பாக்கியலட்சுமியில் ட்விஸ்ட்! காலில் விழுந்து கெஞ்சிய கோபி.. கதறி அழுத மயூ.. இனி நடக்க போவது இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மயூ கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ஷெரின் தாரா தன்னுடைய instagram பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் அதிகமான லைக்களை குவித்து வருகிறது. இதில் கோபி மயூவிடம் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுவது போன்று காட்சிகள் இருக்கிறது.

சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு இருக்கும் ரசிகர்களை விட மயூவுக்கு தான் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். பாக்கியா எல்லா இடத்திலும் அடுத்து என்ன செய்யலாம் என்று யாரிடம் ஆவது துணைக்கு போய் நிற்கிறார். கதாநாயகியாக இருந்தாலும் "நான் என்ன செய்யட்டும் அத்தை" என்று மாமியார் மாமனாரிடம் கேட்டுக் கொண்டிருப்பார். இல்லை என்றால் பழனிச்சாமி தான் அவருக்கு ஒவ்வொரு இடத்திலும் துணைக்கு வந்து நிற்கிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

ஆனால் இந்த முறை பாக்கியாவிற்கு பெரிய சப்போர்ட் செய்தது மயூ தான். ஈஸ்வரியை ஜெயிலில் இருந்து எடுக்க முடியுமா? முடியாதா? என்ற பயத்தில் மொத்த குடும்பமும் இருந்தபோது மயூ தான் ஈஸ்வரி பாட்டி மீது தப்பு இல்லை அவங்க அம்மாவ கீழே விழும்போது பிடிக்க தான் வந்தாங்க. அம்மா தான் பூச்ஜாடியில் மிதித்து கீழே விழுந்தாங்க என்று தைரியமாக பேசியிருந்தார். அதோடு பாக்கியாவுடன் சென்று கோர்ட்டில் நடந்ததை சாட்சியாக சொல்லி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

மயூவை வைத்து ராதிகா எழுப்பிய பிரச்சனை.. கோபி சொன்ன வார்த்தை.. கொந்தளித்த ஈஸ்வரி
இந்த நிலையில் ஷெரின் தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சிகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் கோபி இடம் மயூ ப்ளீஸ் டாடி நீங்க சண்டை போடாதீங்க எனக்கு பார்க்க பயமாயிருக்கு என்று பயந்தபடி அழுது கொண்டிருக்க, கோபி முட்டியிட்டு கைகளைப் பிடித்துக் கொண்டு, இல்லடா நான் சண்டை போட மாட்டேன். நான் யாரிடமும் சண்டை போட மாட்டேன்.

நீ தான் என்னுடைய தேவதை, குலசாமி.. நீ மட்டும் அன்னைக்கு உண்மையை சொல்லாமல் இருந்திருந்தால் எங்க அம்மா வெளியே வந்திருக்கவே மாட்டாங்க. என்ன நடந்திருக்கும் என்று எனக்கு சொல்ல தெரியல. அம்மாவை ஜெயிலிலிருந்து கொண்டு வருவதற்கு நீ சொன்ன அந்த வார்த்தை தான் காரணம். நீ தைரியமாக எடுத்த முடிவால்தான் இன்று நான் உயிரோடு இருக்கிறேன்.

Television Baakiyalakshmi Serial vijay TV

உன்னை நான் இனி எந்த சூழ்நிலையிலும் கஷ்டப்படுத்த மாட்டேன் என்று ஆறுதல் சொல்கிறார். இந்த காட்சி இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது இது இனி பாக்கியலட்சுமி சீரியலில் வரும் காட்சிகளா? அல்லது இந்த காட்சிகள் பாக்கியலட்சுமி சீரியலில் காட்டப்படாமல் கட் செய்து விட்டார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வில்லனாக இருந்தாலும் மயூ மற்றும் தன்னுடைய குழந்தைகளிடமும் நல்ல அப்பாவாக நடந்து கொள்கிறார். அதே நேரத்தில் மயூ ஏற்கனவே தன்னுடைய சொந்த அப்பா அம்மாவிடம் போட்ட சண்டைகளை பார்த்து பயந்து போய் இருந்து நிலையில் இப்போது கோபியும் ராதிகாவும் சண்டை போடுவதை பார்த்து பதட்டத்தில் இருக்கிறார்.

அதிலும் நிஜத்தில் பெற்றோர் குழந்தைகள் முன்பு சண்டை போடுவதால் குழந்தைகளின் மனநிலை எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதை மயூ கேரக்டரில் ஷெரின் தாரா அழகாக காட்டிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இன்று அவர் வெளியிட்ட வீடியோவில் அவர் கண்கலங்கி அழுவதை பார்த்து பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருவதையும் காண முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+