த்து கோபி அழுது கொண்டே இருக்கிறார்.
அந்த நேரத்தில் கோபியின் நண்பர் வருகிறார். அவரை கூட்டி சென்று ராமமூர்த்தியின் உடலைக் காட்டி விட்டு பாருடா எங்க அப்பா தூங்கிகிட்டே இருக்கிற மாதிரிதான இருக்கு என்று அழுது கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா ராமமூர்த்தி கடைசியாக பேசியதை நினைத்து பார்க்கிறார். அப்போது நான் உனக்கு அப்பா ஸ்தானத்தில் எப்பவும் கூடவே இருப்பேன்.
ஒருவேளை நான் இல்லைன்னு நீ நினைத்து விடாதே என்று சொன்னதை நினைத்து பார்த்து எனக்கு எல்லா விஷயத்தையும் நீங்கதான மாமா கூடவே இருந்தீங்க இப்ப நீங்க போய்ட்டீங்களே என்று அழுது கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ராதிகாவின் அம்மா வீட்டிற்கு அழுது கொண்டே வருகிறார்.

தான் கொண்டு வந்த மாலையை ராமமூர்த்தி உடலுக்கு போட்டுவிட்டு இந்த வீட்டில் ராதிகாவை மருமகளாக ஏற்றுக் கொண்டது இவரு மட்டும்தான். நேற்று கூட ராதிகா போன் பண்ணும் போது இவரை பற்றி பேசினா ஆனா இவருக்கு இப்படி ஆயிடுச்சே... நல்ல மனுஷன் போயிட்டாரு என்று அழுது கொண்டே ஈஸ்வரியின் தோளில் கை வைக்க ஈஸ்வரி கையைத் தட்டி விடுகிறார்.
பிறகு ஜெனியிடம் நீ கர்ப்பமா இருக்கிறேன்னு சொன்னாங்க. இந்த நேரத்தில் இப்படி ஆயிடுச்சு என்று கேட்டதும் எல்லாரும் அதிர்ச்சியாக, ராதிகா வந்து தன்னுடைய அம்மாவை கூட்டிக்கொண்டு சென்று விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications