இனி எல்லோரும் ஒரே வீட்டில்.. பாக்கியா முடிவு..? இனி நடக்கப் போவது பற்றி கோபி வெளியிட்ட வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த சீரியலில் இனி என்ன நடக்கப் போகிறது என கோபி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

பாக்யா மட்டுமல்லாமல் ராதிகாவோடு ஒரே வீட்டில் இனி அடுத்து பல பிரச்சனைகளை பல மாதங்களாக சந்திக்க போகிறார்களாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே கோபி குடித்துவிட்டு தெருவில் விழுந்து கிடக்க, அவரை பாக்கியாவும் எழிலும் வீட்டில் கொண்டு விட்டனர். அதனால் கோபமான ராதிகா வீட்டை விட்டு கிளம்ப அதற்கு கோபி இனி நான் குடிக்க மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் கோபி குடித்துவிட்டு வந்ததால் அப்போது செழியன் அவரைப் பார்த்து வண்டி ஓட்ட முடியாமல் இருந்த கோபியை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். இனி கோபி இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று ஈஸ்வரி ஒரு பக்கம் பிரச்சனை செய்து கொண்டிருக்க, கோபியை நீ காதலித்து திருமணம் செய்து இருக்கிறா, அதனால் கோபி இருக்கும் இடத்தில் தான் நீ இருக்க வேண்டும் என்று ராதிகாவிடம் அவருடைய அம்மா கூறுகின்றார்.
ஏற்கனவே இன்றைய எபிசோட்டில் கோபி இங்கே தான் இருப்பார் என்று ஈஸ்வரி சொன்னதும் அப்ப நான் என்ன முடிவு செய்ய வேண்டும் என்று பாக்கியா கேள்வி எழுப்பி இருக்கும் நிலையில் இன்றைக்கான ப்ரோமோவில் ராதிகாவும் கோபியின் வீட்டிற்கே பேக் ஓடு கிளம்பி வருகிறார். இந்த நிலையில் கோபியாக நடிக்கும் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நீங்க ப்ரோமோவில் பார்த்து இருப்பீங்க, இப்போ ராதிகாவும் வீட்டுக்கு வந்தாச்சு. இனி எல்லாரும் ஒரு வீட்டில் தான். ஒரு சில மாதங்கள் இருக்கப் போகிறோம். இங்கே பல பிரச்சனைகள் நடக்கப்போகிறது. இனி அம்மாவிடமும் அடி வாங்க போகிறேன், நான் ஒரு பக்கம் எழிலிடமும் அடி வாங்க போகிறேன், இன்னொரு பக்கம் ராதிகாவும் என்னை அடித்து பிரச்சனை செய்ய இருக்கிறார். ஆனால் பாக்கியா ரொம்ப நல்லதா அடிக்க மாட்டாள் என்று கூறுகிறார்.
இனி கோபிக்கு நிலைமை தான் பரிதாபமாக மாறப்போகிறது. ஆனால் பாக்கியா ஒருவேளை பாயாசத்தில் விஷத்தை வச்சுருவாளோ.? என்று பயந்தபடியே கோபி பேசி, இனி நடப்பதற்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று கூறி இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications