மயூவை வைத்து ராதிகா எழுப்பிய பிரச்சனை.. கோபி சொன்ன வார்த்தை.. கொந்தளித்த ஈஸ்வரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை இருபதாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஈஸ்வரி வீட்டிற்கு இரண்டாவது முறையாக சென்ற கோபி மீண்டும் அவமானப்பட்டு வருகிறார். அதே நேரத்தில் ராதிகா மயூவை வைத்து கோபியிடம் பிரச்சனை செய்ய மீண்டும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி பாக்யா வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் ராமமூர்த்தி நீ உள்ளே வராத.. வந்தா காலை வெட்டிடுவேன் என்று கோபப்படுகிறார். அதோடு ஈஸ்வரியும் மீண்டும் மீண்டும் நீ என் முன்னாடி வந்தா பழைய மாதிரி மனம் மாறுவதற்கு பழைய ஈஸ்வரி இல்லை. உன்னால் பட்ட அவமானம் போதும். உன்னுடைய புத்தி எல்லாம் எனக்கு தெரிஞ்சுடுச்சு. மீண்டும் நான் ஏமாற்றத்துக்கு தயாரா இல்லை.

வீட்டை விட்டு வெளியே போய் இரு.. என் மூஞ்சிலேயே முழிக்காத என்று திட்டி அனுப்புகிறார். ஆனாலும் கோபி வாசலில் நின்று கொண்டு அம்மா சாரிமா என்று கெஞ்சி கொண்டிருக்க கோவப்பட்ட ஈஸ்வரி வேகமாக வந்து கதவை மூடி கொள்கிறார். அதை பார்த்து பீல் பண்ணியபடி கோபி வீட்டை விட்டு கிளம்பி போகிறார். ஈஸ்வரி சொன்னதையெல்லாம் நினைத்து பார்த்து தெருவில் நின்று பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து ராமமூர்த்தி ஈஸ்வரியிடம் என்ன ஆச்சு இவ்வளவு கோவப்பட்டுட்ட நீ அமைதியா இரு என்று சமாதானப்படுத்த, இதற்கு மேல் நான் இனி ஏமாற மாட்டேன் நான் சொன்னது சொன்னதுதான் இனிமே அவன் என்னுடைய பிள்ளையும் இல்ல, நான் அவனுடைய அம்மாவும் இல்லை. எந்த ஜென்மத்திலும் அவன் முகத்தில் முழிக்கவே மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த கட்டத்தில் பாக்கியா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பாக்கியாவும் அமிர்தாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அமிர்தா எனக்கு பயமாயிருக்கு ஏற்கனவே புரொடியூசர் சொன்ன டைமுக்கு எழிலால் கதை சொல்ல போக முடியல, அதனால என்ன நடக்கும் என்று தெரியல என்று பயந்து கொண்டு இருக்க, பாக்கியா அப்படி எல்லாம் எதுவும் நடக்காது என்று சமாதானம் சொல்கிறார்.
அந்த நேரத்தில் வீட்டிற்கு வரும் எழில் சோகமாக டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க பாக்யாவும் அமிர்தாவும் புரொடியூசர் என்ன சொன்னாரு என்று கேட்க, அதற்கு எழில் அவர்தான் கதையே கேட்கலையே கேட்டாதான புடிச்சிருக்கா இல்லையா என்று சொல்ல முடியும் அவர் சொன்ன நேரத்திற்கு என்னால் போக முடியல அன்னைக்கு வீட்டிற்கு வந்து போலீஸ் பிரச்சனை செய்ததால் நான் அங்கு போகாதது பிரச்சனையாகிடுச்சு.
அவர் இந்த படத்தை பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாரு என்னுடைய வாழ்க்கை முடிஞ்சிடுச்சு என்று பீல் பண்ண பாக்கியா ஆறுதல் சொன்னாலும் கேட்காமல் கோபப்பட்டு போகிறார். அதைத் தொடர்ந்து இனியா காலேஜில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பிரிண்ட் இந்த வாரம் சனிக்கிழமை என் வீட்டில் பார்ட்டி ரெடி பண்ணி இருக்கிறேன் எல்லோரும் வரவேண்டும் என்று சொல்ல இனியா முதலில் நான் வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க மற்ற தோழிகளும் இனியா வரலைன்னா நாங்களும் வரல என்று சொல்லி இனியாவை சம்மதிக்க வைக்கின்றனர்.
அடுத்த கட்டத்தில் ராதிகாவும் மயூவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபியை எதிர்பார்த்து மயூ உட்கார்ந்திருக்க கோபி வீட்டிற்கு வந்து மயூவிடம் சாப்பிட்டாச்சா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது நீங்க வருவீங்களா இல்லையான்னு நான் பயந்துட்டே இருந்தேன் என்று சொல்ல, நீ இருக்கிற இடத்தில் நான் வராமல் எப்படி இருப்பேன் என்று மயூவுடன் கோபி பாசமாக பேச,

ராதிகா என் மேல உள்ள கோபத்தை எதுக்கு நீங்க மயூவிடம் காட்டுறீங்க உங்களுக்காக இவ்வளவு நேரமா காத்திருந்தா என்று சொல்ல, கோபி நான் யார் மீதும் கோபத்தை காட்டல என்று சொல்ல ராதிகா நீங்க ஆசைப்பட்ட மாதிரி எங்க அம்மா வீட்ட விட்டு போயிட்டாங்க. நீங்க உங்க அம்மா ஜெயிலுக்கு கோர்ட்டுக்கு போயிட்டாங்கன்னு வருத்தப்படுறீங்க மயூ கோர்ட்டுக்கு வந்தது உங்களுக்கு வருத்தமா இல்லையா என்று கேட்க இதில் வருத்தப்பட என்ன இருக்கு உண்மையை மயூ சொன்னதால் தானே எங்க அம்மா வெளியே வந்தாங்க என்று கோபி பதிலடி கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications