பாக்கியலட்சுமி சீரியலில் ஏன் இப்படி பண்ணுறாங்க? கொடுமையின் உச்சகட்டம்.. இதை மறந்துட்டாங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இறந்து போயிருந்த நிலையில் அது பற்றிய அழுகை காட்சிகளே தொடர்ந்து கொண்டிருப்பது அந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களை மன அழுத்தத்தில் தள்ளுவது போல இருக்கிறது. அதே நேரத்தில் எதார்த்தமாக காட்சிகளை வைக்கிறோம் என்று சில சொதப்பல்களும் செய்து இருக்கிறார்கள். அது பற்றி பார்க்கலாம்.

பொதுவாக சீரியல்கள் என்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் தான் பார்ப்பார்கள்‌ ஆனால் சில சமயங்களில் சில சீரியல்களை விருப்பம் இருக்கிறதோ இல்லையோ வீட்டில் இருக்கும் ஆண்களும் பார்க்க வேண்டிய நிலைமை இருக்கிறது. அதிலும் இரவு நேர சீரியல் சொல்லவே வேண்டாம். ஆண்கள் வீட்டில் இருந்து சாப்பிடும் நேரத்தில் அங்கு சண்டை காட்சிகளும், அழுகையும் தான் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது.

television baakiyalakshmi serial vijay tv

சமீபத்தில் கூட பாக்கியலட்சுமி சீரியலில் இரண்டு வாரங்களாக அழுகாட்சி காட்சிகளும் செண்டிமெண்ட் காட்சிகளும் தான் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ராமமூர்த்தி திடீரென இறந்து போவது போன்று காட்சிகள் வைத்திருக்கிறார்கள். அவர் இறப்பதற்கு முன்பே நான் இல்லை என்றாலும் இந்த வீட்டில் இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் என்று எல்லோருக்கும் மறைமுகமாக அட்வைஸ் செய்ய தொடங்கி விட்டார்.

இதனால் இவருடைய கதை முடிய போகிறதா? அவரை போட்டு தள்ளப் போகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதற்குப் பிறகு ராமமூர்த்தியின் இறுதி தருணம் என்று ப்ரோமோ வெளியானதும் பல ரசிகர்கள் பீல் பண்ணி இருந்தார்கள். இதை இப்படியே சில வாரங்களாக கொண்டு போய் விட வேண்டும் என்று சீரியல் தரப்பினர்கள் எடுத்த முடிவுதான் இப்போது ரசிகர்களை புலம்ப விட்டு இருக்கிறது.

ராமமூர்த்தி தான் இந்த சீரியலில் தூணாக இருந்தார். அவரை போட்டு தள்ளிவிட்டு அவருடைய காட்சிகளை எதார்த்தமாக கொண்டு போகிறோம் என்று அவர் இறந்தது, அதற்குப் பிறகு அவருடைய இறுதிக் காரியங்கள் செய்வது, கொள்ளி வைத்தது, கொள்ளி வைத்த சாம்பலை கொண்டு கரைப்பது என்று இரண்டு வாரங்களாக இழுத்து விட்டார்கள். ஆனாலும் இன்னும் இவர்கள் இதை விடுவது போல தெரியவில்லை.

television baakiyalakshmi serial vijay tv

கதைப்படி பிறந்தநாள் கொண்டாடிய அன்று இரவு ராமமூர்த்தி நெஞ்சுவலியில் இறந்திருக்கிறார். அவர் தூங்குவதற்கு முன்பு தனக்கு பதட்டமாக இருப்பதாகவும் நெஞ்சுவலி இருப்பதாகவும் வீட்டிற்குள் சுற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஈஸ்வரி அவருக்கு துணையாக எழுந்து வந்தார் பிறகு இருவரும் சேர்ந்து தூங்கி இருந்தார்கள். ஆனால் இப்போது இராமமூர்த்தி இறந்த பிறகு அவர் பக்கம் பக்கமாக எல்லோருக்கும் கடிதம் எழுதி வைத்திருப்பதாக காட்டுகிறார்கள்.

இது பெரிய சொதப்பலாக இருக்கிறது. அதுபோல போன வாரம் முழுக்க ராமமூர்த்திக்கு கொள்ளி வைப்பது பற்றி சண்டை போட்டார்கள். இந்த வாரத்தில் அவர் எழுதிய கடிதத்தை வைத்து அழுது கொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் சீரியல் ரசிகர்களை அழ வைத்து அவர்களுடைய வீட்டிலும் சாவு மியூசிக் போட்டு சோக கீதத்தை பாட வைக்க போகிறார்கள் என்று புரியவில்லை.

வேலைக்கு போய்விட்டு வீட்டிற்கு கணவர்மார்கள் வரும்போது தினமும் இரண்டு வாரங்களாக சோக மியூசிக் மற்றும் ஒப்பாரி தான் பல வீடுகளில் ஒலிக்கிறது. ஏற்கனவே விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் அம்மா கேரக்டர் இப்படித்தான் திடீரென இறந்து போவது போன்ற காட்சிகள் வைத்திருந்தனர். அது போல இப்போது பாக்கியலட்சுமி சீரியலிலும் ராமமூர்த்தி இறந்துவிட்டார்.

ராமமூர்த்தி இறப்பிற்கு பிறகு அடுத்த கட்டம் என்ன நடக்கும் என்பதை காட்டாமல் இவர்கள் அழுது கொண்டே இருக்கிறார்கள். அடுத்த வாரத்திலாவது கதையை மாற்றினால் நன்றாக இருக்கும். இவர்கள் டிஆர்பி வரவேண்டும் என்று தொடர்ந்து சோக கீதத்தை ஓடவிட்டால் வரும் டிஆர்பியும் குறைந்து விடும். இனியாவது சீரியலில் டிராக்கை கொஞ்சம் வேகமாக மாற்றினால் நன்றாக இருக்கும்.

television baakiyalakshmi serial vijay tv

ஏற்கனவே இதுபோலத்தான் சில மாதங்களுக்கு முன்பு இறந்து போன அமிர்தாவின் கணவர் வந்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தார். இப்போது ராமமூர்த்தியின் இறப்பை சவ்வாக இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதை மூடிவிட்டு புது பயணத்தை தொடங்குங்கள் என்பது தான் எல்லோருடைய விருப்பம்.

பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தியின் இறப்பை வைத்து இரண்டு வாரங்களாக ஓட்டிக் கொண்டிருக்கிறார்களே இது பற்றி உங்க கருத்து என்ன? இனி இந்த சீரியல் முடிவுக்கு வந்தால் நன்றாக இருக்குமா? அல்லது கதையை வேறு விதமாக மாற்றினால் நன்றாக இருக்குமா? கருத்தை தட்டி விடுங்க பாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+